மண்ணடி காகா


தொண்டியை சார்ந்த சகோ.உமர் ஷரீப் மரணம். சார்ஜாவில் நல்லடக்கம் by ஆதம் ஆரிபின்
நவம்பர்28, 2010, 12:07 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , , ,

தொண்டியை சார்ந்த சகோ.உமர் ஷரீப் மரணம். சார்ஜாவில் நல்லடக்கம்

ஜனாஷா தொழுகை நடத்தப்படுகின்றதுஜனாஷா தொழுகை நடத்தப்படுகின்றது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி அவர்களின் அக்கா மகன் உமர் ஷரீப் நேற்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் நடைபெற்ற ஒரு விபத்தில் காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


 

அன்னாருக்கு வயது 29.  தொண்டியைச் சேர்ந்த அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளார்கள்.

சகோதரர் – உமர் சரீஃப் அவர்களின் உடல் வெள்ளி கிழமை 26-11-2010 காலை 9 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமுமுகவின் தொடக்க காலம் முதல் சமுதாய பணிகளில் சகோதரர் உமர் ஷரீப் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் தற்போது முமுக துபை மண்டல நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார்.

 

உமர் ஷரீப் இரத்ததானம் செய்யும் போது எடுத்தப்படம்

தமுமுகவின் தலைமை நிர்வாக குழு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இம்மரணச் செய்தி வந்ததால் நிர்வாக குழு ஒத்தி வைக்கப்பட்டது. தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பொதுச் செயலாளருக்கு நேரில் ஆறுதல் சொன்னார்கள்.

உமர் ஷரீப் அவர்களின் ஜனசாவில் பங்கு கொண்டவரகளில் ஒரு பகுதி


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்’ சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்யுங்கள்.

உமர் ஷரீப் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

நன்றி : தமுமுக இணையதளம்




Follow

Get every new post delivered to your Inbox.

Join 761 other followers