மண்ணடி காகா


ச்: முஸ்லிம் அமைப்புகள் by ஆதம் ஆரிபின்
செப்டம்பர்30, 2010, 10:36 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ,

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது!


இது இறுதித் தீர்ப்பு அல்ல… தமுமுக…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

1949 முதல் எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் தொடர்பான வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் முதல் நிலை தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பில் அந்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி இரண்டு பகுதிகளில் ஒன்றை கோயிலுக்கும், இன்னொன்றை நிர்மோஹி அகாரா அறக்கட்டளைக்கும் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர், பள்ளிவாசலைக் கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாபர் மஸ்ஜித் நிலம் எங்களுக்கு சொந்தமானது என்ற சுன்னத் ஜமாத் வக்ஃபு வாரியத்தின் மனு, மூன்று நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் சில மூத்த வழக்குரைஞர்கள் இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறியது போல் சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகாமல் பஞ்சாயத்து செய்யும் முறையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டிருக்கிறார்கள்.

1949க்குப் பிறகு முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்திற்கு அருகே நெருங்கவே முடியாது என்ற நிலை இருந்தது. இப்போது அதில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளதி-ருந்து அந்த இடம் முஸ்-ம்களுக்கும் சொந்தமானது என்று தெளிவாகிறது.

இதுவே நீதியின் முதல் படிதான். எனவே நாங்கள் ஏற்கனவே கூறியபடி இப்போதைக்கு இத்தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்ற உ.பி. வக்ஃபு வாரியத்தின் முடிவை வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய மக்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைபெற அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது! – பி.ஜே யின் கண்டனம்.!

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இன்று வெளியானது. நீதி செத்து போய் விட்டது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்று  பி.ஜே. தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அமைதிக் காக்கவேன்டும், இந்திய தேசிய லீக்.!

உத்திரபிரதேச சுன்னி மத்திய வக்ப் வாரியத்திற்கும் , சங்க பரிவார்
அமைப்புகளுக்கும் இடையே 61 ஆண்டுகளாக தேவையற்று நீடித்த பாபரி

மசூதியின் வளாக நிலா உரிமை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது .எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் நன்றி கடன் பட்டவர்களாக இருக்கின்றோம்

இந்த தீர்ப்பு உத்திரபிரதேச சுன்னி மத்திய வகப் வாரியம் சாதகமாக இல்லாமல்

அமைந்ததால் இவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில்

மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது எனவே இந்திய தேசிய லீக் (indian nationl league ) தமிழ் நாடு கிளை இஸ்லாமிய சகோதர்களுக்கும் மற்றும் இந்து சமுதாயத்தை சார்ந்த அன்பு சகோதர்களுக்கும் அன்புடனும் பண்புடனும் அரவணைத்து வேண்டுவது யாதெனில் நமது இந்தியாவின் மேம்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை எதிர்கொண்டு எவ்வித கசப்பு மனப்பான்மையும் கொள்ளாமல் , ஒருவருக்கொருவர் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடாமல்

சமுகத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் அமைதி காத்து சந்தியும் சமாதானமும் என்னென்றும் நிலைத்திட அன்புடனும் சகோதர பாசத்துடனும்

செயல்படவேண்டும்

எல்லாம் வல்ல இறைவன் நம் இரு சமுகதினர்க்கும் பொறுமை எனும்

சக்தியை மென்மேலும் வளம் பெற செய்வானாக.

நீதி செத்துப் போனது- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.

எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.

இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

இப்படிக்கு
ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்

நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை : சுன்னி வக்ப் போர்டு…!

லக்னோ,செப்.30: அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் சபார்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்று பிரிவினர்களுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.

இன்று மதியம் 4.30 மணியளவில் நீதிபதிகளான எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், தரம்வீர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தேசமே உற்றுநோக்கியிருந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் ஹிந்து மகாசபைக்கும், அருகிலிலுள்ள இடம் முஸ்லிம்களுக்கும், மீதமுள்ள நிலத்தை நிம்ரோஹி அகாராவுக்கும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சுன்னி வக்ப் போர்டு தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றும் உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளது .

தீர்ப்பில் சர்ச்சைக்குரிய பகுதி ராமர் பிறந்த இடம் என்றும் மஸ்ஜிதின் மையப்பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை இந்து அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .

மொகாலாய மன்னர் பாபரின் கவர்னர் ஜெனரலான மீர்பாஹிதான் 1528 இல் பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். ஆனால், 325 வருடங்களுக்கு பிறகு 1853 ஆம் ஆண்டில் ராமர்கோயிலை இடித்துவிட்டு பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக நிம்ரோஹி என்ற ஹிந்துப் பிரிவு பாப்ரி மஸ்ஜித் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி முதன் முதலாக களமிறங்கியது.

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை..!

புது டெல்லி செப்டம்பர் 30:பாபர் மஸ்ஜித் நில உரிமை கோரும் வழக்கு தொடர்பான அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னோ பெஞ்ச் கிளை அளித்த தீர்ப்பின் முழு விவரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை. எனினும் மூன்று நீதியரசர்களிடையே வழக்கு தொடர்பாக வெவ்வேறு விதமான பார்வைகள் உள்ளது என்பது மட்டும் தெரியவருகிறது.

நீதிமன்ற உத்தரவின் முக்கிய நோக்கம் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பகுதியாக பிரித்து இரண்டு பகுதியை இந்துக்களுக்கும் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பங்கிட்டுக்கொடுப்பது .

மேலும் சிலை வைக்கப்பட்ட பகுதியான மஸ்ஜிதின் மையப்பகுதி இந்துக்களுக்கு கொடுக்கவேண்டும் என்றும் தெரியவருகிறது .

இது ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாததால் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.

இந்த தீர்ப்பு முழுக்க முழுக்க மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பே யொழிய சாட்சியங்கள் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரியவில்லை .

எந்த ஒரு மனுதாரரும் நிலத்தை தங்களுக்கிடையே பங்கிட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கவில்லை.

மேலும் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாக ஏற்றுக்கொண்டால் பல வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் மத சின்னங்கள் கட்டிடங்கள் ஆகியவற்றின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும் .

வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் கூறியது போல உயர்நீதி மன்ற தீர்ப்பு இறுதி தீர்வல்ல எனவே உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். உ பி சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாபர் மஸ்ஜித் நிலத்தை மீட்க இந்திய முஸ்லிம்கள் சட்டரீதியாகவும் ஜன நாயக வழிமுறைகளில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வார்கள் .

அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவும் பல்வேறு சமூகத்திற்கிடையேயான நல்லுறவுகளை மேம்படுத்தவும் வேண்டும் என அனைத்து தரப்பு மக்களையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

நன்றி : லால்பேட்டை . காம்



கட்டப் பஞ்சாயத்து – இந்தியாவின் முன்னணி ச ட்ட நிபுணர்கள் கருத்து by ஆதம் ஆரிபின்
செப்டம்பர்30, 2010, 4:43 பிற்பகல்
Filed under: Abu Adhil

கட்டப் பஞ்சாயத்து – இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து

indian-security-forces-babr.jpg

உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.

இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.

சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

- தமுமுக இணையதளம்



அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு by ஆதம் ஆரிபின்
செப்டம்பர்30, 2010, 3:12 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , ,

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து

ராமர் கோவில் கமிட்டி,

பாபர் மசூதி கமிட்டி,

அகராவிடம் வழங்க உத்தரவு

லக்னெள: அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு இடத்தை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும், மற்றும் இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும்,

இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்ப்பை வழங்கினர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து கோவில் கட்டிக் கொள்ள இந்து அமைப்பிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் மற்றும் இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை நீதிபதிகளும் ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டனர்.

இதன் மூலம் பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அந்த இடத்திலிருந்து ராமர் சிலை அகற்றக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், (இந்த நிலத்துக்கு உரிமை கோரிய இந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை அமைத்து இந்த நிலத்தைப் பெற்று கோவில் கட்டிக் கொள்ளலாம்)

மீதமுள்ள இடத்தை அங்கு ஏற்கனவே சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும், பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த இடத்துக்கு உரிமை கோரி ராம ஜென்மபூமி நியாஸ், நிமோலி அகரா ஆகியவை 1950களில் வழக்குத் தொடர்ந்தன. 1961ம் ஆண்டில் சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் ஆகியவை வழக்குத் தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பையொட்டி நாடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி : தட்ஸ்தமிழ்.காம்



இன்று 30-09-2010 பாபரி மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு வெளிவரும் நிலையில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நாகை மாவட்டம் – தோப்புத்துறை – புகைப் படக்காட்சிகள் by hungryuae

பாபரி மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு வெளிவரும் நிலையில்

போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள

நாகை மாவட்டம் -  தோப்புத்துறை – புகைப்படக்காட்சிகள்

( ஆறுமுகச்சந்தி )




பாபரி வழக்கில் 30ம் தேதி மாலை 3.30க்கு தீர்ப்பு by ஆதம் ஆரிபின்
செப்டம்பர்28, 2010, 3:08 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , , , , , , , ,

பாபரி வழக்கில் 30ம் தேதி

மாலை 3.30க்கு தீர்ப்பு

பாபரி மஸ்ஜித் வழக்கில் வரும் செப்டம்பர் 30ம் தேதி மாலை 3.30 மணிக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்கும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாபரி மஸ்ஜித் வழக்கில் கடந்த செப்டம்பர் 24 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு முதலில் அறிவித்திருந்தது. தீர்ப்ப வழங்குவதை ஒத்தி வைத்து சமாதானத்திற்கான வழியை காண வேண்டுமென ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் தொடுக்க வழக்கையும் அது நிராகரித்தது. ஆனால் திரபாதி உச்சநீதிமனற்த்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையில் நீதிபதிகள் கே.எஸ். ராதகிருஷ்ணன் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் இருத்தரப்பினர் இடையே சமரசமாக பேசி இப்பிரச்னையை முடிவுக் கொண்டு வரவேண்டும் என்று மனு செய்துள்ள திரிபாதி என்பவரின் சார்பாக வழக்குறைஞர் முக்குல் ரஸ்தோகி தனது வாதத்தை எடுத்து வைத்தார். இதற்கு பிறகு சுன்னத்தி வக்ப் வாரியம் சார்பாக மூத்த வழக்குறைஞர் ஏ. சௌத்திரி மற்றும் ஹிந்து தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களை நீதிபதிகள் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் இந்த பிரச்னைக்கு நீதிமன்றத் தீர்ப்பு தான் வழி என்றும் தீர்ப்பை ஒத்தி வைக்க கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தீர்ப்பை ஒத்திவைத்தால் நாட்டில் நீதிமன்றங்கள் ஒரு பிணை கோரும் வழக்கிலும் தீர்ர்பு வழங்க இயாலது போய்விடும் என்று கூறினார்கள். பிறகு மத்திய அரசு சார்பாக தலைமை வழக்குறைஞர் குலாம் வாஹனவதி இருத்தரப்பும் சமசத்திற்கு தயார் என்றால் மத்திய அரசு அதற்கு உதவிடும் என்றும் இதற்கு இருத்தரப்பினரும் உடன்படிவில்லையெனில் தீர்ப்பு வழங்குவது தான் சரி என்றும் தனது வாதத்தை எடுத்துரைத்தார். இதன் பிறகு நீதிபதிகள் உணவு இடைவேளைக்கு பிறகு பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வழங்க விதித்திருந்த தடையை நீக்குவதாக ஒரு வரியில் தீர்ப்பு வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து பாபரி வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்க இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வரும் வியாழன் மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று இப்போது தெரிய வருகின்றது. இந்த தீர்ப்பின் நகல் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளத்திலும் அன்று வெளியிடப்படும் என்று தெரிகின்றது. அன்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வளாகத்தில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பாரகள்.

செய்தி : TMMK INFO



by ஆதம் ஆரிபின்
செப்டம்பர்28, 2010, 2:30 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , , , ,

அமெரிக்காவில் வருடந்தோறும்

20000 பேர் இஸ்லாத்தை தழுவி வருவதாக பிரஸ் டிவி தகவல்

இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் மும்முரமாக நடக்கும் வேளையிலும் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.வருடந்தோறும் 20000 பேர் இஸ்லாத்தை தழுவி வருவதாக பிரஸ் டிவி கூறுகிறது.

மால்கம் எக்ஸ் எழுதிய புத்தகங்கள் தன்னை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்ததாக சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட உமர் அப்துல் வஹாப் கூறுகிறார். தற்போது இவர் வெர்ஜீனியாவில் தாருல் ஹிஜ்ரா இஸ்லாமிய மையத்தில் பாடம் நடத்துகிறார். தான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தன்னிடம் ஏற்பட்ட மாற்றம் தனது பெற்றோர்களையும் ஈர்த்ததாக கூறுகிறார் அப்துல் வஹ்ஹாப்.

செப்.11 தாக்குதல் நினைவு தினத்தையொட்டி ஃப்ளோரிடா சர்ச்சின் பாஸ்டர் புனித திருக்குர்ஆனை எரிப்பதற்கு விடுத்த அழைப்பைத் தொடர்ந்து அதிகம் பேரை திருக்குர்ஆனின் படிப்பதற்கு தூண்டியதாக தாருல் ஹிஜ்ரா இஸ்லாமிய மையத்தின் இயக்குநர் இமாம் ஜவ்ஹரி அப்துல் மாலிக் கூறுகிறார்.

நன்றி : Koothanallur Muslims



கஃபீல் முறைமையை கைவிடுகிறது குவைத் by ஆதம் ஆரிபின்
செப்டம்பர்27, 2010, 9:12 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , , , , , , ,

கஃபீல் முறைமையை கைவிடுகிறது குவைத்

வெளிநாட்டுப் பணியாளர்களை மேலாதிக்கம் செய்யும் காப்பாளர் உரிமம்(Sponsorship-kafeel system) முறைமையை கைவிட குவைத் அரசு முன்வந்துள்ளது. இது அந்நாட்டில் பணிபுரியும் 2.3 மில்லியன் வெளிநாட்டுக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. இச்செய்தியை குவைத்தின் அல்-ராய் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்பான்சர் ஸிஸ்ட்டம்(கஃபாலத்) என்று அழைக்கப்படும் முறைமைப் படி, குவைத்தில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டவர்களும், குவைத் குடிமகன்களின் – பணிமனை(அ) தொழில் உரிமையாளர்தம்- அனுமதியின் கீழ் அந்நாட்டில் வாழவேண்டியிருந்தது. இப்போது இந்த முறைமை கைவிடப்படுவதன் மூலம் வெளிநாட்டவர் யாரும், தாம் விரும்பும் பணியில் சேருவதற்கும், வணிக நடவடிக்கைகளுக்கு இனியொரு மண்ணின் மைந்தரைச் சாராதிருக்கவும் வழியேற்பட்டுள்ளது.

கஃபாலத் எனப்படும் மேலாதிக்க உரிமம் முறைமை மனித உரிமை அமைப்புகளின் கடும்கண்டனத்துக்கு ஆளாகி வந்ததும் குறிக்கத்தக்கது. இப்போதும் வளைகுடா நாடுகளில் பஹ்ரைனை அடுத்து இரண்டாவது நாடாக குவைத்தே இந்த கஃபாலத் கைவிடலை அறிவித்துள்ளது. 45ஆண்டுகளாக இருந்துவந்த குவைத் பணியாளர் நலச்சட்டம் நிறைய விமர்சனங்களுக்கு ஆட்பட்டதால் கடந்த ஆண்டு டிசம்பரில் பணியாளர் நலனை அதிகம் பேணும் வகையில் திருத்தப்பட்டிருந்தது. அதன்படி, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த வெளிநாட்டவர் வேறு பணிக்கு மேலாதிக்க உரிமத்தார் அனுமதியின்றியே மாறலாம் என்று விதி தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கஃபாலத் முறைமை முற்றிலுமாகத் தளர்த்தப்பட்டிருப்பதாக நேற்று அறிவித்துள்ள குவைத்தின் பணியாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் முஹம்மத் அல் அஃபாஸி, வெளிநாட்டுப் பணியாளர் நலவாரியம் என்கிற பொதுவான அமைப்பு நிறுவப்பட்டு எதிர்வரும் ஃபிப்ரவரி முதல் செயற்படத் தொடங்கும் என்று கூறினார்.

குவைத் விடுவிக்கப்பட்டதன் வருடாந்திரக் கொண்டாட்டத்தினையொட்டி,வெளிநாட்டுப் பணியாளார்களுக்கு இது குவைத் அரசு அளிக்கும் பரிசு என்றார் அஃபாஸி.

நன்றி : இந்நேரம்.காம்



கனனி கற்றுத் தரும் இஸ்லாம் by ஆதம் ஆரிபின்

கனனி கற்றுத் தரும் இஸ்லாம்


கம்பியூட்டர் இன்று மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது எனலாம். அந்தளவிற்கு மனித வாழ்வின் பெரும் பகுதிகளை அது தன்னகத்தே ஆக்கிக் கொண்டுள்ளது. தொழில்த்துறை, கல்வித் துறை தகவல்த்துறை… என எல்லாத் துறைகளும் இனி கனணி இல்லையேல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் என்பது கண்கூடு. அதிலும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனணியின் உதவி அளப்பொரியதாகும். ஒருவர் ‘யுரவழ உயன’ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கட்டிட அமைவு முறையைக் கனணியில் வரைகிறார் ஆனால் அவர் ஒரு சாதாரண படத்தைக் கூட கையால் வரைய முடியாதவராக இருப்பார். ஆக தேர்ச்சியில்லாத துறைகளிலும் மிகத்தேர்ச்சியாக தொழில் புரிய வைத்ததும் வேலை வாய்ப்பின்மை என்றகுறையை பெருவாரிய தீர்த்துவைத்ததும் கனணிதான்.

தகவல் பரிமாற்றத் துறையில் கனணியின் பங்களிப்பு இதைவிடப் பன்மடங்கானது. இன்டெனெட் இணைப் பில்லாத நிலையிலும் தகவல் பரிமாற்றத்தில் கனணியின் பங்களிப்பைமறுக்கக்கூடியது. பல இடங்களுக்குப் போய் பல லட்சம் செலவளித்து செய்யவேண்டிய எத்தனையோ தகவல்களை ஒரு சில ரூபாய்களில் வீடியோக்களாக ஓடியோக்களாக படங்களை எழுத்துக்களாக பெற்றுக்கொள்ள முடிகிறது.
ஆனாலும், எவ்வளவுதான் நலவுகள் இருந்தாலும் மனிதகுலத்திற்கே எதிராக செயல்படும் ஷைத்தான்களால் இன்று கனணிகள் முழுவதும் ஆபாசங்களே நிறைந்து வழிகின்றன. எங்குபார்த்தாலும் சினிமாக்கள் அடைக்கப்பட்ட ஊனு க்கள், நீலப்படங்கள் அடங்கிய பென் ட்ரைவர்கள், ஹாட்டிஸ்க்கள், ஸிப் செய்யப்பட்ட ஆபாசமான தகவல்கள் இந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் “பள்ளிக்கூடம்” படம் கட்டாயம் ஒவ்வொருவரும் பார்த்தேயாக வேண்டும் என சிலர் இஸ்லாமிய(?) சஞ்சிகைகள். கெமராபோன்கள் மூலம் பிடிக்கப்பட்ட மற்றவர்கள் தனிப்பட்ட விஷயங்களை தேக்கும் ஓர் அறையாக இன்றி கனணி மாறிவிட்டது. கனணி மூலம் எவ்வாறெல்லாம் சிறிய குழந்தைகள் முதல் வயதுபோன முதியவர்கள் வரை படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரை என்ன என்ன முறைகளி லௌ;ளாம் கெட்டுப்போகிறார்கள் என்பதை விபரிக்கப்போனால் இந்த இதழ் எமக்கு இடந்தராது. இந்தக் கனணியில் இஸ்லாத்தைக் கற்க கற்பிக்க எவ்வளவு வழிகளை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கான் என்பதை விளங்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
மார்க்கத்தை கற்றுக்கொள்ள கொடுக்க இன்று உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்கள் களஞ்சியங்கள் ஒரு சிலதான் இருந்தாலும் அது பற்றிக்கூட அறிவில்லாதவர்களே அதிகம் காணப்படுவதால் அவைகள் பற்றிய சிறு அறிமுகத்தைக் கொடுப்பது சாலச்சிறந்தது என நினைக்கிறேன்.
01) யுசயடிiஉ ளுஉhழழட ளுழகவறயசந
இது பிள்ளைகளுக்கு அரபு மொழியையும் குர்ஆன் ஓதுதலையும் இலகுவாக கற்பித்துக்கொடுக்கும் ஒரு மென்பொருளாகும். உதாரணமாகச் சொல்வதென்றால் “அலிப்” என்ற அரபு எழுத்தை அழுத்தினால் அதனை வரைந்தும் உச்சரித்துங்காட்டும். எண்களை அரபு வடிவத்தில் வரைந்தும் உச்சரித்துக்காட்டும். ஒரு பொருளுக்குரிய அல்லது மிருகத்துக்குரிய உருவத்தை அழுத்தினால் அதன் வடிவம் அசைந்து பெயரை உச்சரிக்கும் மிருகம் என்றால் அதன் சத்தத்துடன் பெயரை உச்சரிக்கும். இதுபோன்ற எண்ணற்ற பலவிதமான நவீன கற்பித்தல் முறைகளை உள்ளடக்கிய மிகச் சிறந்ததொரு மென்பொருள் அரபு நாடுகளிலே உள்ள உறவினர்களிடம் நாம் மேலே குறிப்பிட்ட பெயரைக்கொடுத்து வாங்கச் சொல்லுங்கள் அல்லது பின்வரும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முழுமையான பிரயோஜனத்தைப் பெற பணஞ்செலுத்தி பதிவிறக்கம் செய்வதே மிகச்சிறந்தது.

02) மின்னணு நூலகம் 4.0.
தமிழில் வந்திருக்கக் கூடிய மிகச்சிறந்த கனணி இஸ்லாமியக் களஞ்சியம் இதுவெனலாம். இது மக்கள் மத்தியில் “மின்னணு நூலகம்” என்ற பெயரில் மிகப்பிரபல்யமாகும். பல வெளியீடுகளைக் கண்ட இந்தக் கனணிக் களஞ்சியம் இப்பொழுது 4.0 வெளயீடாக வந்துள்ளது. இதன் உள்ளடக்கத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதெனில் பல பிரபல்யமான தமிழ் இணையத்தளங்களின் தொடுப்பே இந்தக் களஞ்சியம்.

01) இலக்கவாரியாகத் தேடிக்கொள்ள முடியுமான வசதியுள்ள அல்குர்ஆன்  மொழிபெயர்ப்பு.
02) அல்குர்ஆனிற்கான முழுமையான தமிழ் தப்ஸீர் தொடுப்பு.
03) அல்குர்ஆன் ஸ{ரா சம்பந்தப்பட்ட பலவிதமான விளக்க நூல்கள்.
04) புகாரி, புலூகுல் மராம், ரியாலுஸ் ஸாலிஹீன், நவவி இமாமின் 40 நபிமொழித் தொகுப்புக்கள், முவத்தா மாலிக் இன்னும் இதுபோன்ற ஏராளமான ஹதீஸ் நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புக்கள்.
05) தமிழில் வெளிவந்த நூற்றுக்கணக்கான நூற்கள்.
06) ஸ{தைஸ், ஹ{தைபி, ஷ{ரைம், அப்துல் பாஸித் போன்ற பல காரீக்களின்  கிராஅத்கள்.
07) தமிழில் வெளிவந்த பல மாத இதழ்களின் தொகுப்புக்கள்.
08) நூற்றுக்கணக்கான பெயர்கள்.
09) ஆங்கிலத்தில் அரபு மொழியைக் கற்க ஒரு முழுமையான மின் கல்லூரி.
10) எழுத்துவாரியாக தேடமுடிந்த குழந்தைகளுக்கான பெயர் பட்டியல்.
தமிழில் மார்க்கத்தை கனணி வழியாக அறிந்துகொள்ள மேற்சொன்ன வைகளை உரிய முறையில் பயன்படுத் தினாலேயே மிகப்போதுமானது. இது அல்லாமல் ஆங்கிலத்தில் வந்திருப்பவைகள் ஏராளம். அரபுதெரிந்த மௌலவிமார்களின் ஆய்விற்கு பயன் படக்கூடிய மென்பொருள்கள் இன்று ஏராளமாக இலவசமாகக் கிடைக்கின்றன. என்றாலும் கவலைக்கிடமான நிலையாதெனில் அதிகமான மௌலவி மார்கள் கனணிகள் இருந்தும் இம்மென்பொருள்களின் பெயர்கள் கூடதெரியாமல் இருப்பதுதான். எடுத்துக்காட்டிற்காக ஒரு சிலதைக் காட்டுகிறோம்.

1- المكتبة الشاملة – الاصدار الاول
2- المكتبة الشاملة – الاصدار الثاني
3- المكتبة الشاملة – (الإصدار الثاني – 5000  كتاب)
மேற்குறிப்பிடப்பட்ட மென்பொருள்கள் வெறும் சாதாரண மென்பொருள்கள் போன்று கணக்கிட்டுவிட முடியாது. கலாநிதி நாபிஃ அவர்களின் சொந்தமுயற்சியால் 5000 ற்கு மேற்பட்ட மார்க்க நூல்களைக் கொண்ட ஒரு மார்க்க ஆய்வாளனுக்குத் தேவையான பெரும் நூலகமே இந்த மென்பொருள். கீழே உள்ள அட்டவணையை அவதானியுங்கள்.
தப்ஸீர் – 69 ஹதீஸ் விரிவுரைகள் – 53
உலூமுல் குர்ஆன் – 122 ஹனபி நூற்கள் – 32
அகீதா – 360 மாலிக் நூற்கள் – 23
ஹதீஸ் – 108 ஷாபிஈ நூற்கள் – 40
ஹதீஸ் குறு நூற்கள் – 446 ஹன்பலீ நூற்கள் – 30
இமாம் இப்னு அபீத்துன்யாவின் தொகுப்புக்கள் – 62 பொதுவான
தக்ரீஜ் – 83 பொதுவானவைகள் – 1881
அல்பானியின் தொகுப்புக்கள் – 81 பத்வாத்தொகுப்புக்கள் – 39
அறிவிப்பாளர் பற்றியவைகள் – 244 மஸாயில் நூற்கள்.
அக்லாக் ரகாஇக் நூற்கள் – 125
உஸ{ல் பிக்ஹ் – 117
முஸ்தலஹ{ல் ஹதீஸ் நூற்கள் – 93
இஸ்லாமிய அரசிய நூற்கள் – 24
ஸீரா நூற்கள் – 30
வரலாற்று நூற்கள் – 134
நாடுகள் பற்றிய நூல்கள் – 44
இலக்கிய நூற்கள் – 264
மொழி நூற்கள் அகராதிகள் – 143
முல்தகா அஹ்லில் ஹதீஸ் இணையத்தள ஆய்வுத் தொகுப்புக்கள் – 5 களஞ்சியங்கள்
இப்னுல் தைமியின் நூற்கள் – 35
இப்னு தைமியாவின் நூற்கள் – 43

இன்னும் இதுபோன்று 33 வகையில் 5510 நூற்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நூலகமே இந்த மென்பொருள்.

இது தவிர,
ஸகாத் கணக்கிடும் மென்பொருள்4 – برنامج حاسب الزكاة
சொத்துக் கணக்கீட்டு மென்பொருள்    5 – برنامج المواريث
அஷ்ஷெய்க் ரபீஃ அவர்களின் நூற்கள்6 – مكتبة الشيخ ربيع
அஷ்ஷெய்க் முக்பிபின் நூற்கள் 7 – مكتبة الشيخ مقبل
அப்பாதின் நூற்கள்8 – مكتبة الشيخ العباد

இது போன்று தமிழிலும் ஆங்கிலத்திலும் அரபியிலும் பெறுமதிமிக்க இஸ்லாமிய பொக்கிஷங்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான கனணி மென்பொருள்கள் இஸ்லாத்தைக் கற்றுக்கொள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். அல்லாஹ் எமக்குத்தந்துள்ள அருள்களை உணர்ந்து கனணியின் மூலம் ஈருலகப்பயன் பெற்றவர்களாக ஆகவேண்டும்.

நன்றி : mujahidSrilanki.com



மன்னிப்பு! – நூருத்தீன், இந்நேரம்.Com by muduvaihidayath
செப்டம்பர்27, 2010, 11:20 மு.பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , ,

மன்னிப்பு!

( இந்நேரம்.Com-ல் மனம் மகழுங்கள் பகுதியில் நூருத்தீன் அவர்களால் பதியப்பட்டது )

இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.”

“செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.”

“நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.”

பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்க மறுக்கிறோம். மட்டுமல்லாமல்,

“எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதை நிவர்த்திக்க வேண்டிய முயற்சி எதுவும் நான் எடுக்க முடியாது. கடந்த காலத்திலேயே வாழ்வேன். நடந்த தவறுக்கு யாரையாவது பழி சுமத்திக் கொண்டே இருப்பேன். அல்லது என்னை நானே பழித்துக் கொள்வேன்.”

இதுதான் மன்னிக்க மறுப்பதன் உண்மை. நம்மில் பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன்னிக்க மறுப்பதன் மூலம் பிறரையோ நம்மையோ ஒரு குற்ற உணர்வுடனேயே வைத்துக் கொள்கிறோம். மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் அது நமக்கு வசதியாக சொகுசாக இருக்கிறது. ஆனால் அது நாளுக்குநாள் நமக்கு அதிகப்படியான மனவேதனையை அளித்து – சுமந்து திரிகிறோம்.

இதில் மற்றொரு சிக்கலான வேடிக்கை ஒன்று உள்ளது.

தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவை தன்னால் மன்னிக்க முடியாதென்றால் அது தன்னுடைய பிரச்சனையல்ல, அது தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவின் பிரச்சனை எனும்படியான எண்ணம் சிலருக்கு உண்டு. உங்களுக்கும் உங்கள் மாமனார் மீது அப்படியொரு எண்ணம் உள்ளது என்றால் – மன்னிக்கவும். அது அவருடைய பிரச்சனையல்ல, உங்களுடைய பிரச்சனை!

“என்ன ஸார் இப்படிச் சொல்றீங்க? அவர் எத்தகைய அல்ப ஆசாமி தெரியுமா?” என்று அவர் உங்களுக்குச் சீர் அளித்த பைக்கிற்கு ஹெல்மெட் வாங்கித் தரவில்லை என்று உடனே என்னிடம் மல்லுக்கட்ட வரவேண்டாம். யோசித்துப் பாருங்கள். நீங்கள் அவரை மன்னிக்க மறுப்பதால் மனவேதனை அடைவது யார்? முதல் ஆளாக நீங்கள்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிகழ்வது என்ன தெரியுமா? நாம் யாரிடம் கோபம் கொண்டு மன்னிக்க மறுத்துக் கொண்டிருக்கிறோமோ அவர் அதை உணராவதராகவே இருப்பார். அதனால் அவர் தன்னளவில் “சோற்றைத் தின்றோமா, டிவியில் ஸீரியலைப் பார்த்தோமா” என்று சுகமாக வாழ்ந்து கொண்டிருக்க, மனதில் கிடந்து மாய்வது நீங்களாகத்தான் இருக்கும்.

உங்கள் அத்தையின் மைத்துனர் மாடியில் புதிதாய் அறையொன்று கட்டி, அதற்காக ஒரு புதுமனை புகுவிழா நடத்தி, உங்களைக் கூப்பிட மறந்துவிட்டார். ”எத்தகைய அவமதிப்பு? மனுஷரா அவர்? அவரை மன்னிக்கவே முடியாது,” என்று நீங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பாதிப்பு யாருக்கு? அவருக்குத் தூக்கம் தொலையப் போகிறதா, வயிற்றைப் புரட்டப் போகிறதா, வாயில் கசப்புணர்வு ஏற்படப் போகிறதா? ம்ஹும். அவையனைத்தும் உங்களுக்குத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

உங்களுக்கு நீங்கள் முக்கியம், உங்கள் ஆரோக்கியம் முக்கியம், உங்கள் மன மகிழ்வு முக்கியமென்றால், அவரை மன்னிக்க வேண்டும். ஏன்? அவருக்காக அல்ல. உங்களுக்காக. ஒருவரின் உடல் நலக்குறைவிற்கு அவரது பிழை பொறுக்கா மனமும் ஒரு முக்கியக் காரணமாய் அமையும்.

பொதுவாய்ப் பிறருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தி, உங்களுடைய மன வேதனைக்கு அவரைக் குற்றவாளியாக்க நீங்கள் விரும்பினால் என்னவாகிறது தெரியுமா?

நீங்கள் உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்றாகிறது.

பிறரைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது நிலைமையை மோசமாக்குவதைவிட என்ன பலனைத் தரும்? மாறாய்க் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டால் மட்டுமே மேற்கொண்டு ஏதாவது செய்து நிலைமையைச் சீராக்க இயலும். அதனால் பிறரைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது – பிரச்சனைகள் எதையும் தீர்க்க விரும்பாமல் தீர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்க விரும்பாமல் இருக்க உதவும் கெட்ட போதை வஸ்து ஆகும்..

இதைப் படித்துவிட்டு, “என் உறவிலேயும் மன்னிக்க முடியாத சில சமாச்சாரம் நடந்து விட்டது. இங்கு எழுதியுள்ளது புரிவதைப்போல் தெரிகிறது. சரி ஸார். போகட்டும் மன்னித்து விடுகிறேன், ஆனால் ஒனறு, நடந்ததை என்னால் மறப்பது என்பது மட்டும் முடியாது,” என்று காஞ்சிபுரத்திலருந்து சுரேஷ் மின்னஞ்சல் அனுப்பலாம்.

சுரேஷ் என்ன சொல்கிறாரென்றால், “நான் கொஞ்சூண்டு மன்னித்துவிடுகிறேன் ; மிச்சத்தை மனதில் ஓரமாய் வைத்துக் கொள்கிறேன்; பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்ட அவை தேவைப்படும்.”

மன்னிக்கவும் சுரேஷ். உண்மையாய் மன்னிப்பதென்பது நம் அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுவே! “மன்னிப்போம், மறப்போம்.” அவர்களுக்கு எப்படியோ இதில் நமக்கு உண்மை இருக்கிறது. மன்னிப்பதென்பது பழையதை மறப்பதுமாகும். அதுவே மேன்மை.

யாரிடம் தவறில்லை? நாமெல்லாம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கற்றது, பெற்றது என்றதன் அடிப்படையில் தெரிந்து கொண்ட அளவு சிலாக்கியமாய் வாழ முயன்று கொண்டிருக்கிறோம். அப்படி வாழும் வாழ்க்கையில் பல தவறுகள் இழைக்கிறோம்; தவறான தகவல்களின் அடிப்படையில் சில காரியங்கள் ஆற்றுகிறோம், சில சமயம் முட்டாள்த்தனமான காரியங்கள் செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் அவையனைத்தையும் நாம் உணர்ந்தே செய்திருக்கப் போவதில்லை. நம் வாழ்க்கை சிறப்பாய் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்திருப்போம். கண்ணைத் திறந்து கொண்டே மலையிலிருந்து கிழே குதிப்போமா என்ன?

பிறந்த குழந்தை கண்ணைத் திறந்த நொடியிலேயே, “இதோ பூமிக்கு வந்துவிட்டேன். நான் முடிந்தளவு எனது வாழ்க்கையைச் சொதப்பிக் கொள்ளப் போகிறேன்” என்று தீர்மானம செய்து கொண்டு பிறப்பதுமில்லை; வளர்வதுமில்லை. அந்தந்தத் தருணங்களில் நமக்குள்ள மன முதிர்ச்சியினாலேயே வாழ்வில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கும்.

ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் கற்றுக் கொண்டது, வீட்டில் பெரியவர்கள் சொன்னது, மருத்துவர்கள் உபதேசித்தது என்ற தகவல்களின் அடிப்படையில் தம் குழந்தைகளை வளர்க்கிறார்கள். நாம் வளர்ந்த பிறகு நமக்குப் பிடித்தவகையில் நம்மைப் பெற்றவர்கள் வளர்க்கவில்லை என்று கோபித்துக் கொள்ள முடியுமா? அதற்காகப் பெற்றவர்களை மன்னிக்கவே முடியாது என்று தீர்மானித்துக் கொண்டு, “உங்கள் வளர்ப்பு சரியில்லை என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டுகிறேன் பார்,” என்று தறுதலையாக, கிரிமினலாக வாழ்ந்தால் என்னாவது?

புரிந்து கொள்ளவேண்டியது என்ன? பிறரைக் குறை சொல்வதென்பது பிரச்சனையைத் தீர்க்காது. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அது நடந்து முடிந்துவிட்டது. சரி அடுத்து ஆகவேண்டிய நல்லதைப் பார்ப்போம் என்று நகர வேண்டும். தீர்ந்தது விஷயம்.

மனதிற்குள் அதையே அரைத்துக் கொண்டிருந்தால் நோய் தான் மிஞ்சும்.

அதெல்லாம் இருக்கட்டும்; என் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக மற்றவர் எனக்கிழைத்த அநீதியை, அக்கிரமத்தை, அட்டூழியத்தை நான ஏன் மன்னிக்க வேண்டும்? என்று கேள்வி எழலாம். நடந்த அநீதி, அக்கிரமம், அட்டூழியம் என்பதெல்லாம் கிரிமினல் விஷயங்களாக இருந்தால் அது வேறு கதை. நீங்கள் வக்கீல் வீடடிற்கு அவருடைய ஊதியத்தை பையில் எடுத்துக் கொண்டுபோய்ப் பேச வேண்டி/யிருக்கும்/ய விஷயங்கள். நாம் இங்கு சொல்ல வருவது வேறு.

சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது அற்புதமான செயல். நீங்கள் ஒருவரை உள்ளார்ந்து மன்னிக்க முற்பட்டுவிட்டால் உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படும். மாற்றம் ஒரு தொற்று வியாதி. உலகளவில் பாடாவதி ஸ்டைலுக்கும் ஆபாச ஆடையலங்காரத்திற்கும் அது ஒரு காரணி. இங்கு உங்கள் மாற்றம் நல்ல வைரஸ்.

மன்னிப்பு மனதில் தோன்றியதுமே உங்கள் ஆத்திரம் தணிகிறது. உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் எதிராளியிடமும் உங்களுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்கிறீர்கள். அடுத்து அவரும் அதைப் போல் உங்களிடம் அவர் அறியாமலேயே இயல்பாய் மாற ஆரம்பிப்பார். நாம் ஒரு விஷயத்தை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் அணுக முயற்சி எடுத்துவிட்டாலே போதும், மற்றவர்கள் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாறுவதைக் காணலாம்.

இதுவரை கண்டது பிறர் நமக்கிழைத்த தவறுக்கு அவர்களை மன்னிப்பது.

நாம் நம்முடைய தவறுக்கு நம்மை வருத்திக் கொள்வதும் நடக்கும். எனவே நம்மை நாமே மன்னிப்பதும் முக்கியம். நம்மை நாமே எப்படி வருத்திக் கொள்கிறோம்?

நம்முள் சிலர் சுயபச்சாதாபத்தில் தங்களுடைய தவறுக்குத் தம்மையே தண்டித்துக் கொள்வதாகக் கருதித் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தம் மனதை வருத்தி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தகைய நடவடிக்கை சிறிதாகவும் இருக்கலாம்; பெரிதாகவும் இருக்கலாம்.

· சிலர் தின்று கொழுத்து உடலைக் கெடுத்துக் கொள்வார்கள்.
· சிலர் திண்ணாமல் உடல் வருத்தி மெலிவார்கள்.
· சிலருக்கு மொடாக் குடி.
· சிலர் திட்டமிட்டுத் தங்களது உறவைத் துண்டித்துக் கொள்வார்கள்
· சிலருக்கு வறுமையில் கிடந்து மடிவோம் என்று சங்கல்பம்
· சிலருக்கு ஆரோக்கியத்தை அழித்துக் கொள்வது என்று ஆனந்தம்

இதற்கெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் ஒரு காரணம் ஒளிந்து கொண்டிருக்கும். “நான் படு கேவலமானவன்,” “நான் மோசமானவன்,” “நான் ஆரோக்கியமாய், மகிழ்வாய் வாழ லாயக்கற்றவன்.”

உலகில் பல வியாதியஸ்தர்களுக்கு “தாங்கள் ஆரோக்கியமாய் வாழ அருகதையில்லை” என்ற குற்ற உணர்வு உள்ளது என்று புள்ளிவிவரம் கூறுகிறதாம்.
நீங்கள் உங்களையே குற்றம் சொல்லி, மன மகிழ்வைத் தொலைத்து விடுவதால் என்ன பயன்? மேலும் ஓரிரு வருடங்களுக்கு உங்கள் குறைகளையே நினைத்து நீங்கள் அழுது கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடுமா? அப்படிப் பார்த்தால் ஓட்டு போட்ட குற்றத்திற்காகவே அவரவரும் அழுது மாய வேண்டியதுதான்.

முதலில் நீங்கள் உங்களை மன்னித்து, நல்லதொரு குப்பைத் தொட்டியாய்ப் பார்த்து உங்களின் குற்ற உணர்வைத் தூக்கி எறிந்து விடவேண்டியது தான். அது அவ்வளவு எளிதன்று என்று நீங்கள் சொல்லலாம். ஸார் இது உங்கள் வாழ்க்கை. அதற்காகச் சற்று கடின முயற்சி எடுப்பதில் தப்பே இல்லை.

மனைவி, கணவன், மாமனார், மாமியார், எதிர்வீட்டுக்காரர், பால்காரர், வானிலை அறிக்கை வாசிப்பவர் என்று ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தால் அது பிரச்சனையை எவ்விதத்திலும் தீர்க்க உதவாது. வராத மழைக்காகக் குடை எடுத்துக் கொண்டு செல்ல நேர்ந்திருந்தாலும் பிறருடைய நக்கல் சிரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு வானிலை அதிகாரியை மன்னித்து விடுங்கள்.

நன்றி: நூருத்தீன், இந்நேரம்.Com



பாபர் மசூதியை யார் இடித்தது? – அறிவழகன் by ஆதம் ஆரிபின்
செப்டம்பர்26, 2010, 10:07 மு.பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , , , , , , , , ,

பாபர் மசூதியை யார் இடித்தது?

- அறிவழகன்

(திரு  கை.அறிவழகன் அவர்களின் இணையப்பக்கத்திலிருந்து இங்கே இடப்பட்டுள்ளது)

babri_masjid_demolition_20050228

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய், இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும், அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்து மதச் சடங்குகளை இந்து மதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் கொண்டும், பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள், செயற்கைக் கோள்களை அனுப்பும் விஞ்ஞானிகளும், அறிவியலில் பல்வேறு துறைத் தலைவர்களும் திருப்பதி, திருமலை, பழனி, பஞ்சாமிர்தம் என்று தொடர்ந்து ஒரு சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள், இஸ்லாமிய சமயத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுக் ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராய் இருந்த அப்துல் கலாம் ஐயா கூட பல ஒழுங்கீனக் குற்றச் சாட்டுகளுக்கு ஆட்பட்ட பம்பை முடி பாபாவின் காலடியிலும், சங்கராச்சாரிகளின் கால்களிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிகிறார்கள்.

கடந்த முறை சென்னையில் இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை அன்று பூசாரிகள் சகிதம் தீப ஆராதனை, பூஜை என்று அலுவலக நேரம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமில்லை, அங்கிருக்கும், கிறித்துவ, இஸ்லாமிய அரசு அலுவலர்களின் மன உணர்வுகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள், இந்தியாவின் எந்த அரசு அலுவலகத்திலும் இஸ்லாமிய சமயச் சடங்குகளோ, கிறித்துவப் பாதிரிமாரின் ஜெபக்கூட்டங்கலோ இதுவரை நடத்தப் பட்டதாகவோ, இனிமேல் நடத்தப்படும் என்றோ எனக்கு நம்பிக்கை இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலக் காவல்துறைத் தலைவர் அலுவலகம் சென்று சில பணிகளுக்காகக் காத்திருந்த போது முகப்பில் பாம்பின் மீது தலை வைத்து பெருமாள் பத்தடி நீளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார், இந்த நாட்டின் அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும், அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயத்தின் சொந்தக்காரர்கள் வரி செலுத்துகிறார்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டின் அரசு அலுவலகங்கள் ஒரே ஒரு மதத்தின் சார்பாக இயங்குவதை கண்டும் காணாமல் இருக்கவோ, கடந்து செல்லவோ எனக்கு மனம் வரவில்லை. இதை விடவெல்லாம் விடக் கூத்து கர்நாடக முதல் அமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்தினம் அவருடைய நாற்காலிக்கு ஹோமம் நடத்திப் பூஜை செய்தார்கள், விதான சௌதாவுக்குப் பின்புறம் வாழும் குடிசைகளில் இருக்கும் இரண்டு வேளை உணவற்ற மக்களின் வரிப்பணத்தில் நாற்காலிக்குப் பூஜை செய்து அதை அரசின் செலவுக் கணக்கில் வைக்கிறார்கள் இந்த தேசத்தில்.

image502952x

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் அல்லது அவர்களின் நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இதை நான் எழுதவில்லை, என் வீட்டில் கூட என் துணைவியார் பூஜை செய்கிறார், அது அவருடைய சொந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் தலையிடவோ அல்லது தடுக்கவோ எனக்கு உரிமை இல்லை, வேண்டுமானால் விளக்கிச் சொல்லி அவரை அந்த நம்பிக்கைகளில் இருந்து வெளிக் கொண்டு வரலாம். ஆனால் பல சமய மக்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தின் அரசு, பல சமய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாடு இப்படியான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையும், இந்த நாட்டின் தேர்வு செய்யப்பட்ட எந்தத் தலைவரும் கேள்வி கேட்காமல் இருப்பதும் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு காலித்தனம் குற்றம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இப்படியான லட்சணத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது, இந்த வழக்கே ஒரு அர்த்தமற்ற, மக்களை மூடர்களாக்கிய வழக்கு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, கரசேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி தலைமை ஏற்று ஒரு வரலாற்று நினைவிடத்தை, இன்னொரு சமய நம்பிக்கை கொண்ட மக்களின் வழிபாட்டு இடத்தை ஆணவத்தோடும், மதவெறியோடும் உடைத்து நொறுக்கினார்கள், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் காலையில் பஜ்ரங் தள் இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமான வினய் காட்டியாரின் இல்லத்தில் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் சந்திக்கிறார்கள், பிறகு பாபர் மசூதியின் அருகில் கரசேவை செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை அடைகிறார்கள், சிறிது நேரத்தில் மூத்த தலைவர்கள் தொலைவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட வெட்கக் கேடான அந்த நிகழ்வை எந்தக் கவலைகளும், குற்ற உணர்வும் இல்லாமல் நாடெங்கும் இருந்து பல்வேறு இந்துத்துவக் கட்சிகளால் அனுப்பப்பட்ட இளைஞர்களும், புரட்சி நாயகர்களும் சேர்ந்து உடைத்து நொறுக்கினார்கள்

r22

அன்றைய உத்திரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங், அரசு உயர் அலுவலர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அமைதி காக்கும் படி கட்டளை பிறப்பித்து இருந்ததை லிபரான் ஆய்வுக் குழு ஏற்கனவே தெளிவாகச் சொல்லி இருக்கிறது.பல நாட்களாகத் திட்டமிடப்பட்டு மாற்றுச் சமய மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டிடத்தை உடைத்து நொறுக்கியது, தாயும் பிள்ளைக்களுமாகப் பழகிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய, இந்து சமய மக்களின் மனதில் பிளவை உண்டாக்கியது, ஒரு தேசத்தின் இறையாண்மையைக் குலைத்து அதன் அமைதிக்குப் பங்கம் விளைவித்து அழிவுகளை உண்டாக்கியது என்கிற இந்தக் குற்றங்கள் வெகு எளிதாக மன்னிக்கப்படவோ அல்லது மறக்கப்படவோ முடியாதவை. லால் கிருஷ்ண அத்வானியின் அன்றைய பாதுகாப்பு அலுவலராக இருந்த அஞ்சு குப்தா விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்கையில், “அன்றைய தினம் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் காழ்ப்புணர்வு மிகுந்த சொற்களை, உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசினார்கள்” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பொறுப்பான தலைவர்களாக இருக்க வேண்டிய கட்சித் தலைவர்களும், அவர்களின் அடிப்பொடிகளும் ஆட்சி, அதிகாரங்களைக் கைப்பற்றத் தேர்வு செய்த ஆயுதம் தான் இந்த பாபர் மசூதி இடிப்பு. இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தெரிந்த கொலைகாரர்கள், இவர்களின் இந்த மத உணர்வால் சீர்குலைந்த அமைதி, கலவரங்களால் இறந்து போன மனிதர்கள், கல்லடிபட்டுக் குருதி சிந்திய குழந்தைகள், இவர்களுக்கான நீதி உறங்கித் தான் கிடக்கிறது, இந்த எளிய மக்களின் வரிப்பணத்தில் உண்டும் கொழுத்தும் திரியும் கொலைகாரர்கள் இசட் பிரிவுப் பாதுகாப்போடு இந்திய தேசத்தில் உலா வருகிறார்கள்.

216a7503a6656ace36db268e7100-grande

பெர்கானாவில் இருந்து மிகப்பெரிய நகரும் பீரங்கிகளோடு 1527 இல் சிட்டகோட் வந்த பாபர் போரில் அன்றைய மன்னன் ராணா சங்ராம சிங்கை வெற்றி கொள்கிறான், பிறகு தனது ஆளுகைக்குக் கீழ் வந்த இப்பகுதி சார்ந்த மண்டலத்தை தனது நம்பிக்கைக்குரிய தளபதி மீர் பக்கி இடம் பொறுப்பளித்து விட்டுச் செல்கிறான், மீர் பக்கி அந்தப் பகுதியில் இருந்த பல்வேறு இந்துக் கோவில்களை அழிக்கிறான், அயோத்தியாவில் இருந்த ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் நம்பப்படுகிற, வழிபடப்படுகிற ஒரு கோவிலையும் இடித்துவிட்டு தனது மன்னனின் நினைவாக இந்த இடத்தில் பாபர் மசூதியைக் கட்டி எழுப்பினான் என்று ஒரு சிலரின் வரலாறு சொல்கிறது. இருப்பினும் பாபரால் எழுதப்பட்ட அவரது “பாபர்நாமா” என்கிற தன் வரலாற்று நூலில் இந்த மசூதியைப் பற்றியோ அழிக்கப்பட்டதாக்ச் சொல்லப்படும் ராமரின் நினைவிடத்தையோ பற்றி அவர் எங்கும் குறிப்பிடவில்லை.

2007011415920601

பாபரோ, மீர் பக்கியோ ராமர் நினைவிடத்தை இடித்துத் தள்ளியது சரி என்று நான் சொல்ல வரவில்லை, அன்றைய காலகட்டத்தில் மன்னர்களும், மன்னர்களின் போர்களும் வாழ்க்கை முறையையும், வழிபாட்டு முறைகளையும் நிர்ணயம் செய்தன, இன்றைய இந்தியாவில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் முகலாயர் காலத்தில் மதமாற்றம் செய்து கொண்டவர்கள் அல்லது இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தழுவிக் கொண்டவர்கள் என்பதற்குச் சான்றுகள் பல உண்டு, அதற்காக அவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்கி இந்து மதத்துக்கு மாற்ற வேண்டும் என்று சொல்வதைப் போலத்தான் இருக்கிறது பாபர் மசூதியை இடித்தது. அன்றைய காலத்தில் பார்ப்பனர்கள் தான் வேதங்களை உண்டாக்கினார்கள், வருணப் பிரிவினையை உண்டாக்கினார்கள், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று சொன்ன என்னுடைய தாத்தனை அவனுடைய சிந்தனைகளை நீ என்னுடைய பீயை அள்ளுவதர்க்குக் கூட என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது” என்று விரட்டி அடித்தார்கள். அதனால் அவர்களை அடித்து உதைத்து நாட்டை வீட்டுத் துரத்தி விட வேண்டும், அவர்களது இன்றைய வீடுகளை எல்லாம் உடைத்து நொறுக்கி அந்த இடத்தில் கணியன் பூங்குன்றனாரின் நினைவிடத்தை வைத்து விட வேண்டும் நான் சொன்னால் அது எத்தனை முட்டாள் தனம் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது மாதிரித் தான் இந்த பாபர் மசூதிக் கதையும் இருக்கிறது.

எது எப்படியோ, இந்தியாவின் சொத்து சொத்து என்று சொல்லிக் கொள்ளையடைக்கப்படுகிற, உழைப்பு உறிஞ்சப்படுகிற இன்றைய இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே பொதுப் புத்தியை உருவாக்கும் காட்சி ஊடகங்கள் இஸ்லாமிய எதிர்ப்புணர்வையும், இந்து மதச் சார்பையும் நன்றாகவே வளர்த்தெடுக்கவும், அதன் விளைவுகளில் பணம் செய்யவும் காத்துக் கிடக்கிறார்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் என்று அலறிக் கொண்டு ஒரு புறம் காஷ்மீரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏவிக் கொண்டிருக்கிறார்கள், காஷ்மீரிகள் இந்தியாவுடனும் சரி, பாகிஸ்தானுடனும் சரி இணைந்து வாழ்வதற்கு விரும்பவில்லை, அவர்களிடம் வாக்கெடுத்து அவர்களை விடுதலை செய்வதாக ஒப்புக் கொண்டு தான் சிம்லா ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருக்கிறது இந்த தர்ம தேசம், நீதியோடும், நேர்மையோடும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து விலகி இருப்பதே எஞ்சி இருக்கும் நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும். காஷ்மீரப் பண்டிட்டுகள் என்று சொல்லப்படும் இந்துக்களின் நலன்கள் பாதிப்படைவதாக சொல்லப்படுவதையும் என்னால் நம்ப இயலவில்லை, நாடெங்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் பல்வேறு அரசின் உயர் பதவிகளிலும், தனியார் துறைகளின் மேலிருக்கைகளிலும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியவில்லை, கர்நாடக மாநிலத்தில் அன்றைய முதலமைச்சர் தரம் சிங்கால் தொழிற்கல்வி ஒதுக்கீட்டில் ஐந்து சதவீதத்தை காஷ்மீர்ப் பண்டிட்டுகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பொது இடத்தில் குளறுபடி செய்து கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒதுக்கீடு எந்த அளவுக்குச் சட்டப் பூர்வமானது அல்லது தேவையானது என்பது எனக்குத் தெரியவில்லை, சட்டம் அறிந்தவர்களும், ஊடகவியலர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு சிக்கல் இது.

1675860977

பாபர் மசூதித் தீர்ப்பால் பொது அமைதிக்குப் பங்கம் விளையும் என்று இன்றைக்கு இத்தனை சமூக அக்கறையோடு துடிக்கிற இந்தியாவின் நீதித் துறை இடிப்பு தினத்தன்று இப்படி நினைத்திருக்குமேயானால், இரண்டு மூன்று தலைமுறைகளின் மனங்களில் நம்மால் அன்பையும், பிணைப்பையும் உருவாக்கி இருக்க முடியும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து, பல உயிர்களைக் காவு கொண்ட அரசியல் பெரும்புள்ளிகளின் மீது இத்தனை கண்டிப்பையும், சமூக உணர்வையும் நமது நீதித் துறை காட்டி இருந்தால் இந்த நாடு இன்னும் அமைதியாக வாழ்ந்திருக்கும். வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி டி.வி.சர்மா அக்டோபர் ஒன்றாம் நாள் ஓய்வு பெறப் போகிறார், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டும், இல்லையென்றால் சில சட்டச் சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது, அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனது தீர்ப்பின் சாரத்தை அவர் உறையிடப்பட்ட தாள்களில் அரசிடம் ஒப்படைக்கக் வேண்டும்.

thumb

இந்த நாட்டில் அனைவரும் அவர்களுக்குரிய நம்பிக்கைகளோடும், வழிபாட்டு முறைகளோடும் அன்போடும், அமைதியோடும் வாழ வேண்டும் என்பதே நமது ஆவல். “கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்று அன்றைக்கு என்ன நினைத்துச் சொன்னாரோ தந்தை பெரியார், அது உண்மையாகி விடக் கூடாது என்று அமைதியின் சொரூபமான ராமரையும், எல்லாம் வல்ல அல்லாவையும் உண்மையான மதச்சார்பற்ற ஒரு நாட்டின் குடிமகனாக இருந்து வேண்டுகிறேன். நீங்க எந்த நாடு என்று கேட்பது என் காதில் விழுகிறது,

“தமிழ்” நாடு.

நன்றி : அறிவழகன்

***********




Follow

Get every new post delivered to your Inbox.

Join 761 other followers