மண்ணடி காகா


ஷார்ஜாவில் பேரீட்சை திருவிழா by muduvaihidayath
மே16, 2009, 1:57 பிற்பகல்
Filed under: Uncategorized | குறிச்சொற்கள்: , , ,

ஷார்ஜாவில் பேரீட்சை திருவிழா

ஐக்கிய அரபு அமீரக நகரான ஷார்ஜா நகராட்சியின் சார்பில் பேரீட்சைத் திருவிழா மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பேரீட்சை விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம் என ஷார்ஜா நகராட்சி அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மே 15 ல் துவங்கும் இவ்விழா ரமலான் மாதம் வரை நடைபெறும். பேரிட்சம் பழம் ரமலான் மாத்த்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நபி பெருமானார் ( ஸல் ) அவர்களது வழிமுறையினைப் பின்பற்றி இஸ்லாமியர்கள் நோன்பினை பேரிட்சையை வைத்து நிறைவு செய்கின்றனர். இதற்குக் காரணம் பேரீட்சை அதிக சக்தியைக் கொடுக்க்க்கூடியது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட இவ்விழா விவசாயிகள் பேரிட்சையை சந்தைப்படுத்துவதற்குரிய தளமாக பயன்படுத்தப்பட்ட்து. பொதுமக்களது ஆர்வத்தின் காரணமாக இவ்விழாவை வருடந்தோறும் ஒரு பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்ட்து.

அமீரகத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பேரிட்சை வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான பர்ஹி, களாஸ், லூலூ, கிஸ்தவி, கினைஸி, நாகல் உள்ளிட்டவையாகும்.

த‌க‌வ‌ல் உத‌வி : முஸ்லிம் செய்தி நிறுவ‌ன‌ம் ( எம்.என்.ஏ. )

முதுவை ஹிதாயத்

கருத்துத் தெரிவிக்கவும் இது வரை
மறுமொழியவும்



மறுமொழி இடுக

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s



Follow

Get every new post delivered to your Inbox.

Join 761 other followers