Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அரசிய்ரல், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி, குண்டுவெடிப்பு, சுனில் ஜோஷி கொலை, பிரக்யாசிங் தாக்கூர், ஹிந்துத்துவ தீவிரவாதி, ஹிந்துத்துவா
சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூர் கைது
இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime Act (MCOCA) நீதிமன்றத்தின் அனுமதியுடன் மத்தியபிரதேச போலீஸார் பிரக்யா சிங்கை கைது செய்தனர். இதனை சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியன் தெரிவித்தார்.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்தாம் என்ற உண்மை வெளியானது.
ஜோஷி கொல்லப்பட்ட தினம் இவருடைய வீட்டிற்கு சென்ற பிரக்யா சிங் ஜோஷியின் பொருட்களையும் இதர ஆதாரங்களையும் அங்கிருந்து கடத்திச் சென்றதாக புலனாய்வுக்குழு கண்டறிந்தது.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ், நன்றி : பாலைவனத்தூது
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அரசியல், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க கூட்டணி, முஸ்லிம் லீக்
திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள்
நன்றி : பாலைவனத் தூது
அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்தி்ப்புக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காதர் மொய்தீன், வெற்றிகரமாக அமைந்துள்ள இந்தக் கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கூட்டணியின் வெற்றிக்கு தாங்கள் பாடுபடப் போவதாகவும் கூறினார்.
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அரசியல், கோவை, சமுதாயம், த மு மு க, ம.ம.க
கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் பெண்கள் உள்பட 350 பேர் கைது ! போக்குவரத்து பாதிப்புகள் !
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அரசியல், ஜவாஹிருல்லா, தேர்தல், மனிதநேய மக்கள் கட்சி
ம.ம.க வலுவான வெற்றிப்பெறும் – ஜவாஹிருல்லா!
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வலுவான வெற்றிப்பெறும் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.
குமரிமாவட்டம் வருகை தந்த ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா இரவிபுதூர்கடையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“லிபியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டதைப் போன்று தமிழகத்திலும் புரட்சி ஏற்பட்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சி ஒடுக்கப்பட்டு ஜனநாயக ரீதியிலான ஆட்சி மலரும். அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணியில் ம.ம.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, 1991ம் ஆண்டிற்குப் பிறகு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். ம.ம.கவில் 15 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிப்பெற கடுமையாக உழைப்பார்கள்.
பிரபாகரனின் தாயாரின் இறுதி அஞ்சலி செலுத்த இலங்கை சென்ற திருமாவளவனைச் சிங்கள அரசு திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. சிங்கள வெறிப்பிடித்த ராஜபக்சே அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதைக் கண்டும் காணாமல் இருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தமுமுக மாவட்ட தலைவர் பீர்முகம்மது, மாநில துணை செயலாளர் காதர்மைதீன், மாநில துணைத்தலைவர் தமீமுன்அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர்.
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அரசியல், சவுதி, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடு, மன்னர் அப்துல்லா
சவுதி அரேபிய மன்னரின் சலுகைகள்
சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். உடல் நலம் குன்றியிருந்து மன்னர் மொராக்கோவில் சிகிச்சை பெற்ற பின்னர் இன்று (23.02.2011) சவுதி திரும்பினார்.நாடு திரும்பியதும் அவர் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் 15 சதவிகிதம் உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இது தவிர வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி, வேலையில்லாமல் இருக்கும் சவுதி பிரஜைகளுக்கு உதவித் தொகை, கடன் வாங்கி செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களின் கடனை அரசு வழங்கும் என பல சலுகைகளை அளித்துள்ளார். இவ்வாறு ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களை அப்துல்லா அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஆளுகின்ற அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது தொடர்ந்து நடைபெற்று வருகையில் சவுதி மன்னரின் இந்த அறிவிப்பு மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.
செய்திகள் : இந்நேரம்.காம்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அரசியல், குஜராத், கோத்ரா, தீர்ப்பு அறிவிப்பு
கோத்ரா:தீர்ப்பு அறிவிப்பு
இச்சம்பவத்தில் 90 பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதில் 31 பேர் குற்றவாளிகள் எனவும் 63 பேர் நிரபராதிகள் எனவும் நீதிமன்றம் சற்று முன் தீர்ப்பளித்தது.
குற்றவாளிகள் அனைவரும் தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இவர்களின் தண்டனைகள் என்னவென்று வரும் வெள்ளியன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பின் விரிவான விவரங்கள் விரையில் வெளியிடப்படும். குஜராத்தில் பதற்றம் காணப்படுவதையடுத்து போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ஹாஜி ஷேக் இஸ்மாயில் தொழிற்நுட்பக் கல்லூரி, Campus Interview, TVS Brakes India Ltd
கடந்த 25/12/2010 அன்று TVS Brakes India Ltd., நடத்திய Campus Interview ஹாஜி ஷேக் இஸ்மாயில் தொழிற்நுட்பக் கல்லூரியை சார்ந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்,
அதில் ஒரு பகுதி மாணவர்களுக்குரிய வேலை வாய்ப்பு உத்தரவு சான்றிதழை கல்லூரியின் தலைவர் முஹம்மது ஜஹாங்கீர் அவர்கள் வழங்கினார்.
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அரசியல், த.மு.மு.க, தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, மமக
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில்
மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.

மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.

செய்திகள் : தமுமுக இணையதளம்
துனீசிய முன்னாள் அதிபர் பென் அலி மரணம்
செய்தி : பாலைவனத் தூது
ஜித்தா,பிப்.19:துனீசிய நாட்டில் மக்கள் புரட்சியால் வெளியேற்றப்பட்ட அந்நாட்டு முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் பென் அலி சவூதி அரேபியாவில் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார் என பிரான்சு நாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் காரணமாக 24ஆண்டு காலமாக ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய பென் அலி நாட்டை வெளியேறி சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவருக்கு பக்கவாத நோய் தாக்கியது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சைப் பெற்றுவந்தார்.
கோமா நிலைமையிலிருந்து அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்துவந்தது. இந்நிலையில்தான் ஜித்தா மருத்துவமனையில் வைத்து அவர் மரணமடைந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
செய்தி:ikhwanweb & updatednews.ca
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: தோப்புத்துறை, மர்கஸ், Thopputhurai
ஷார்ஜா-வில் நடைபெற்ற தோப்புத்துறை மர்கஸ் அமீரக நிர்வாகத்தின் ஆலோசனை மற்றும் தர்பியா நிகழ்ச்சி
ஐக்கிய அரபு அமீரக சார்ஜாவில் கடந்த 17-02-2011 வியாழன் அன்று இரவு 8.30 மணியளவில் ஷார்ஜா ரோலா சதுக்கம் அருகே அமைந்துள்ள சகோதரர் ஹாஜாதீன் அவர்கள் இல்லத்தில் நாகை மாவட்டம் – தோப்புத்துறை மர்கஸ் ( மஸ்ஜிதுல் முஸ்லீமின் ) நிர்வாகத்தின் சார்பாக அலோசனை மற்றும் தர்பியா எனும் இஸ்லாமிய நல்லுழுக்க பயிற்சி நிகழ்ச்சி அல்லாவின் மாபெரும் கிருபையால் இனிதே நடந்தது(அல் ஹம்துலில்லாஹ்! ), நிகழ்ச்சிக்கு அமீரகத் தலைவர் சகோ.அப்துல் அஜிஸ் அவர்கள் தலைமையேற்றி சிறப்புரை நிகழ்த்தினார், நாம் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளை பற்றியும் மார்க்கப் பணிகளில் நம்மிடைய ஏற்பட்டுள்ள தோய்வுகளையும் மேற்கோள்க்காட்டி உரை நிகழ்த்தினார்,
பின்னர் சகோ.ஹாஜாதீன் அவர்கள் கடந்த புனத ரமலானில் நடத்தப்பட்ட மாவட்டம் தழுவிய திருக் குர் ஆன் போட்டிகளில் குறை-நிறைகளை சுட்டிக் காட்டினார், மேலும் அப்போட்டியை சிறப்பாக நடத்திய நமது தாயக மர்கஸ் நிர்வாகிகளை பற்றியும் சுட்டிக்காட்டினார், பின்னர் நிகழ்ச்சி வருகைத் தந்த அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப் பட்டது, அதற்கு மர்கஸ் அமீரக தலைவர் அப்துல் அஜிஸ் அவர்களும் சகோ.ஹாஜாதீன் அவர்களும் விளக்கம் அளித்தார்கள்,
மேலும் இன்சா அல்லாஹ்… வருகின்ற புனித ரமலானில் நடைப்பெற இருக்கும் ஏழாம் ஆண்டு திருக்குர் ஆன் போட்டிற்கான அனைவரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது, மேலும் இன்சா அல்லாஹ் பின்னர் நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் இது சம்பதமாக விவாதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த சகோ.பி.எஸ்.சிராஜ் மற்றும் சகோ. ரசுல் முகம்மது அவர்களும் சிறப்பான முறையில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள்,
பின்னர் வருகின்ற கோடை கால சிறப்பு இஸ்லாமிய பயிற்சி வகுப்புகளுக்கான அலோசனைகள் அனைவரிடமும் பெறப்பட்டது,இதற்கான மார்க்க பயிற்சி ஆசிரியர் நியமனம் சம்பந்தமாகவும் பேசப் பட்டது, கோடை கால சிறப்பு இஸ்லாமிய பயிற்சி வகுப்புகள் சம்பந்தமாக துபாயிலிருந்து வருகை புரிந்த சகோ.ஜியாவுல் ஹக் அவர்களும், சகோ.கௌது அவர்களும் சிறப்பான ஆலோசனை வழங்கினார்கள்,
இறுதியாக தொழுகையின் அவசியத்தை பற்றியும், மேலும் ஜமாத்துடன் தொழுவதன் அவசியத்தை பற்றியும் சிறப்பான முறையில் சகோ.கௌது அவர்கள் உரை நிகழ்த்தி அனைவருக்கும் மறுமையின் சிந்தனையை புகுத்தினார், பின்னர் துவாவுடன் இனிதே நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது,கலந்துக் கொண்ட அனைவருக்கும் தஞ்சாவூர் உணவகம் சார்பாக இரவு உணவு வழங்கப் பட்டது, கூட்டத்திற்க்கு அபுதாபி,அஜ்மான் மற்றும் துபாயிலிருந்து தோப்புத்துறை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி – ஆதம்.ஆரிபின், ராசல் கைமா.























