மண்ணடி காகா


அரசியல் அரங்கில் முஸ்லிம்களின் எழுச்சி… by ஆதம் ஆரிபின்
மார்ச்31, 2011, 3:55 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ,



சட்டங்களின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எட்டாக்கனியோ..? by ஆதம் ஆரிபின்
மார்ச்31, 2011, 3:21 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ,

சட்டங்களின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எட்டாக்கனியோ..?

ஒரு குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு அவசிய நிமித்தமாக வெளியே வரும் நிலை ஏற்பட்டால் வழங்கப்படுவதுதான் ‘பரோல்’ என்பதாகும். இந்த பரோல் விசயத்தில் கூட அரசு முஸ்லிம்கள் விசயத்தில் பாராமுகமாக நடந்து வருகிறது.

ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜாகிர் உசேன்  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் கொலை வழக்கு தொடர்பாக 1999 ம் ஆண்டு முதல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்னை தமிழக அரசாணைப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் எனக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண கொண்டாட்டங்களுக்காக எனக்கு ஒரு மாதம் பரோல் தர வேண்டும் என்று உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கோவை ஜெயில் சூப்பிரண்டு ஆகியோருக்கு எனது சகோதரர் கடந்த 1 ம்  தேதி விண்ணப்பித்தார். எனக்கு பரோல் கொடுக்கும் பட்சத்தில்தான் திருமணம் நடக்கும். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

இதற்கு சிறப்பு அரசுப் பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கொலை வழக்கில் சிக்கியுள்ள ஜாஹீரை வெளியே கொண்டு வருவதற்கு அதிக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல் நடக்கும் நேரத்தில் அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு மாதத்துக்கு ஒரு கைதியை பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள்.சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக மட்டுமல்ல, அவர் ஈடுபட்டிருந்த குற்றத்தின் தன்மையையும் கருதும்போது அவருக்கு ஒரு மாதம் பரோல் அளிப்பது நல்லதல்ல என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பி.ஜோதிமணி,

ஜாகிர் உசேன் பரோல் கேட்பது தனது திருமணத்துக்காகத்தானே தவிர வேறெதற்கும் அல்ல. எனவே 3 நாட்களுக்கு  பரோல் அளித்து உத்தரவிடுகிறேன்.அவருக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

ஜாஹிரின் ஒரு மாத கால பரோல் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறப்பு அரசுப் பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கூறிய காரணத்தில் ஒன்று, ”ஜாஹீரை வெளியே கொண்டு வருவதற்கு அதிக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல் நடக்கும் நேரத்தில் அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு மாதத்துக்கு ஒரு கைதியை பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள் என்பதாகும்.

தமிழகத்தில் 1 ,04 ,783 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், ஜாஹிரின் பாதுகாப்புக்கு  போலிஸ் கிடைக்க மாட்டார்களாம்.  நல்ல வேடிக்கைதான் போங்க. போலீஸ் கிடக்கவில்லை என்றால்  அரசியவாதிகள் பின்னாடி பாதுகாப்புன்ற பேருல ஒரு படை போலீஸ் அலையுதே;  அதிலிருந்து ரெண்டு பேரை போடவேண்டியதுதானே! மேலும், ஜாஹிரின் குற்றத்தின் தன்மை  குறித்தும் ப்ளீடர் பேசுகிறார். இதுபோன்ற கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்பாக பரோலில் வந்ததே இல்லையா? அல்லது பிளீடருக்கு  தெரியாதா?  பிளீடரின் உப்புச்சப்பில்லாத காரணத்தின் அடிப்படையில் ஒரு  திருமணம் செய்யவுள்ளவருக்கு மூன்று நாள் பரோல் என்பது மாபெரும் அநியாயமாகும்.

கடந்த காலங்களில், ஜாஹிரை விட கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு வழங்கப்பட்ட பரோலை பார்வைக்கு வைக்கிறோம்;

* கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் பிரேமானந்தாவுக்கு  ஒரு மாத காலம் பரோல் வழங்கிய நீதிமன்றம்.
* இதே பிரேமானந்தாவுக்கு சிவராத்திரி பூஜையில்  கலந்து கொள்ள இவருக்கு 6 நாட்கள் பரோலில் விடுதலை.
* மதவெறியை  தூண்டும் வகையில் தேர்தல் நேரத்தில் பேசிய வருண் காந்திக்கு  15 நாட்கள் பரோலில் விடுதலை செய்த உச்சநீதிமன்றம்.
* முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனனை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அவரது சகோதரர் பிரவீன் மகாஜன் 14 நாள் பரோலில் விடுதலை செய்த மும்பை நீதிமன்றம்.

இவ்வாறு  பட்டியல்கள் நீளும். ஏற்கனவே மதானிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுப்பதன் மூலம் அநீதியை காட்டிவரும் நீதித்துறை, இப்போது இந்த வழக்கில் குறைந்த நாள் பரோல் வழங்கி தனது அநீதியை தொடர்கிறது. என்ன செய்வது! சட்டத்தின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எப்போதுமே எட்டாக்கனிதானே!

-முகவை அப்பாஸ்.

 



சிதறு தேங்காயுடன் சேர்ந்து சிதறிய திமுகவின் பகுத்தறிவு? by ஆதம் ஆரிபின்
மார்ச்31, 2011, 3:16 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ,

சிதறு தேங்காயுடன் சேர்ந்து சிதறிய திமுகவின் பகுத்தறிவு?

பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமது அரசின் மருத்துவக் காப்பீடு குறித்த விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய பகுத்தறிவு முகமூடியை தானே கிழித்துக் கொண்டு தன்னுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தியதும் மக்களுக்கு நினைவிருக்கலாம்.

குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து மதத்தினர் கடவுளென நம்புபவர்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி. ஆனால் மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து மறைத்தார். மேலும், சாய்பாபாவுடனும்,அமிர்தானந்தமயியுடனும் மேடையில் காட்சிதந்து அருள்பாலித்தார்[?].அத்துடன் ‘கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதைவிட கடவுள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய பணியை செய்கிறேனா என்பதுதான் முக்கியம்’ என்று திருவாய் மலர்ந்தார்.

மேலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு புறவாசல் வழியாக சென்று விழாவில் கலந்து கொண்டதும் பத்திரிக்கைகளில்  பரபரப்பாக பேசப்பட்டது.  இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, மூன்று நாள் சுற்றுப் பயணமாக சென்னையிலிருந்து திருவாரூர் புறப்பட்டார் கருணாநிதி. பிரசார வேன் மூலம் திருவாரூர் புறப்பட கருணாநிதி வேனில் ஏறி அமர்ந்ததும், கோபாலபுரத்தில் அவர் வீட்டு முன் உள்ள வேணுகோபால்சாமி கோவிலுக்கு முன், சூறை தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இதற்காக, பிரசார வேன் சில நிமிடங்கள் நின்று, சூறை தேங்காய் உடைக்கப்பட்ட பின் புறப்பட்டு சென்றது.

‘சில வேண்டுதல்கள் அடிப்படையில் தேங்காய் உடைப்பது இந்துமதத்தவரின் நம்பிக்கை. ஆனால் தன்னை  நாத்திகன் என்று சொல்வதிலேயே ஆனந்தம் என்று கூறும் கருணாநிதி, தான் செல்வதற்கு முன்னால் தேங்காய் உடைத்ததை அனுமதித்தது எந்த நம்பிக்கையில் என்பதுதான் புரியாத புதிராகும்.

அடுத்து பிரச்சாரத்திற்கு செல்லும் தலைவரே தேங்காய் உடைத்து பக்திமயமாக  செல்கையில், அவரது கட்சி வேட்பாளர் என்ன நினைத்தாரோ ஒரு சாமியாரின் காலில்  சாஸ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றுள்ளார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின், 50வது பட்டம் ஜீயராக ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமி உள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க., சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆனந்த், தனது பரிவாரங்களுடன் ஜீயரை சந்தித்தபோது, திமுக வேட்பாளர் ஆனந்த், ஜீயர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிடும் தன்னை வெற்றி பெற ஆசி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். “நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்’ என, ஜீயர் ஆசி வழங்கினார்.

எல்லாம் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியோ? கி. வீரமணியார் கேட்டுச்சொன்னால்  நல்லாருக்கும்.

-முகவை அப்பாஸ்.

 



சேப்பாக்கம் மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிக ளில் மனிதநேய மக்கள் கட்சிக்கு எஸ்.டி.பி.ஐ ஆதர வு by ஆதம் ஆரிபின்
மார்ச்31, 2011, 10:31 மு.பகல்
Filed under: Abu Adhil

224 தொகுதிகளில்DMKகூட்டணிக்கும்,2தொகுதிகளில்MMK-விற்கும்SDPI ஆதரவு

சென்னை:சோசியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடாத மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில் கூறியிருப்பதாவது; “தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகள் போக எஞ்சியுள்ள தொகுதிகளில் திமுக கூட்டணிக்கும், சேப்பாக்கம் மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அறந்தாங்கி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ. தனது ஆதரவை தெரிவிக்கிறது.” என்றார்.

மேலும் எஸ்.டி.பி.ஐ. ஆதரிக்கும் இக்கட்சியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுமாறு பொதுமக்களுக்கும்,கட்சியின் தொண்டர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கலாம் by ஆதம் ஆரிபின்
மார்ச்31, 2011, 8:01 மு.பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , ,

ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கலாம் பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவ்லத் அரிக்கை வெளியிட்டுள்ளது.
2011ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் கடைசி நிமிட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் சிவப்பு மையால் ஹஜ் பயணி என்று தலைப்பிட்டு வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் இயல்பான கால அவகாசத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும் போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும் ஹஜ் பிரிவு என்று மாற்றி பாஸ்போர்ட் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : மீடியா வாய்ஸ்



திமுக நபரால் சென்னை பாரி முனை பள்ளி இடிப்பு by ஆதம் ஆரிபின்
மார்ச்31, 2011, 7:57 மு.பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , , , , , , ,
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
திமுக நபரால்  சென்னை பாரி முனை பள்ளி இடிப்பு!


சென்னை பாரி முனையில் இமேஜ் ஆப்டிகல் என்ற கட்டிடத்தின் மேல் பல வருடங்களாக அப்பகுதி வியபாரிகளுக்காக    தொழுகைப் பள்ளி ஒன்று நடை பெற்று வருகிறது!   அதை அந்த கட்டிட உரிமையாளர் பள்ளிக்கென வக்பு செய்து ,விற்றாலோ  அவரது வாரிசுகளோ உரிமை கொண்டாடக் கூடாது என சொல்லி தான் அந்த சொத்தை விற்றுள்ளார். ஆனால் வாங்கிய திமுக வடச்சென்னை  மாவட்ட செயலாளர் பாபுவின் அண்ணன் மகனாகிய சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர்  சீனிவாசன் எனும் தி.மு.க நபர் அதை மதிக்காமல் இரவோடு இரவாக தொழுகை பாய் ,  குரான்    போன்றவற்றை தூக்கி எறிந்து பள்ளியை இடிக்க துவங்கியுள்ளனர். மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவருக்கம் தகவல் தர
விஷயமறிந்த த.மு.மு.க த.த.ஜ  INTJ  SDPI  .சகோதரர்கள் அனைவரும் வர பொது மக்களோடு அனைவரும் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தனர். நிலைமை
கேள்வி பட்டு எஸ்,எம்.பாக்கர் நேரடியாக களத்திற்கு சென்று உதவி ஆணையர் சேஷ சாயி அவர்களிடம் பேசினார். பின்னர் சம்பந்தப் பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பள்ளி மீண்டும் அசர் தொழுகை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது!

பாபர் பள்ளிக்கு பின் இனியொரு பள்ளியை இந்த சமுதாயம் தயாராக இல்லை என்பதையும் ,   அதற்காக கருத்து வேறுபாடு மறந்து அனைத்து இயக்கங்களும் கை கோர்த்து காலத்தில் இறங்குவார்கள் என்பதையும் நாட்டுக்கு எடுத்துரைப்பதாக இந்த சம்பவம் அமைந்தது!
baakkar1.jpg

bakkar2.jpg

bakkar3.jpg

செய்தி : Abdul Razak <arazak8@gmail.com>



திமுக நபரால் சென்னை பாரி முனை பள்ளி இடிப ்பு! by ஆதம் ஆரிபின்
மார்ச்31, 2011, 7:52 மு.பகல்
Filed under: Abu Adhil



Follow

Get every new post delivered to your Inbox.

Join 761 other followers