Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: காவல்துறை, ஜவாஹிருல்லாஹ், த.மு.மு.க
முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு
– தமுமுக கடும் கண்டனம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:
தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.
போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.
சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?
தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.
செய்தி : தமுமுக இணையதளம்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத், வஃக்பு நில மீட்பு மாநாடு, www.intjonline.in
திருச்சியில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற வஃக்பு நில மீட்பு மாநாடு

சுமார் ஒரு கோடி முஸ்லிம்கள் வாழும் தமிழகத்தில், கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வஃக்பு சொத்துக்கள் களவாடப்பட்டு தனி நபர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவை மீட்டு, வீடு இல்லாத ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கான முதல் முயற்சியை, ஏக இறைவனும் அவனது கண்ணியமிக்க தூதரும் காட்டிய வழியில் போராடும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துள்ளது.
ஆம், அதன் முதல் மாவட்ட மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மிகச் சிறப்பாக கடந்த 26.12.2010 அன்று நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
சுமார் 4 ஆயிரம் மக்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை மாநிலச் செயலாளர் அபூ ஆஸியா தொடங்கி தொகுத்து வழங்கினார்.

சமூக அறக்கட்டளையின் தலைவர் CMN சலீம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொள்ளை போன வக்ஃபு சொத்துக்கள் என்ற தலைப்பில் மிக சிறந்த விழிப்புணர்வு உரையை ஒன்றை ஆற்றினார்.

நம் உயிரைக் கொடுத்தாவது வஃக்பு நிலங்கள் மீட்கபட வேண்டும் என கோரிக்கையை அவர் வைத்தார்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது, களம் காணத் தேவை இறையச்சம் என்ற தலைப்பிலும், மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன் கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் நாசர், திருச்சி 34வது வார்டு உறுப்பினர் வெங்கட்ராஜ ஆகியோர் வாழ்ததுரை வழங்கினர்.

இறுதியாக தேசிய தலைவர் S.M.பாக்கர், உணர்வு பூர்வமான உரை ஒன்றை ஆற்றினார். அவர் இறையில்லாத்திற்காக வஃக்பு செய்யப்பட்ட நிலங்கள் கூட எவ்வாறெல்லாம் சூரையாடப்பட்டுள்ளது என பட்டியல் போட்டார்.
முன்னதாக மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா, வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல், மாநில செயலாளர் செங்கிஸ்கான், மாநிலப் பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ, தஞசை மாவட்ட தலைவர் ஜஃபர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக துணைத் தலைவர் முஹம்மது முனீர், தீர்மானங்களை வாசித்தார்.
வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வக்ஃபு நிலத்தில் இலவச பட்டா வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடு இல்லாத ஏழை எளி மக்களுக்கு, வக்ஃபு வாரிய நிலத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் வாடகை வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும்,
இந்திய முழுவதும் உள்ள வக்ஃபு நிலங்கள் மீட்கப்படுவதற்கும், அது தொடர்பான வழக்குகள் வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கும் வக்ஃபு வாரியங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
வக்ஃபு வாரியத்திற்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்திலுள்ள வக்ஃபு சொத்து குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
பெரியபட்டிணத்தில் கடலில் முழ்கி இறந்த ஒவ்வொருவருக்கும் 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிலம் இல்லாத ஏழைகளிடம் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்க இருக்கிறது.
இறுதியாக திருச்சி மாவட்டத் தலைவர் ரிஸ்வான் நன்றியுரை வழங்கினார். மிகச் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
செய்தி மற்றும் புகைப்படங்கள் : அபூபக்கர் தம்பி, நூருல் அமீன்.
நன்றி : www.intjonline.in
Filed under: Abu Adhil
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு…
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….
சென்னை எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தாக்குதல்!!!
திருவொற்றியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரம் செய்துக் கொண்டிருந்த எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தி.மு.கவைச் சார்ந்த ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வருகிற பிப்ரவரி மாதம் சென்னையில் எஸ்.டி.பி.ஐயின் மண்டல மாநாடு நடைபெற உள்ளதையொட்டி எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டிருந்த எஸ்.டி.பி.ஐ உறுப்பினர் விநோத்தை தி.மு.கவினர் தாக்கியுள்ளனர். இதில் விநோத் காயமடைந்துள்ளார்.


இதற்கு முன்னர் தி.மு.கவினர் அம்லு கோவிந்தராஜன் என்ற பெண்மணியின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இச்செய்தியை கேள்விப்பட்டதும் சென்னை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரஷீத் மற்றும் அமீர் தலைமையில் எண்ணூர் சாத்தங்காடு போலீஸ் ஸ்டேசனை நோக்கி படையெடுத்தனர்.


போலீசார் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்ய மறுக்கவே இவர்கள் இரவு 1.30 மணிவரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ தொண்டர்களின் தொடர் வற்புறுத்தலுக்கிணங்க போலீசார் தி.மு.கவினர் மீது வழக்குப் பதிவுச் செய்தனர்.
செய்தி:newfrontworld
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]