Filed under: Abu Adhil
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே " அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்".
தங்களை இந்த மின்னஞ்சல் பூரண உடல் நலத்துடனும், உள்ளத்தில் ஈமானிய நிறைவுடனும் சந்திக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
மீண்டும் ஒரு புனித ரமலானை சந்திக்கும் நம் அனைவருக்கும் வல்ல இறைவன் தனது அருள் வளத்தையும், மன்னிப்பையும் நல்கிடுவானாக.
இப்புனிதமிகு மாதத்தில் வேகமாக வீசக்கூடிய காற்றைவிட வாரி வழங்கும் நல்லதொரு வழிக்காட்டுதலை விட்டுசென்ற வள்ளல் நபியின் வழிமுறையை பின்பற்றிடும் புண்ணியவான்களே! உங்களின் மேலான கவனத்திற்கு சில செய்திகளை முன்வைக்கின்றோம்.
தமிழக சிறைகளில் தற்போது 49 முஸ்லிம் சிறைவாசிகள் கடந்த 14 ஆண்டுகளாக தொடர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்களில் 37 பேர் கோவையை சேர்ந்தவர்கள். கடந்த ரமளானில் நம் தமிழ் மண்ணின் இஸ்லாமிய சொந்தங்களும், சவுதி வாழ் இஸ்லாமிய சொந்தங்களும் மற்றும் வளைகுடா வாழ் சகோதரர்கள் அளித்திட்ட உதவியின் காரணமாக, மிகுந்த சிக்கலான வழக்குகளிருந்து 13 , 14 , 15 , ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டிருந்த 6 சகோதரர்களை உச்சநீதிமன்றத்தின் வாயிலாக, இந்த சிறைவாழ் மக்களுக்காக அரும்பாடுபடும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை சகோதரர்கள் மீட்டெடுத்தார்கள் (அல்ஹம்துலில்லாஹ்). தொடர்ந்து மீதமுள்ள சகோதரர்களையும் மீட்டெடுக்க பெரும் அளவிலான பொருளாதார தேவை இருக்கின்றது. அதற்கு தாங்கள் அனைவரும் உங்களுடைய ஜகாத்தயோ அல்லது சதக்காவையோ வாரி வழங்கிட வேண்டுமென்று சிறைவாசிகள் பணிவன்புடன் கேட்டு கொள்கிறார்கள்.
நம்முடைய சிறு தொகையும் அவர்களின் சுதந்திர காற்றை சுவாசிக்க உதவிடுமானால் அவர்களும் குடும்பங்கள் செய்யும் துஆக்கள் நமக்கு நன்மையை பெற்று தரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அன்பிற்கினிய சகோதரர்களே,
முதலில் இந்த சிறைவாழ் சொந்தங்களை மீட்டெடுக்க தமிழகத்தின் தெருக்களில் உங்களை நாடிவரும் சகோதரர்கள் வேறு யாரும் அல்ல. சிறைவாசம் அனுபவித்து கொடிருக்கும் நம் சகோதரர்களின் ரத்த சொந்தங்கள்தான். நம்மை அணுகியிருக்கும் இந்த சகோதரர்கள் பெரும் உறுப்பினர்களை கொண்ட பேரியக்கம் அல்ல, சமுதாய மக்களை இரவு, பகல் என உடனுக்குடன் தொடர்புகொள்ளும் ஆற்றல் கொண்ட மீடியாக்களில் வலம் வருபவர்களும் அல்ல. மாறாக இவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரை மட்டும் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அனால் இந்த சிறைவாசிகளை மீட்டெடுக்கும் பணிக்கான பொருளாதார தேவைகளோ இவர்களை வழி தெரியாமல் விழி பிதுங்கச்செய்தபோதும், கடந்த ரமளானில் நம் சொந்தங்கள் அளித்த பேருதவியால், மாஷா அல்லாஹ், கடந்த 13 , 14 , 15 ஆண்டுகளாய் சிறைப்பட்டிருந்த சிறைச்சகோதரர்களை அவர்களின் சிக்கலான ( RSS அலுவலகம், ஸ்ரீதர் வழக்கு, நாகூர் ஆலிம் ஜார்ஜ் வழக்கு ) போன்ற வழக்குகளை உச்சநீதிமன்றம்வரை சென்று நல்ல சில வழக்கரிங்கர்களை வைத்து வாதாடி விடுதலை பெற்றிட முடிந்தது. இன்னும் இவர்களைப்போல் சிறையில் தங்கள் காலங்களை கழித்து கொண்டிருக்கும் நம் சிறை சகோதரர்களை மீட்பதற்காக இந்த ரமளானிலும் நம்மை நாடி நிற்கிறார்கள்.
இந்த மின்னஞ்சல் மூலம் எல்லா சிறைச்சகோதரர்களின் நிலைமையை எடுத்து கூற முடியாவிட்டாலும் ஒரே ஒரு சகோதரனின் நிலையை எடுத்து முன்வைப்பது இந்த மின்னஞ்சலுக்கு வலுவூட்டுதளாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
இணைக்கப்பட்டிருக்கும் மீதமுள்ள சிறைவாசிகளின் பட்டியலில், ஆறாவதாய் இடம்பற்றிருக்கும் சகோதரரின் பெயர் சகோ. அபுதாகிர். இவர் கிட்னி நோயாலும், இதய நோயாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் நோயும் முதிர்ச்சியின் காரணமாக வாரம் இருமுறை இவருக்கு dialysis என்னும் ரத்த மாற்றம் செய்யப்பட வேண்டும். மருத்துவர்களின் அறிக்கையின்படி இவருடைய உயிருக்கு மருத்துவ உத்திரவாதமின்மையால் எந்நேரமும் இறக்கலாம் என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் அதை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதி 13 ஆண்டுகள் ஆகியும் இவர்களை பிணையில் விட மறுக்கிறார்கள். என்ன ஒரு பாரபட்சம்? ஐந்து ஆண்டுகள் ஆனாலே எவ்வளவு பெரிய குற்றத்தை செய்த விசாரணை கைதியாக இருந்தாலும் பிணை வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது ஆனால் நம் சகோதரன் 13 ஆண்டாகியும் பிணை மறுக்கப்படுகிறதே இதை நாம் எங்கு சென்று முறையிடுவது.
என் சகோதரன் அபுதாகிர் மட்டும் இப்படி வாடவில்லை, சிறையில் உள்ள ஏனைய சகோதரர்களின் நிலையும் இப்படிதான் உள்ளது. தீரா நோய் பிடித்தவர்களாக, தாயையும் தந்தையையும் இழந்தவர்களாக, திருமணம் முடுத்து சில நாட்களிலேயே சிறைப்பட்டவர்கள், பெற்ற பிள்ளையை தூக்கி கூட கொஞ்ச முடியாத துர்பக்கியசாலிகளாக, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக, தங்களுடைய இளமை காலங்களையெல்லாம் இழந்து நம்மை நாடி நிற்கிறார்கள்.
இவர்கள் துயர் துடைத்திட வாருங்கள் கை கோர்ப்போம்.
இணைப்பு:
1 . சிறைவாசிகளுக்காக உதவிடுவீர் (நோட்டிஸ்)
2 . சிருபான்மாயில் உதவி அறக்கட்டளையின் செயலாளர் சகோ. சம்சுதீன் (கோவை வழக்கில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்து இப்போது பிணையில் வந்து மீதமுள்ள மக்களை மீட்டெடுக்க பாடுபடுகிறார்) அவர்களின் கடிதம்.
3 . சவுதியில் சிறைவாசிகளுக்காக வழக்கு நிதி வசூல் செய்ய சகோ. தமிமுல் அன்சாரி அவர்களின் பெயரில் அனுமதி கடிதம்.
4 .இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட சகோ. அபுத்தாஹிரின் சகோதர சகோதரியின் கடிதம், மருத்துவ சான்றிதழ் என அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.
வல்ல ரஹ்மான் தனது திருமறையிலே கூறுகிறான்;
وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.(76 : 8 )
ஓர் இறைவனையும், அவனது நபியையும் நம்பி பின்பற்றும் நாம் அனைவரும் சகோதரர்கள். சுதந்திரக்காற்றை சுவாசிக்க துடிக்கும் நம் சகோதரனை மீட்டெடுக்க போராடுவோம், பாடுபடுவோம், உதவிடுவோம்.
உங்களுடைய உதவிகளை வழங்கிட உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
சகோ. அன்சாரி (அல் – கோபர், சவுதி ) - 0555 090 269
சகோ. தவ்பிக் (துபாய் ) – 0559494653
கீழ் காணும் link ஐ அழுத்தவும்.
http://tamilmuslimtube.magnify.net/video/29512997299230212965299530072
Kovai Siraivaasigal Notice0001.pdf
Kovai Siraivaasigal Letter 10001.pdf
Abuthahir Report0001.pdf
Filed under: Abu Adhil
அன்னா ஹஜாரே ஆர்எஸ்எஸ் தொடர்பு யாவருக்கும் தெரிந்தது- இப்போது அமெரிக்கா தொடர்பும் உள்ளது அம்பலமான நிலையில் – சந்தேகம் பரபரப்பு!!!
18/08/2011
by யுஎம்என் சர்வதேச செய்திப்பிரிவு
டெல்லி: அன்னா ஹஸாரே நடத்தும் போராட்டத்திற்கு பின்னர் ஆர்எஸ்எஸ் இருப்பது திட்டவட்டமான நிலையில், இப்போது இந்த போராட்டத்திற்கு பின் அமெரிக்காவின் கை இருக்கிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இது பற்றி காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா வழக்கம் போல இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உலகெங்கிலும், இரான், மத்திய கிழக்கு நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் மற்றும் ஏன் ஐரோப்பாவிலும் கூட தனது வேலையை காட்டி ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவது, அமெரிக்காவிற்கு அல்வா சாப்பிடுவது போன்றது.
சில நாடுகளில் ஆட்சியை கவிழ்க்கும், சில நாடுகளில் கவிழ்க்கப்போவதாக கூறியே தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அமெரிக்கா.
இந்நிலையில், அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. அன்னாவின் போராட்டம் டெல்லியில் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறியது அமெரிக்கா.
இதற்கு இந்தியா கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிப்பது தேவையற்ற வேலை என்று இந்தியா கூறியிருந்தது.
தற்போது அன்னாவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் தவிர அமெரிக்காவும் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை காங்கிரஸ் கிளப்பியுள்ளது. அமெரிக்கா எதற்காக இந்தியாவில் நடக்கும் ஒரு போராட்டத்திற்கு ஆதரவாகப் பேச வேண்டும். அப்படி என்றால் இதற்கு பின் அமெரிக்கா இருக்கிறதோ என்று காங்கிரஸ் சந்தேகிக்கிறது.
இந்தியாவை சீர்குலைக்க சதி செய்யும் மறைமுக சக்தி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா என்று வெளிப்படையாகத் தெரிவிக்காமல் சூசகமாகத் தெரிவித்துள்ளது காங்கிரஸ்.
நாடாளுமன்றத்தில் வரைவு லோக்பால் மசோதாவை திணிப்பதன் மூலம் அன்னா குழுவினர் அரசையே பிளாக்மெயில் செய்கின்றனர். நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எதையும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அன்னா ஹாஜாரேவின் அமெரிக்க கள்ளத்தொடர்பு : காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
அன்னா ஹஸாரே ஒரு தனி ஆள். அவருக்கு எந்த அமைப்பும் கூட இல்லை. அப்படி இருக்கையில் இந்த இயக்கம் எப்படி தோன்றியது, வளர்ந்தது? கைது செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ செய்தியை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக உலகம் முழுவதும் பரப்பியது யார்?
இந்தியாவில் உள்ள எந்த ஒரு இயக்கத்தைப் பற்றியும் பேசாத அமெரிக்கா தற்போது முதன்முறையாக அன்னாவின் இயக்கத்தைப் பற்றி பேசியுள்ளது. நாம் தான் மற்றவர்களுக்கு ஜனநாயகப் பாதையைக் காட்டுகிறோம். ஆனால் அமெரிக்கா நமக்கே ஜனநாயகத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? இதனால் தான் சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சியா? CIA தொடர்பா?
அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு பின்னணியில் இருப்பதாகவும், இந்தியாவை சீர்குலைக்க முயல்வதாகவும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலேண்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் இருந்து வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. எந்த அடிப்படையில் இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயல்வதாக தகவல்கள் வெளியாகின்றன என்பதே தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடவேயில்லை என்று அமெரிக்கா ஏற்கனவே அறிக்கை வெளிட்டுள்ளது.
நாங்கள் கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறோம். இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளையும், கட்சிகளையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். அமைதியான போராட்டத்தையும், எதிர்ப்பையும் அனுமதிக்கும் பொறுப்பு அனைத்து ஜனநாயக அரசுகளுக்கும் உள்ளது. அதே நேரம் மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார்.
Anna Hazarae’s RSS connection is known to everybody. But with America jumping into the fray in support of Anna Hazare has made eyebrows to raise, as Anna Hazarae’s links with American establishment and CIA is being probed.
Filed under: Abu Adhil
ராசல் கைமாவில் எழுச்சியுடன் நடந்த “ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றூம் இப்தார் நிகழ்ச்சி”
அல்லாஹ்வின் அருளால் கடந்த 19-08-2011 – வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகம் – ராசல் கைமாவில் ராசல் கைமா மண்டலம் தமுமுக மற்றும் தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்திய ” ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் இப்தார் நிகழ்ச்சி கிராண்ட் ரெஸ்டாரான்ட் அரங்கில் நடைப்பெற்றது.
சகோ.தோப்புத்துறை இப்ராஹிம் அவர்கள் திருமறைக் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

துபை மண்டலம் தமுமுக தலைவர் மதுக்கூர்.அப்துல் காதர் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அமீரக துணை தலைவர் ஹுசைன் பாஷா அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்
தாயகத்திலிருந்து வந்திருந்த தமுமுக பேச்சாளர் கோவை ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் மரண சிந்தணை என்ற தலைப்பிலும் தமுமுக மாநில உலமா அணிச் செயலாளர் மவ்லவி. யூசுப் எஸ்.பி. சிறந்த சமுதாயம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.
- 312369 101502685396087152
- 190820110552
இஃப்தார் உணவு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மஹ்ரிப் தொழுகைக்கு பின்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு யூசுப் S.P அவர்கள் சிறப்பான முறையில் பதிலளித்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக ராசல் கைமா மண்டலத் தலைவர் கடியச்சேரி.ஹாஜா நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் துபாய், சார்ஜா மற்றும் ராசல் கைமாவின் புறப் பகுதிகளான ஜுல்பர், செல்பம், ரம்ஸ் ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோப்புத்துறை ஆதம்.ஆரிபின் தலைமையிலான குழுவினர் வெகு சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.
- 309129 101502685415237152
- 190820110612
நடைப்பெற்ற இப்தார் நிகழ்ச்சிக்கு நேஷனல் எலிவேட்டர்ஸ், எஸ்.டீ கார்கோ, யு.ஏ.இ எக்சேன்ச், தமிழ் தர்பார் – நஷ்மா உணவகம் மற்றும் ஆதம் ட்ரேட் ஆகிய நிறுவனங்கள் சார்பாக “ஸ்பான்சர்” செய்யப் பட்டது.
Filed under: Abu Adhil
- 19082011051
- 19082011054
- 19082011055
- 19082011056
- 19082011061
Filed under: Abu Adhil
உயர்கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT நுழைவு தேர்வு
இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்பு IIM-ல் உள்ள MBA படிப்பு தான், அதிக பட்சமாக ஒரு வருடத்திற்க்கு ஒரு கோடி (மாதம் 8 லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்படி அதிக சம்பளம் தரும் இந்த படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்சி பெற வேண்டும். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.
மேலாண்மை படிப்புகள் படிக்க (MBA) மத்திய அரசால் உறுவாக்கப்பட கல்வி நிறுவனம்தான் IIM (Indian Institute of Management ). தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் 13 இடங்களில் IIM-கள் உள்ளன. உலக அளவில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மை துறையில் மிக பெரிய பொருப்புகள் வகிப்பவர்கள் இந்த IIM- ல் படித்தவர்கள். மிக பெரிய நிறுவங்களை நிர்வகிக்ககூடிய அளவிற்க்கு உலக தரத்தில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதுவே உலகின் முன்னனி நிறுவங்களை இங்கு ஈர்க்க காரணமாகின்றது. CAT நுழைவு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் IIM மட்டுமல்லாமல் பிற அரசு மறும் தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்களிலும் MBA சேர்வதற்க்கு பயன்படுகின்றது.
CAT-2011 நுழைவு தேர்வை பற்றிய விபரம்
விண்ணப்பிகும் முறை : குறிபிட்ட Axis வங்கி கிளைகளில் CAT-2011 வவுச்சரை வாங்கி, இந்த www.catiim.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வவுச்சர் கிடைக்கும் Axis வங்கி கிளைகளின் முகவரி இந்த இணையதளத்தில் www.catiim.in/axisbank_branch.html உள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி தேதி : செப்டம்பர் 28
விண்ணப்பத்தின் விலை : ரூ.1,600
தேர்வு நடைபெறும் தேதி : இந்த தேர்வு அக்டோபர் 22 முதல் நவம்பர் 18 வரை தொடர்ந்து நடைபெறும், விண்ணப்பிக்கும் நபர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு : முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.
தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை மற்றும் கோவை உட்பட இந்தியாவில் 36 நகரங்களில் தேர்வு நடைபெறும்
இந்த தேர்வை பற்றி : இது கணினியில் எழுதும் தேர்வாகும். CAT தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி Quantitative Ability & Data Interpretation. இரண்டாம் பகுதி Verbal Ability & Logical Reasoning. ஓவ்வொரு தேர்வு எழுத 70 நிமிடங்கள் ஒதுக்கப்படும், மொத்தம் 140 நிமிடங்கள். தேர்வு எழுதும் முன் 15 நிமிடம் தேர்வை பற்றி விளக்கப்படும்.
இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?
இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் பொதுவாக எப்படி பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். இதற்க்காக பல்வேறு பயிற்சி மைய்யங்கள் தமிழகத்தில் உள்ளது, அங்கு சேர்ந்தும் பயிற்சி பெறலாம். பொதுவாக தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை www.tntj.net/8622.html -ல் உள்ளது.
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
இந்தேர்வை பற்றிய முழு விபரங்கள் sithiqu.mtech ஈ மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
S.சித்தீக்.M.Tech
Filed under: Abu Adhil
ராஸ் அல் கைமா மண்டல த.மு.மு.க மற்றும்
தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்தும்
“ஏகத்துவ எழுச்சி மாநாடு”
இடம் : கிராண்ட் ரெஸ்டாரண்ட் – அல் நக்கில், ராஸ் அல் கைமா
நாள் : ஆகஸ்டு – 19, வெள்ளிக்கிழமை, மாலை 4.30 அளவில்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: எச்சரிக்கை, பெண்கள், வெளியூர் பயணம்
| எச்சரிக்கை! : பெண்கள் வெளியூர் பயணம்! | ![]() |
![]() |
அன்புச் சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவருடைய தோழி. அந்த நோயாளிப் பெண் அவ்வப்போது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல் பரிசோதனை செய்து கொண்டு, மருந்து-மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம். அதுபோலத்தான் அன்றும் நடந்தது. இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு மருந்து-மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது. உடனடியாகத் தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக்கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சை பழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற பரபரப்பில் இருந்தனர். அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்ததுபோல அவர்கள்முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஓர் ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும். கணவன்-மனைவி போலத் தோன்றியது. ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து “நீங்கள்எங்கே செல்ல வேண்டும்?” என்று கேட்க, அதற்கு அவர்கள் “பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்” என்று சொன்னவுடன், “சரி ஏறுங்கள்” என்று ஓட்டுனர் சொல்ல,ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன்-மனைவி ஜோடி அந்தமுஸ்லிம் பெண்களைப் பார்த்து “வாங்க, வாங்க! நாங்களும் அங்குதான் செல்கிறோம்”என்று அவர்கள் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்க,அடுத்த சில வினாடிகளில் தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும் உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பெனஅறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர். ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது. மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல 5 நிமிடம்கூட ஆகாது. ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 10 நிமிடங்களாகியும் நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறு எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி, ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது. என்னசெய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!”என்று கதறியழ ஆரம்பித்தனர். உடனே, உள்ளே அமர்ந்திருந்த ஆண், மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் வைத்து, “சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்” என்று மிரட்ட, அவன் கூடவந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கக் கரியமணியைப் பறிக்க ஆரம்பித்தாள். முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயல முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே, முஸ்லிம் பெண் நிலை குலைந்துபோனாள். உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும் செயின்கள், தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு, இருவரையும் ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டு, மாயமாய் மறைந்து விட்டனர். அந்தஅதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூர்ச்சையுற்று விழ, உடன்சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள், அல்ஹம்துலில்லாஹ். பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை அடைந்து அந்தச் சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்தப் பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர் அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்து அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார். மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக்கொண்டது. அதில் சில ஆயிரம் ரூபாயும் செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன. நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள். இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
அன்புடன்,
அ. பஷீர் அஹமது, |
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ஏகத்துவ எழுச்சி மாநாடு, ராஸ்-அல்-கைமா, Ras Al Khaimah
சிறப்பு பேச்சாளர்கள் :
மவ்லவி இலங்கை முஹம்மத் நாஸர் அவர்கள்
—————————————————————————
055 1398 200 – 050 6903 993
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: குவைத், ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்
Filed under: Abu Adhil
இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசு
அஸ்ஸலாமு அலைக்கும்,,,
இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஸ்ஜீத்-அல்-ஹராம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை
நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு
கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். உலகிலேயே முதன்மையானதும் , மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து
நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.
![]()
http://www.youtube.com/user/MakkahLive
நன்றி : Dr.M.SATHICK, HHA.,RNMP.,ND.,FRIM.,MD(Acu)
Safa Acupuncture Clinic, Kottar, Nagercoil.
Mobile: 94433 89935, 89034 89935.
Web: www.darulsafa.com














அன்புச் சகோதர சகோதரிகளே!
