பட்டினியால் தினமும் சோமாலியாவில் மடியும் பிஞ்சுகள்!

இந்த செய்தியை படித்தவுடன், ஏன் என்று கேட்க தோன்றும். எதுவும் புது நோய் பரவியுள்ளதா எனவும் கருத நேரும்.
ஆனால் இக்குழந்தைகளின் இறப்புக்கு காரணம் பட்டினி, என்றால் நம்ப முடிகிறதா? இது நமது நாட்டில் அல்ல. ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் இந்த கொடூரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
ஐ.நா., சபை தெற்கு சோமாலியா பகுதியை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி’ என அறிவித்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது. சோமாலியா மட்டுமல்லாமல், எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்கள், நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இங்கு உணவுப் பொருட்களுக்கான விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது.
அன்றாட உணவுக்கு கூட குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.
இங்கு குற்றங்கள் அதிகரிக்க, ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இந்நாடுகளில் ஏழ்மையும், ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்து உள்ளன. வறுமை இருக்கும் வரை வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது.
இந்த ஆபத்தில் இருந்து, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, “யுனிசெப்’ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, பல்வேறு முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பால், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளை வழங்கி, உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் காப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பசியால் வாடும் குழந்தைகளின் பேரிடரை துடைப்பதற்கு உதவுமாறு, “யுனிசெப்’ வேண்டுகோள் விடுத்துள்ளது. உதவி செய்ய விரும்புவோர் http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் “யுனிசெப்’ அறிவித்துள்ளது.
நன்றி : தினமலர்.
குறிப்பு: தமிழகத்தில் இயங்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தாங்கள் வசூலிக்கும் ஃபித்ரா தொகைகளை உண்மையிலேயே வறுமையில் வாடும் இந்த மக்களுக்கு அனுப்ப முயற்ச்சிக்கலாமே!
-முகவை அப்பாஸ்.
Filed under: Abu Adhil
பயங்கரவாதி, "மனிதன்’ அல்ல; உண்மையைச் சொன்ன மோடி!
சமீபத்தில் மும்பையில் நடந்த தொட குண்டுவெடிப்பையடுத்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சில கருத்துக்களை சொல்லியுள்ளார். அவை அனைத்தும் அக்கப்பூர்வமான கருத்துக்கள். அவற்றை படித்தால் பயங்கரவாதம் விஷயத்தில் மோடியின் ஆதங்கம் வெளிப்படுகிறது. ஆனால் மோடி சொல்லும் ஆலோசனையை மத்திய அரசு கடைபிடிக்கத் தொடங்கினால் என்னாகும் என்பதை கடைசியாக பார்ப்போம். இப்போது மோடியின் வார்த்தைகளிலிருந்து….
""மத்திய அரசின் வளைந்து கொடுக்கும் அணுகுமுறையால், பயங்கரவாதிகளுக்கு தெம்பு அதிகரித்து விட்டது. அதனால், இந்தியாவில், விரும்பும் இடத்தில் எல்லாம் தாக்குதல் நடத்துகின்றனர், மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போதைய மத்திய அரசு, பயங்கரவாதிகள் விஷயத்தில் வளைந்து கொடுக்கும் அணுகுமுறையை பின்பற்றுகிறது. அதனால், பயங்கரவாதிகளுக்கு தெம்பு அதிகரித்து, விரும்பும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்துகின்றனர். பயங்கரவாதத்தின் கோரப் பசிக்கு, நாட்டில் ஏராளமான மக்கள் இரையாகியுள்ளனர். இதுபோல் ஈவு இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. மன்னிப்பு என்பது மனிதர்களுக்குரியது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதி, "மனிதன்’ என அழைக்க தகுதியற்றவன். மதக் கலவரங்களை ஒடுக்க சட்டம் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டும் மத்திய அரசு, பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டுகிறது. அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகள், உறுதியான நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளன. இவ்வகையில், இந்தியாவிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக, கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான், பயங்கரவாதம் கட்டுக்குள் வரும்’ என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தின் கோரப் பசிக்கு, நாட்டில் ஏராளமான மக்கள் இரையாகியுள்ளனர். இதுபோல் ஈவு இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. மன்னிப்பு என்பது மனிதர்களுக்குரியது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதி, "மனிதன்’ என அழைக்க தகுதியற்றவன் என்று சொல்லும் மோடி, தனது வார்த்தையை தனக்கே பொருத்திப் பார்ப்பாரானால், ஏனைய பயங்கரவாதிகளை விட இவருக்கு கச்சிதமாக பொருந்துவதைக் காணலாம். ஏனெனில் தனது சொந்த மாநிலத்து மக்களையே கருவறுத்த பயங்கரவாதிதான் இவர். அதுமட்டுமன்றி அது பற்றிய ஆவணங்களும் இவரது அரசால் அளிக்கப்பட்டுள்ளன என்றால் இவர் பயங்கரவாதியா? அல்லது மகாத்மாவா? மோடி சிந்திக்கட்டும்.
மேலும் மோடியின் ரத்த கறைபடிந்த கையை கண்ட மற்றொரு மனிதகுல விரோத நாடான அமெரிக்காவே, ‘எங்கள் நாட்டுக்கு வந்து விடாதே’ என்று மோடிக்கு விசா மறுப்பதில் இருந்து மோடியின் பயங்கரவாதத்தை தெரிந்து கொள்ளலாம். எனவே மத்திய அரசு மோடியின் அறிவுரையை அமுல்படுத்த தொடங்கினால், முதலில் நடவடிக்கைக்குரியவர் மோடியாகவும், அடுத்து பயங்கரவாதத்தை ரதயாத்திரை மூலம் தொடங்கி வைத்தவர்களும் பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளுமான அத்வானி உள்ளிட்டோரும், அடுத்தபடியாக பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்மந்தப்பட்ட சங்க்பரிவார கும்பலுமாகத்தான் இருக்கும் என்பதை மோடி மறந்து விடக்கூடாது. மேலும் மத்திய அரசு உடனடியாக மோடியின் ஆசையை நிறைவேற்றவேண்டும். பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனாலும் மத்திய அரசு மவுனம் காக்கின்ற காரணத்தால், பயங்கரவாதிகளே பயங்கரவாதம் என ஓலமிட்டு காமெடி செய்கிறார்கள். என்னத்த சொல்றது?
- mugavai abbas mugavaiabbas
மனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம்

அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் பெரிய மார்க்க அறிஞர் ருத்தூஸ் என்ற பகுதிக்குச் செல்லும்பொழுது ரிக்கா என்ற இடத்தில் தங்குவது வழக்கம்.
அப்படி ரிக்காவில் தங்கும்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஓர் இளைஞர் பணிவிடை செய்து வந்தார். அத்தோடு அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் நபிமொழிகளையும் கற்று வந்தார்.
ஒருமுறை இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ரிக்கா வந்தபொழுது அந்த இளைஞரைக் காணவில்லை. அவர் எங்கே என்று விசாரித்தபொழுது அந்த இளைஞர் ஒருவரிடம் 10,000 திர்ஹம்கள் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதாகவும், அதனால் கடன் கொடுத்த மனிதர் புகார் கொடுத்ததன் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அந்த அறிஞர் கேள்விப்பட்டார். அச்சமயம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் அந்தப் பணம் இருந்தது.
உடனே கடன் கொடுத்தவரைக் கண்டறிந்து அன்றிரவு தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தார் அறிஞர். கடன் கொடுத்தவர் வந்தபொழுது அந்தப் பணத்தைக் கொடுத்து அந்த இளைஞரைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அத்தோடு இன்னொரு முக்கியமான வாக்குறுதி ஒன்றையும் வாங்கினார். அதாவது தான் தான் இந்தப் பணத்தைக் கொடுத்தேன் என்பது தங்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் மரணம் வரை தெரியக்கூடாது, குறிப்பாக அந்த இளைஞருக்குத் தெரியக்கூடாது என்பதே அந்த வாக்குறுதி. அந்த வாக்குறுதி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டார்கள்.
மறுநாளே அந்த இளைஞனர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரிடம் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் என்ன நேர்ந்தது என்று கேட்டார். நடந்ததைக் கூறிய அவர், “யாரோ ஒரு நல்ல மனிதர் அந்தப் பணத்தைக் கொடுத்து என்னை விடுவித்திருக்கிறார்” என்று சொன்னார். இதனைக் கேட்ட அறிஞர் உதவி செய்தது தான் தான் என்பது அந்த இளைஞருக்குத் தெரியாதது குறித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இப்படி வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியக்கூடாது என்ற அளவிற்கு அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களைப் போன்ற அந்த முந்தைய சமுதாயத்தவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
இதனைத்தான் அல்லாஹ் தன் திருமறையில் இப்படிக் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:262)
எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மூன்று நபர்களிடம் நாளை மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான், பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குக் கடும் வேதனையும் அளிக்கப்படும். அவர்களாவன: 1. தான தர்மம் செய்து விட்டு அதனை மக்களிடம் சொல்லிக் காட்டுபவன். 2. கரண்டைக்குக் கீழே ஆடைகளைத் தொங்க விடுபவன். 3. தனது பொருளை விற்பதற்காக பொய்ச் சத்தியம் செய்பவன்.“ (முஸ்லிம்)
நன்றி : தூது ஆன்லைன்.காம்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அரசியல், கன்னியாகுமரி மாவட்டம், காவல்துறை
சமூக தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் – போலீஸ் உயர் அதிகாரியிடம் மனைவி புகார்
திருவிதாங்கோடு(கன்னியாகுமரி மாவட்டம்):காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளால் அப்பாவி மக்கள் கொடுமைகளை அனுபவிப்பது தமிழகத்தில் வழக்கமாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சார்ந்த சமூகத் தொண்டரும், ஆட்டோ ஓட்டுநருமான பாபுல் ஹுதா என்பவர் மீது குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலைய காவல்துறையினர் பொய்வழக்கை புனைந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது மனைவியையும் தொந்தரவுச் செய்து மிரட்டிவருகின்றனர்.
காவல்துறையினரின் இந்த அராஜகம் குறித்து அவரது மனைவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுக்குறித்த விபரம் வருமாறு: குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, புளியடிவிளை பகுதியைச் சேர்ந்த பாத்திமா எனற பெண் நேற்று நாகர்கோவிலிலுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து தக்கலை காவல்துறை துணை ஆய்வாளர் மீது புகார் அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது கணவர் பாபுல் ஹுதா ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவரது வாகனத்தை மட்டுமே நம்பி எனது குடும்பம் உள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையினரால் புனையப்பட்ட 2 பொய் வழக்குகளில் நீதிமன்றம் எனது கணவரைக் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து இருந்த போதிலும் காவல்துறை பல்வேறு வழக்குகளில் எனது கணவரைத் தொடர்புபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனைக் காரணமாகக் கொண்டு எனது கணவர் நிரபராதி எனத் தெரிந்தும் எனது கணவர் மீது குற்றம் சுமத்தி எங்களது வீட்டினுள் அத்துமீறி நுழைவதும் அராஜகம் புரிவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கடந்த 24ம் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் தக்கலை துணை ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் 5 பேர் குடிபோதையோடு சீருடையில்லாமல் வீட்டினுள் நுழைய முற்பட்டு கதவினை உடைக்கும் விதமாக அடித்தனர். நான் சத்தம் கேட்டு ஜன்னல் திறந்து யார் என விசாரித்தேன். அவர்கள், “உன் கணவர் எங்கே? அவன் கையில் கிடைத்தால் தொலைத்து விடுவோம்” எனக்கூறி கதவைத் திறக்க கூறினார். நான் அதற்கு “என் கணவர் வீட்டில் இல்லை; நான் மட்டும் குழந்தைகளுடன் தனியே இருக்கிறேன். பெண் காவலர் இல்லாமல் வந்திருக்கிறீர்கள். நான் கதவைத் திறக்க மாட்டேன்” எனக்கூறினேன். பின்னர் அவர்கள் கதவை உடைக்க முயற்சித்ததால் கதவைத் திறந்தேன். பின்னர் வீடு முழுவதும் தேடினர். என் கணவர் வீட்டில் இல்லாதது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர், அவரது போட்டோவைக் கேட்டனர். நான் உயிருக்குப் பயந்து எனது கணவரின் புகைப்படத்தைக் கொடுத்தேன். பின்னர் எனது அறைக்குள் இருந்த பீரோவை அடித்து நொறுக்கினர். மேலும் வெளியில் இறங்கி வீட்டின் முன்நின்று கொண்டிருந்த எனது கணவரது ஆட் டோவையும் அடித்து நொறுக்கினர். “உன் கணவனை இன்று காலை 8 மணிக்குக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடு; ஒப்படைத்தால் அவன் உயிர்பிழைப்பான்”, என கொலை மிரட்டல் விடுத்துவிட்டு விட்டு சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக துணை ஆய்வாளர் வியஜகுமார் தலைமையில் காவலர்கள் மீண்டும் 25ம் தேதி இரவு 12 மணி அளவில் வந்து கதவைத் திறக்க கூறினார். நான் பயந்து கதவைத் திறந்தவுடன் எனது கணவரின் ஆட்டோ சாவியைக் கேட்டனர். நான் கொடுத்ததும் ஆட்டோவை எடுத்துக் கொண்டு “நாளை காலை 8 மணிக்குகள் உனது கணவர் காவல்நிலையத்திற்கு வரவில்லையென்றால் உனது குடும்பம் இந்த ஊரிலேயே இருக்காதபடி செய்து விடுவேன்” என மிரட்டிச் சென்றனர்.
எனது கணவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துவதைத் தவிர எந்த ஒரு சமூக விரோத செயலிலும் ஈடுபடுவது இல்லை. எங்கள் பகுதியில் அவருக்கு நற்பெயர் உண்டு. அனைவரது கஷ்டங்களுக்கும், ஓடோடி சென்று உதவி செய்து வாழ்ந்து வருகிறார். எந்தத் தொடர்பும் இல்லாமல் காவல்துறையினர் தொடர்ச்சியாக பொய் வழக்குகளில் சிக்க வைக்க முனையும் போது ஏற்படும் இழப்புகளால் எனது குடும்பம் பொருளாதார மற்றும் மன ரீதியான நெருக்கடிகளையும் சந்தித்து உள்ளது. இதேபோன்று நிலை காவல்துறையினரால் இனியும் தொடர்ந்தால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழிஇல்லை. எனவே எனது கணவர் மீது பொய் வழக்கு போடமுயன்று எங்களது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்து சட்ட விரோதமாக நடந்த காவலர் மற்றும் துணை ஆய்வாளர் விஜயகுமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி : தூது ஆன்லைன்
Filed under: Abu Adhil
நார்வே தீவிரவாதி – இந்துத்துவ தொடர்பு – திடுக் தகவல்கள்
புது தில்லி : நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
”2083: ஐரோப்பாவின் சுதந்திர பிரகடனம்” எனும் தலைப்பில் ப்ரிவேக் எழுதியுள்ள 1500 பக்க திட்ட ஆவணத்தில் 100 பக்கங்களுக்கு மேல் இந்தியா மற்றும் இந்துத்துவ சக்திகளை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் ஐரோப்பாவில் பரவுவதை தடுக்க தன் சகாக்களோடு இந்துத்துவ சக்திகள் தோளாடு தோளாய் போராட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இந்திய தேசியவாதிகளையும் சனாதன தர்மத்தை பாதுகாப்பவர்களையும் உண்மையான வீரர்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தன்னுடைய ஆவணத்தில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி (BJP, RSS and ABVP) யை குறித்தும் அவர்களின் இணையதளங்களிலிருந்து சான்றுகளை எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலையின் பெயரை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் பெயராலேயே அம்மலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வலதுசாரி வரலாற்றாசிரியர் ராவை மேற்கோளிட்டு இந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரேவிக் தான் இந்தியாவில் உள்ளவர்களோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளான். இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்ஸின் ராம் மாதவ் இது உள்நோக்கத்துடன் செய்யப்படும் பிராசரம் என்றும் வி.எச்.பியின் வினோத் பன்சால் பிரேவிக் இந்து தேசியவாதிகளை புகழ்ந்தது தேவையற்றது என்றும் கூறியுள்ளார். ஆனால் பி.ஜே.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கால் அத்தீவிரவாதியின் வழிமுறைகள் தவறென்றாலும் அவரின் சித்தாந்தத்தை தான் ஆதரிப்பதாக கூறினார்.
Source: http://www.inneram.com/2011072718101/norway-killer-has-links-with-hindutva-groups
Filed under: Abu Adhil
மகளை கடத்தி கட்டாய மத மாற்றம்; கர்நாடக பெற்றோர் கதறல்!
மகளைக் கடத்தி கட்டாய மத மாற்றம் செய்ததாக குமரியில் கர்நாடக பெற்றோர் கதறி அழுதனர்.
தக்கலை அருகே உள்ள செம்பருத்தி விளையை சேர்ந்தவர் சுனில் (25). 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கடந்த வருடம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள செல்போன் கடை ஒன்றில் பணி யாற்றி வந்தார். அப்போது பெங்களூர் ஹாசன் சிட்டி பகுதியை சேர்ந்த சைனபா என்ற பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் சைனபாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சைனபாவை பள்ளியை விட்டு நிறுத்தினர். இதன் பின்னர் செல்போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்த சைனபா கடந்த செப்டம்பர் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி காதலன் சுனிலுடன் குமரி மாவட்டம் வந்தார்.
இங்கு அவரது பெயரை சாரோஏஞ்சல் என மாற்றிய சுனில் சைனபாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையே சைனபா மாயமானது குறித்து அவரது பெற்றோர் ஹாசன்சிட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டு பல இடங்களில் தேடிவந்தனர்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சைனபாவை பிரசவத்திற்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுனில் அனுமதித்தார். அங்கு கடந்த 20ஆம்தேதி சிசேரியன் மூலம் சைனபாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. சைனபா மருத்துவமனையில் இருப்பதை எப்படியோ அறிந்த அவரது பெற்றோர் கர்நாடக காவல் துறையின் உதவியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன் குலசேகரம் வந்தனர்.
மருத்துவமனை அதிகாரிகளை சந்தித்த கர்நாடக காவல்துறையினர் சைனபாவை சுனில் ஏமாற்றி இங்கு அழைத்து வந்ததாகவும் அவர் சைனபாவை கொடுமை படுத்துவதாகவும் அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் அவரை பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியுள்ளது என்றும் அதனால் அவரை தங்களுடன் அனுப்பி வைக்குமாறும் தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவர்களோ, சைனபாவிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவரை இப்போது அனுப்பி வைக்கமுடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து கர்நாடக காவல்துறையினர் குலசேகரம் காவல்துறையின் உதவியை நாடினர். குலசேகரம் காவலர்களும் டாக்டர்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் சைனபாவின் பெற்றோரோ எப்படியாவது சைனபாவை தங்களுடன் அழைத்து சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது ஆதரவாளர்களுடன் மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் சுனில் நேற்று மதியம் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து சைனபாவை டிஸ்சார்ஜ் செய்து மருத்துவக் கல்லூரி பின் வாசல் வழியாக அழைத்துச் சென்று விட்டார். நீண்ட நேரத்திற்கு பிறகு சைனபா மருத்துவமனையை விட்டு சென்றதை அறிந்த சைனபாவின் பெற்றோர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Source: http://www.inneram.com/2011072718104/parents-complaints-against-forced-conversion
Filed under: Abu Adhil
தோப்புத்துறையில் நபி வழி திருமணம்
எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால்,
இன்று 25.07.2011 காலை தோப்புத்துறையில் உள்ள சகோதரர் சஹாபுதீன் அவர்களது திருமணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில், வரதட்சணை இல்லாமல், மணப்பெண் கேட்ட மஹர் கொடுத்து, மலர்மாலை இல்லாமல், அல்லிஃப் பைனஹுமா…. என்ற ஷியாகளின் துவா இல்லாமல், யாரோ ஒருவர் மணப்பெண்ணுக்கு பொறுப்பாளராக இல்லாமல் – பெண்ணின் தகப்பனாரே வலியாக இருந்து, இந்த நிக்காஹ் சிறப்பான முறையில் நடைபெற்றது.
தோப்புத்துறை மர்கஸ் நிர்வாக ஜமாத்தினரால் இந்த திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
வழக்கம் போல், இதனை ஒருசடங்காக, தோப்புத்துறை சுன்னத்துல் வல் ஜமாத்தினரால், தோப்புத்துறையில் உள்ள 4 பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளில், யாரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என்ற பொருள் படும்படி அறிவுப்பு செய்யப்பட்டது. மேலும், சமையல் வாடகை பாத்திரங்கள் மற்றும் திருமண விருந்து மண்டபம் கொடுக்க தடைவிதிக்கப் பட்டது.
அதனையும் மீறி திரளான மக்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
பாங்கு சொல்வதற்காக உள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியை, தவறான முறையில் பயன் படுத்துவது, தனிமனித உரிமையில் தலையிட்டு அவர்களை அவமானப் படுத்துவது, கட்டபஞ்சாயத்து ரீதியில் சமூக பகிஷ்காராம் செய்யமுயல்வது – போன்ற இந்திய அரசியலமைப்புக்கும், இஸ்லாமிய ஷரியத்துக்கும் விரோதமான செயல்களில் ஈடுபடும் விதமாக பள்ளைவாசல் ஒலி பெருக்கியை பயன் படுவதை நிறுத்தி – “தர்ஹாக்களில் நடைபெறும் கரகாட்டம், பிக் அப் டான்ஸ் போன்றவற்றிக்கும் ஜமாத்துக்கும் சம்பந்தமில்லை, நாங்கள் அதை நடத்தவில்லை” என்று – பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் கூறுவார்களானால் – இறைவனிடத்திலாவது நல்ல பெயர் கிடைக்கும்
Filed under: Abu Adhil
தலைபோகிற விஷயம்!
முதலில் இதைப் படியுங்கள்
பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) – 2011 கெஜட்டை (Part VI – Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றி, மதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.
ஜூலை (13) – 2011 இதழில் பெயர் மாற்றம் செய்துகொண்டோர் சுமார்1330 பேர். இவர்களில் மதம் மாறியோர் 106 பேர். அதன் சுருக்க விவரம் வருமாறு:
- இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியோர் 38 பேர். இது மதம் மாறியோர் எண்ணிக்கையில் 35.84 விழுக்காடு ஆகும்.
- இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 31 பேர். இது மொத்தத்தில் 29.24 விழுக்காடு ஆகும்.
- இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியோர் 5 பேர். இது4.71 விழுக்காடு.
- கிறித்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியோர் 18 பேர். இது16.98 விழுக்காடு.
- கிறித்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 3 பேர். இது2.83 விழுக்காடு.
- கிறித்தவத்திலிருந்து புத்த மதம் சென்றோர் 2 பேர். இது 1.88விழுக்காடு.
- இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள் 8பேர். இது மொத்தத்தில் 7.54 விழுக்காடு.
- இஸ்லாத்திலிருந்து கிறித்தவம் சென்றவர் ஒருவர். இது0.94 விழுக்காடு.
மதம் மாறிய முஸ்லிம்கள்:
| வ. எண் | பழைய பெயர் | பழைய பெயர் | தந்தை / கணவன் பெயர் | வயது | ஊர் | மாறிச் சென்ற மதம் |
| 1 | அஃப்ரோஸ் | நிவேதிதா | த /பெ. நேரு | 4 | கோவை | இந்து |
| 2 | ஷரஃபுந் நிசா | பிரியா | க/பெ. நேரு | 33 | கோவை | இந்து |
| 3 | தானிஸ்தா பேகம் | கீர்த்தினா | த/பெ. ஹைதர் ஷரீப் | 28 | சென்னை | இந்து |
| 4 | ஜமால் மைதீன் | பிரதீஷ் | த/பெ. சலாஹுத்தீன் | 23 | சென்னை | இந்து |
| 5 | முஸஃப்பர் | ரகு | த/பெ. யாசீன் | 37 | சென்னை | இந்து |
| 6 | மக்பூல் ஜான் (பெண்) | ஐஸ்வர்யா | க/பெ. சுந்தர் | 34 | சென்னை | இந்து |
| 7 | அப்துல் மஜீத் | மகேஷ் | த/பெ. நயினார் | 40 | சென்னை | இந்து |
| 8 | ஷேக் உஸ்மான் | பாலகிருஷ்ணன் | த/பெ. சிவன் | 32 | சென்னை | இந்து |
| 9 | மும்தாஜ் பேகம் | மும்தாஜ் பேகம் | த/பெ. ஷானு | 24 | சென்னை | கிறித்தவம் |
இவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்; இருவர் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறி, பின்னர் மதம் மாறியவர்கள் என்று தெரிகிறது.
இன்னொரு விவரம்: மதம் மாறிய இந்த 106 பேரில் இந்து மதத்திலிருந்து விலகியோர் 74 பேர்; அதே நேரத்தில், இந்து மதத்திற்கு திரும்பியோர் அல்லது புதிதாகச் சேர்ந்தோர் 26 பேர். மீதி 48 பேர் இந்து மதத்தைத் துறந்துள்ளனர்.
கிறித்தவத்திலிருந்து வேறு மதம் சென்றவர்கள் மொத்தம் 23 பேர். வேறு மதங்களிலிருந்து கிறித்தவத்திற்கு வந்தோர் 39 பேர். ஆக, 16 பேர் அதிகமாகியுள்ளனர்.
இஸ்லாத்திலிருந்து வேறு மதம் மாறியோர் 9 பேர். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் 34 பேர். ஆக, 25 பேர் அதிகமாகியுள்ளனர்.
ஏன் மாறினர்?
இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் சென்ற அந்த 9 பேர் ஏன் சென்றனர்? அவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்களாயிற்றே! காரணம் என்ன? பெற்றோர்களும் சமுதாயமும் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமல்லவா இது? அதிகாரபூர்வமாக அரசிதழின் ஒரு வெளியீட்டில் தெரிந்த எண்ணிக்கைதான் இது. வெளியுலகுக்குத் தெரியாமல் நடக்கின்ற மாற்றங்கள் எத்தனையோ!
பெரும்பாலும் இந்த மாற்றங்களுக்குக் காரணம் காதல் வலையில் சமுதாய இளவல்கள் சிக்கித் தவிப்பதுதான். கல்லூரிகள், விடுதிகள்,அலுவலகங்கள் ஆகிய ஆண் – பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, காதல் என்ற பெயரில் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது ஒரு வரட்டுத் துணிச்சல் என்பது திருமணத்திற்குப் பின்போ, கற்பை இழந்ததற்குப் பின்போதான் அந்த இளசுகளுக்குத் தெரிகிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போயிருக்கும்.
பெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், சமுதாயம், ஏன் விலைமதிக்க முடியாத ஈமானையே தூக்கியெறியத் துணியும் இன்றைய இளவல்கள் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்கத் தயாராயில்லை. காதல் மயக்கம், அதில் கிடைக்கும் தாற்காலிக சுகம்,சிறகடித்துப் பறக்கும் பக்குவமில்லாத பருவம், நண்பர்கள் தரும் ஊக்கம்,சினிமாத்தனமான ஹீரோயிஸம்… எல்லாம் சேர்ந்து எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகின்றன.
பெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுது புலம்பி, வெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக் குறுகி, அணுஅணுவாகச் செத்துக்கொண்டிருப்பதோ, உற்றார் உறவினர் பரிதவிப்பதோ,சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவோ எதுவும் காதல் போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. குறைந்தபட்சம்,தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதே பாணியைக் கையாண்டால்,தங்கள் நிலைமை என்னவாகும் என்பதைக்கூட இந்த விடலைகள் எண்ணிப்பார்ப்பதில்லை.
இதையெல்லாம் காதலுக்குச் செய்யும் ‘தியாகம்‘ என இவர்கள் சினிமா வசனம் பேசுகிறார்கள். சினிமா, நடைமுறைக்கு ஒத்துவராது என்பதும் இவர்களுக்கு உறைப்பதில்லை. மூன்று மணிநேர பொழுதுபோக்குக்காக,எதார்த்தங்களுக்கு எதிரான கற்பனைகளைக் கலந்து இளசுகளை நாசமாக்கிக்கொண்டிருக்கும் திரையுலகத்தினருக்குச் சிறிதளவேனும் மனசாட்சியும் சமூக அக்கறையும் இருக்க வேண்டும். பணம் மட்டுமே கோலோச்சும் அந்த உலகில் குணத்தை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.
அடிப்படை கோளாறு
பெற்றோர்கள், தம் பிள்ளைகளைக் கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்க்கிறார்கள்; கடன் பட்டாவது படிக்கவைக்கிறார்கள்; மக்களின் மனம் நோகாது, கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்; கொஞ்சம் வளர்ந்தவுடன் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கிறார்கள்.
ஆனால், பாலுக்கும் பாய்ஷனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்க்கவில்லையே! மார்க்கத்தின் அறநெறிகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள், மேலை நாட்டு நாகரிக்கத்தையல்லவா புகட்டுகிறார்கள்!
இதனால், நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம், மானம், ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப்பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலைதான் காணப்படுகிறது. தொழுகை, திக்ர், நோன்பு, நல்லுரைகள் கேட்பது, நல்ல பழக்கவழக்கங்கள், நபிவழி, நல்ல நண்பர்களுடனான பழக்கம் – இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காத வரை உங்கள் மக்கள் செல்வம் உங்களுக்குச் சொந்தமில்லை.
மதமாற்றத்திற்கு வறுமையும் ஒரு காரணம்தான். வறுமையால் ஈமானையே இழக்கத் துணிகின்ற ஒருவரிடம், அந்த ஈமான் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் பொருள். இதற்கும் பெற்றோரே காரணம்! சிறுவயதிலேயே இஸ்லாத்தைக் கற்பிக்க வேண்டும்! ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும்! மறுமையைப் பற்றிய சிந்தனையை ஊட்ட வேண்டும்!
அத்துடன், வறுமைக் கோட்டிற்குக் கீழே மூச்சுவிட முடியாமல் திணறும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற மஹல்லா ஜமாஅத்கள், இஸ்லாமிய அமைப்புகள், இளைஞர் மன்றங்கள் பாடுபட வேண்டும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்! இறைவன் வளர்ப்பான்!
ஆக, மதமாற்றம் என்பது சமுதாயத்தின் அழிவுக்கு அடிகோலும்;கலாசாரச் சிதைவுக்கு வழிகோலும்; நம் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும்! சம்பந்தப்பட்ட அனைவரும் இதன் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாகச் செயல்பட முன்வர வேண்டும்!
தகவல்: http://khanbaqavi.blogspot.com/2011/07/blog-post_22.html
தமிழ்நாடு அரசிதழில் வெளியானவர்களின் பெயர்விவரம்
http://www.scribd.com/doc/60623810/Gazette
– Khan Baqavi
Filed under: Abu Adhil
நாகை மாவட்டம், கோடியக்கரை’யில் நடந்த இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க் திருவிழா
Photos by : Murshid – Kodiyakarai
This slideshow requires JavaScript.

