மண்ணடி காகா


முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம் by ஆதம் ஆரிபின்
December31, 2010, 11:39 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , ,

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு

– தமுமுக கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.

சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

செய்தி : தமுமுக இணையதளம்



வஃக்பு நில மீட்பு மாநாடு by ஆதம் ஆரிபின்
December31, 2010, 11:35 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , ,

திருச்சியில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற வஃக்பு நில மீட்பு மாநாடு

சுமார் ஒரு கோடி முஸ்லிம்கள் வாழும் தமிழகத்தில், கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வஃக்பு சொத்துக்கள் களவாடப்பட்டு தனி நபர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவை மீட்டு, வீடு இல்லாத ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கான முதல் முயற்சியை, ஏக இறைவனும் அவனது கண்ணியமிக்க தூதரும் காட்டிய வழியில் போராடும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துள்ளது.

ஆம், அதன் முதல் மாவட்ட மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மிகச் சிறப்பாக கடந்த 26.12.2010 அன்று நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

சுமார் 4 ஆயிரம் மக்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை மாநிலச் செயலாளர் அபூ ஆஸியா தொடங்கி தொகுத்து வழங்கினார்.

சமூக அறக்கட்டளையின் தலைவர் CMN சலீம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொள்ளை போன வக்ஃபு சொத்துக்கள் என்ற  தலைப்பில் மிக சிறந்த விழிப்புணர்வு உரையை ஒன்றை ஆற்றினார்.

நம் உயிரைக் கொடுத்தாவது வஃக்பு நிலங்கள் மீட்கபட வேண்டும் என கோரிக்கையை அவர் வைத்தார்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது, களம் காணத் தேவை இறையச்சம் என்ற தலைப்பிலும், மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன்  கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும்  உரையாற்றினர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் நாசர், திருச்சி 34வது வார்டு உறுப்பினர் வெங்கட்ராஜ ஆகியோர் வாழ்ததுரை வழங்கினர்.

இறுதியாக தேசிய தலைவர் S.M.பாக்கர், உணர்வு பூர்வமான உரை ஒன்றை ஆற்றினார். அவர் இறையில்லாத்திற்காக வஃக்பு செய்யப்பட்ட நிலங்கள் கூட எவ்வாறெல்லாம் சூரையாடப்பட்டுள்ளது என பட்டியல் போட்டார்.

முன்னதாக மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா, வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல், மாநில செயலாளர் செங்கிஸ்கான், மாநிலப் பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ, தஞசை மாவட்ட தலைவர் ஜஃபர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர்.

இறுதியாக துணைத் தலைவர் முஹம்மது முனீர், தீர்மானங்களை வாசித்தார்.

வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வக்ஃபு நிலத்தில் இலவச பட்டா வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடு இல்லாத ஏழை எளி மக்களுக்கு, வக்ஃபு வாரிய நிலத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் வாடகை வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும்,

இந்திய முழுவதும் உள்ள வக்ஃபு நிலங்கள் மீட்கப்படுவதற்கும், அது தொடர்பான வழக்குகள்  வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கும் வக்ஃபு வாரியங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

வக்ஃபு வாரியத்திற்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்திலுள்ள வக்ஃபு சொத்து குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

பெரியபட்டிணத்தில் கடலில் முழ்கி இறந்த ஒவ்வொருவருக்கும் 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிலம் இல்லாத ஏழைகளிடம் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்க இருக்கிறது.

இறுதியாக திருச்சி மாவட்டத் தலைவர் ரிஸ்வான் நன்றியுரை வழங்கினார். மிகச் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

செய்தி மற்றும் புகைப்படங்கள் : அபூபக்கர் தம்பி, நூருல் அமீன்.

நன்றி : www.intjonline.in



சென்னை எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தாக்கு தல்!!! by ஆதம் ஆரிபின்
December31, 2010, 9:54 பிற்பகல்
Filed under: Abu Adhil

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு…

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….

சென்னை எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தாக்குதல்!!!

திருவொற்றியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரம் செய்துக் கொண்டிருந்த எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தி.மு.கவைச் சார்ந்த ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வருகிற பிப்ரவரி மாதம் சென்னையில் எஸ்.டி.பி.ஐயின் மண்டல மாநாடு நடைபெற உள்ளதையொட்டி எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டிருந்த எஸ்.டி.பி.ஐ உறுப்பினர் விநோத்தை தி.மு.கவினர் தாக்கியுள்ளனர். இதில் விநோத் காயமடைந்துள்ளார்.

இதற்கு முன்னர் தி.மு.கவினர் அம்லு கோவிந்தராஜன் என்ற பெண்மணியின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இச்செய்தியை கேள்விப்பட்டதும் சென்னை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரஷீத் மற்றும் அமீர் தலைமையில் எண்ணூர் சாத்தங்காடு போலீஸ் ஸ்டேசனை நோக்கி படையெடுத்தனர்.

போலீசார் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்ய மறுக்கவே இவர்கள் இரவு 1.30 மணிவரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ தொண்டர்களின் தொடர் வற்புறுத்தலுக்கிணங்க போலீசார் தி.மு.கவினர் மீது வழக்குப் பதிவுச் செய்தனர்.

செய்தி:newfrontworld

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]



சவூதி சிமெண்ட் நிறுவனத்திற்கு பொறியாளர ்கள், டெக்னிஷியன்கள் தேவை (Free Recruitment) by ஆதம் ஆரிபின்
December29, 2010, 10:07 மு.பகல்
Filed under: Abu Adhil

சவூதி சிமெண்ட் நிறுவனத்திற்கு பொறியாளர்கள், டெக்னிஷியன்கள் தேவை (Free Recruitment)

Thanks – Inneram.com

மும்பை : சவூதி சிமெண்ட் நிறுவனத்திற்கு கீழ்கண்ட பொறியாளர்கள், டெக்னிஷியன்கள் தேவைப்படுகின்றனர். நேர்முக தேர்வு ஹைதராபாத்தில் ஜனவரி 1,2 அன்றும் மும்பையில் ஜனவரி 6,7 அன்றும் நடைபெற உள்ளது. தகுதி உள்ளவர்கள் 022 66665308 / 66665367 எனும் எண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்தி கொண்டு செல்லவும். தகுதி உள்ளவர்கள் நேரிடையாகவும் செல்லலாம். ஆனால் அப்படி செல்பவர்களுக்கு பயணப்படி கிடைக்காது.

Interviews Details are as follows:

HYDERBAD

Date of Interview Position
1st Jan 2011 & 2nd Jan 2011 Chief Engineer, Mechanical
Draftsman, Mechanical
Engineer, Mechanical
Foreman, Mechanical
Foreman, Mechanical (Workshop)
Fitter
Rigger
Electronics Technician
Engineer, Electronics
Electrician
Engineer, Electrical
Engineer, WMRD
Foreman, Quarry Operations
H.E. Mechanic
Technical Executive
Venue: C/O GGheewala HR Consultnats

2nd Floor, Hira Mansion,

Opp. Paigah Plaza

Basheerbagh,

Hyderabad – 500 063

MUMBAI

Date of Interview Position
6th Jan 2011 & 7th Jan 2011 Chief Engineer, Mechanical
Draftsman, Mechanical
Engineer, Mechanical
Foreman, Mechanical
Foreman, Mechanical (Workshop)
Fitter
Rigger
Electronics Technician
Engineer, Electronics
Electrician
Engineer, Electrical
Engineer, WMRD
Foreman, Quarry Operations
H.E. Mechanic
Technical Executive
Venue: GGheewala HR Consultants

202 A, Bombay Market, Tardeo Road,

Mumbai – 34

Tel: 022 66665335/ 66665367

PLEASE CALL AND REGISTER YOUR NAME FOR THE INTERVIEW. TEL. NO: 022 66665308 / 66665367

Dress Code: Official (Formal Shirt & Trousers, Formal Shoes)

Your CV should be exactly matching the job description mentioned on our website http://www.ggheewala.com/saudicement.asp . Your CV will be subject to prior screening by the SCC delegates and will be considered for the interview only if found suitable by them. The decision of the SCC delegates will be considered as final.

If you find your CV suitable for the position as per the Requirement of the company then you are requested to come directly as a Walk-in candidate at the Venue.

You are required to carry the following documents for the interview, in 3 sets.

  • Detailed, updated résumé.
  • Original / Copy of Educational Certificates.
  • Original / Copy of Work experience certificates.
  • Original / Copy of the relevant Training Courses Certificates.
  • Original / Copy of Passport, valid for the next 12 months, and ECNR Status. Saudi visa, if present, should not be valid.
  • 20 Photographs; White background; 4×6 cm.

Travel reimbursement will not be provided to walk-in candidates.



ஐந்தாம் ஆண்டை நோக்கி…உங்கள் மண்ணடிகாகா இணையதளம் by ஆதம் ஆரிபின்
December28, 2010, 6:34 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்:

ஐந்தாம் ஆண்டை நோக்கி…உங்கள் மண்ணடிகாகா இணையதளம்

இன்ஷா அல்லாஹ்..

விரைவில் புதிய தோற்றத்துடன்…


சமுதாயத்தை ஒன்றினைக்கும் முயற்சியில்…

சமுதாய செய்திகளுக்கு…

மண்ணடிகாகா.காம்

சமுதாய இணைய இதழ்

www.mannadykaka.com



சாதனைகள் பெண்களுக்கு தடையில்லை! by muduvaihidayath
December27, 2010, 5:18 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , ,

சாதனைகள் பெண்களுக்கு தடையில்லை!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந்தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு படகுகளில் உல்லாசமாக இரண்டு படகுகளில் அருகில் உள்ள தீவினைப்;பார்க்க சென்ற  சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் விபத்துக்குள்ளாகி 13 பேர்கள் பலியான செய்தி வெளியானது கண்டு அனைத்து உள்ளங்களும் அதிர்ச்சியில் உரைந்தன வென்றால் மிகையாகாது.

அந்தக் கோரச்சம்பவத்தினை ஆயும்போது கீழ்கண்ட காரணங்கள் தெரிந்தன:

1)      படகில் சென்றவர்கள் உயிர் காக்கும் சாதனமாக லைப்போட் என்ற ரப்பர் டியூப்பினை அணியவில்லை.

2)      படகின் சுமைக்கேற்ப பெண்களும், குழந்தைகளும் படகில் ஏற்றப்படவில்லை.

3)      படகில் ஒரு பக்கமே பளுவான பெண்களும் மறு பக்கம் குழந்தைகளும் அமரச் செய்திருந்தது.

4)      குழந்தைகள் உற்சாகத்தில் அலையினை கையில் தொட முனைந்து அவர்களுடைய பளு படகின் ஒரு பகுதியினை சார்ந்திருந்து சாய்ந்தது.

5)      பெண்கள் குழந்தைகளின் இந்த விளையாட்டுச் செயலினை கட்டுப்படுத்தாதது.

6)      பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீச்சல் பழக்கமின்மை.

7)      ஆபத்தான நேரத்தில் எப்படி உயிர் காப்பது என ஆண்களுக்கு தெரியாதது.

8)      மற்றொரு படகில் சென்ற சில ஆண்களுக்கும் நீச்சல் தெரியாததால் மீனவர்கள் கரையிலிருந்து வேறொரு படகில் வரும் வரை விபத்தில் சிக்கியவர்களை காப்பற்ற இயலாதது.

இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது என்றாலும் கடற்கரை ஓரத்தில் வாழும் இஸ்லாமிய கிராமங்களில் வாழும் ஊர்களில் இப்படிப் பட்ட விபத்துக்கள் ஏற்படும் போது அதனை தடுக்க என்னன்ன வழிகள் என ஊர் ஜமாத்தார்கள் அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் கட்டாயமாக நீச்சல் தெரிந்திர ஏற்பாடு செய்வது அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரர்களின் கடமையாகும் என்றால் மிகையாகுமா?

2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி அன்று என் கல்லூரித் தோழனும் பரங்கிப்பேட்டையினைச் சார்ந்த அலி அப்பாஸ் காரைக்காலில் சக தோழர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது சுனாமி அலை வரும் போது அனைவரும் ஒரு மரத்தில் ஏறி தப்பிக்கும் போது நண்பன் அலி அப்பாஸ் மட்டும் மரமேர முடியாததால் அதில் பலியானான் என அறிந்து என் உள்ளம் இன்னும் வேதனையால் துடிக்கிறது. அதனைப்போன்று இந்த படகு விபத்தில் தன் அருமைக் குழந்தைகளையும், தாய்மார்களையும் விபத்தில் சிக்கி பரிதவிக்க விட்டு விட்டு இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நிலை எப்படியிருநதிருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். ஆகவே இது போன்ற விபத்துக்களை தடுக்க என்னன்ன  வழிகள் என ஆராயந்து நடவடிக்கை எடுத்தால் கடற்கரை ஓர மக்களை சோக இருள் கவ்வாமல் இருக்குமல்லவா?

1)      கண்டிப்பாக ஆண்கள் முதல் குழந்தைகள் வரை நீச்சல் பழகியிருக்க வேண்டும். நீச்சல் நீரிலிருந்து மனிதனை காப்பாற்றுவது மட்டுமல்ல மாறாக சிறந்த ஒரு உடற்பயிற்சியாகும். அத்துடன் எவ்வளவு பெரிய டென்சனில் இருந்தாலும் அரை மணிநேர நீச்சலுக்கு சென்று வந்தால் அந்த மன நெருக்கடி ஒரு நிமிடத்தில் பறந்தோடி உற்சாகம மேலோங்கும்;.

2)      நீச்சல் செய்பவர்கள் மனதில் எதனையும் சாதிக்கலாம் என ஒரு எண்ணம் ஏற்படும். அதற்கு உதாரணமாக 26.12.2010 அன்று புதுவையில் ஒரு 38 வயது பெண்மனி செய்த சாதனையினை உங்களுக்குச் சொல்லலாமென நினைக்கிறேன். பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூரினைச் சார்ந்த குடும்ப நடு வயது பெண்மனி ராணி(38) என்பவர் நீச்சல் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு சாதனை செய்ய வேண்டுமென நினைத்து நீச்சல் பயிற்சினை மேற்கொண்டார். ஆழிப்பேரலை நாளன்று பாண்டி முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு நீச்சல் குளத்தில் தலையினை மேலே வைத்துக் கொண்டு கால்களை தரை நோக்கியும் ஆனால் தரையில் படாமலும், நீச்சலிடிக்காமலும் ஒரு கிளோ மீட்டர் தூரத்தினை காலை பத்து  மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரை நடந்து சாதனை செய்துள்ளார் என்றால் பாருங்களேன் நீச்சல் சாதனை பெண்களுக்கு விதிவிலக்கல்ல என்பதினை இது காட்டவில்லையா?

3)      சிலர் கேட்கலாம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து உள்ளார்கள் அவர்களால் எப்படி நீச்சல் உடையில் நீந்த முடியுமென்று. இப்போது முஸ்லிம் பெண்களுக்கென உடல் அங்கங்கள் தெரியாது புர்கா வடிவில் நீச்சல் உடைகள் மேலை நாடுகளிலும், அரேபிய நாடுகளிலும் உள்ளன. நமது பெண்களுக்கும் அதனை வாங்கிக் கொடுத்து நீச்சல் பயிற்சி பெண் பயிற்சியாளர்களைக் கொண்டே பயிற்சி கொடுக்கலாம். சென்னை போன்ற நகரங்களில் பெண்களுக்கான தனி நேரங்கள் நீச்சல் குளங்களில் ஓதுக்கப்படுங்கின்றன. குளங்கள் உள்ள ஊர்களிலும். பேரிய கண்மாயல் குளிப்பவர்களுக்கும், ஆற்றங் கரையில் உள்ள முஸ்லிம் பெண்கள், சிறார்களுக்கு நீச்சல் பயிற்சி கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

4)      சிலர் சொல்வார்கள் மீன் குட்டிகளுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும், அவர்களாக பழகிக் கொள்வார்கள் என்று அசட்டையாக. ஆனால் இது போன்று விபத்துக்கள் ஏற்பட்டால் அங்கு ஏற்படும் உயிர் பலிக்கு அவர்கள் மற்றவர்களை குறை சொல்லத்தான் அவர்களுக்குத் தெரியுமேயொழிய அந்த குறைகளை போக்க எடுத்த நடவடிக்கை என்ன என அவர்களுக்குத் தெரியாது.

ஆகவே வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் முஸ்லிம் ஊர்களில் ஏற்படாதாவாறு நடவடிக்கை எடுப்பது அனைவருடைய கடமையல்லவா சகோதர, சகோதரிகளே?

நன்றி : முதுகுளத்தூர்.காம்



உங்கள் கைப்பேசியை பாதுகாக்க சில வழிகள்… by ஆதம் ஆரிபின்
December27, 2010, 1:45 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ,

உங்கள் கைப்பேசியை பாதுகாக்க சில வழிகள்…

http://web20images.org/wp-content/uploads/2010/10/hape.jpg1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம்.

எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.

4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.

6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.

7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.

8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.

10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.

12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.

13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.

14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.

15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.

16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.

நன்றி : தமிழ்சாரால்.காம்



பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 16 பேர் பலி by ஆதம் ஆரிபின்
December27, 2010, 8:15 மு.பகல்
Filed under: Abu Adhil

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 20 பேர் பலி



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கீழக்கரை அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.

தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று 26/12/2010 காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலிகாப்டரும்,அதிநவீனஹோவர்கிராப்ட்படகும் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது.

மீட்பில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்

அவர்களுடன் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தொண்டர்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்று களத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 20பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரியபட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]



பேரீச்சையின் பயன்கள். by ஆதம் ஆரிபின்
December27, 2010, 8:11 மு.பகல்
Filed under: Abu Adhil

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு…

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….

பேரீச்சையின் பயன்கள்.

இரத்த விருத்திக்கு பேரீச்சை

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

பேரீச்சையின் பயன்கள், கண்பார்வை தெளிவடைய

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

Posted by PUTHIYATHENRAL, நன்றி : அஸ்கர் மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]



சுனாமி நினைவு நாள் by ஆதம் ஆரிபின்
December26, 2010, 7:25 பிற்பகல்
Filed under: Abu Adhil

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு…

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….

சுனாமி நினைவு நாள்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி உலகையே உலுக்கிய ‘சுனாமி’ யால் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலகையே உலுக்கிய மறக்க முடியாத சுனாமி வந்து போன நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எழுந்த சுனாமி ஆழிப் பேரலைகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை என இந்தியக் கடலோர நாடுகளை சுழற்றிப் போட்டது.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், பொறையாறு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் பனைமர அளவுக்கு வந்த ராட்சத கடல் அலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் பலியானார்கள். தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கீய இந்த சம்பவத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர்.

இந்த ஆழிப் பேரலைத் தாக்குதலில் பேரிழப்பை சந்தித்தது. நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை என தமிழக கடலோர மாவட்டங்கள் கடும் பாதி்ப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தன. ஆனால் நாகையும், கடலூரும்தான் மிகப் பெரிய அளவில் உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்களாகும்.

இன்று (26-ந்தேதி) 6-ம் ஆண்டு நினைவு தினம்அனுசரிக்கப்படுகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோர கிராமங்களில் சுனாமி 6-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி பேரலை வந்த அதே ஞாயிற்றுக் கிழமை, இந்த ஆண்டு நினைவு நாள் வருவது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ வசதிகள், உதவிகள், ஆதரவு கரம் நீட்டினாலும் கூட 6 ஆண்டுகள் ஆகியும் “சுனாமி” கோர தாண்டவத்தின் வடு இன்னும் நாகை மக்களுக்கு நீங்கவில்லை, என்னவோ உண்மைதான்!

இடுகையிட்டது பாலைவனத் தூது




Follow

Get every new post delivered to your Inbox.

Join 761 other followers