Filed under: Abu Adhil
மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது
நண்பர்களே கூகிள் வெப் ஹிஸ்டரி குறித்த நண்பரின் பதிவு இன்று வெளியாகியுள்ளது. நண்பர்க் கிரி அவர்கள் எழுதிவரும் தளத்தில் விரிவாக எழுதியுள்ளார் நம் தளத்தின் நண்பர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே இங்கே அவருடைய பதிவினை இங்கே மறுபதிப்பிக்கிறேன்.
மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகுள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங்களுக்கு தகவலை அறிவித்து இருக்கும் நீங்களும் வழக்கம் போல ஓகே கொடுத்து போய் இருப்பீர்கள் நாம என்னைக்கு இதை எல்லாம் படித்து இருக்கிறோம். கணக்கு துவங்கும் போது ஒரு பெரிய Agreement வரும் 99 % மக்கள் அதை படிக்காமலே Accept செய்து விடுவோம். இது போல ஒன்றில் தான் ஒரு சிலர் நமக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள்.
நீங்கள் கூகுள் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் சமீபத்தில் நீங்கள் நிச்சயம் இதை கவனிக்காமல் இருந்து இருக்க முடியாது. தன்னுடைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது அதாவது தன்னுடைய சேவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரப்போவதாகவும் இதை மார்ச் 1 முதல் செயல்படுத்தப்போவதாகவும் கூகுள் அறிவித்து இருந்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் Google Web History ஆகும். இது தான் தற்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
Google Web History என்றால் என்ன?
நீங்கள் எந்த உலவியை (Browser) பயன்படுத்தினாலும் நீங்கள் எந்தெந்த தளங்கள் சென்றீர்கள் என்பது பற்றிய தகவல்கள் உலவியின் History யில் சேமிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் வைத்து இருக்கும் settings ஐ பொறுத்து. யாராவது விஷயம் தெரிந்தவர் என்றால் இதை நோண்டினால் நீங்கள் எந்தெந்த தளம் சென்றீர்கள் இணையத்தில் என்னென்ன பார்த்தீர்கள் என்று எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.
இதையே கூகுள் எப்படி செய்கிறது என்றால்…கூகுள் சேவைகளில் நாம் என்னென்ன தளம் போகிறோம் எதை தேடுகிறோம் நம்முடைய விருப்பங்கள் என்னென்ன என்பது அனைத்தையும் சேமித்துக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் தளத்தில் உங்கள் பயனர் கணக்கு கொடுத்து உள்ளே சென்று இருக்கும் போது கூகுள் தேடுதலில் என்னென்ன செய்கிறீர்களோ அனைத்தும் சேமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். நீங்கள் How to remove the google web history என்று தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின் அந்தப் பக்கத்தை மூடி விட்டு புதிய பக்கத்தில் திரும்ப இதே வரியை தட்டச்சு செய்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே இதை தட்டச்சு செய்து இருந்ததால் அதுவே ஏற்கனவே நீங்கள் தட்டச்சு செய்த பழைய வரியைக் காட்டும். இது போல பல சேவைகளில் நீங்கள் செய்தது எல்லாம் சேமிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.
இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஏதாவது விவகாரமா தேடி இருந்தால் அதுவும் இதில் இருக்கும். மொத்தத்தில் உங்கள் ஜாதகமே இதைப் பார்த்தால் தெரியும். நாளை உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து ஆட்டையப்போட்டு இதில் போய்ப் பார்த்தால் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி விடும். எதை எதை தேடினீர்கள் என்று புட்டு புட்டு வைத்து விடும். கூகுளும் உங்கள் தேடுதலை அடிப்படையாக வைத்து செய்திகளை விளம்பரங்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்.
இதை எல்லாம் நீக்க நாளையே (29 Feb 2012) கடைசி நாள் அதனால் மறக்காமல் ஒத்திப்போடாமல் உடனே செய்து விடுங்கள். மார்ச் 1 க்கு பிறகு முடியாது. கூகுள் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து விடும்.
இதை எப்படி நீக்குவது?
https://www.google.com/history/ தளம் செல்லுங்கள் உங்கள் பயனர் கணக்கு கடவுச்சொல்லை (Password) கொடுத்தவுடன் பின்வரும் படம் போல வரும் இதில் நீங்கள் “Remove all web history” என்பதை க்ளிக் செய்தால் அனைத்து History யும் நீக்கி விடும் அதோடு இனி இது போல சேமிக்காது Pause செய்து விடும் உங்களுக்கு தேவை என்றால் On செய்து கொள்ளலாம் ஆனால் On (Resume) செய்ய வேண்டாம். கூகுள் தொடர்ந்து உங்கள் தகவல்களை எடுக்க முடியும் ஆனால் அனானிமஸ் ஆகத்தான் எடுக்க முடியும் உங்களையுடைய தகவல்கள் என்று கூற முடியாது.
இதை செய்ய 2 நிமிடம் கூட ஆகாது வழக்கம் போல சோம்பேறித்தனப்பட்டு மறந்து விடாதீர்கள். நீங்கள் பல்வேறு கூகுள் கணக்குகளை வைத்து இருந்தால் அனைத்திற்கும் இது போல தனித்தனியாக செய்ய வேண்டும்.
நாளை தான் கூறலாம் என்று நினைத்தேன் இது பற்றி தெரியாதவர்கள் கடைசி நாளில் கவனிக்காமல் இருந்து விட வாய்ப்புண்டு என்பதால் இன்றே கூறி விட்டேன். என்னுடைய தளத்தை படிப்பவர்களுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி உங்கள் நண்பர்களிடமும் இந்த செய்தி பற்றி தெரிவித்து அவர்களையும் எச்சரிக்கை செய்து விடவும்.
ஆங்கிலத்தளங்கள் இது பற்றி அதிகம் எழுதிக்கொண்டு இருக்கின்றன தமிழில் ஏன் முக்கியத்தளங்கள் இது பற்றி அமைதி காக்கின்றன என்று புரியவில்லை.
Read more: http://www.gouthaminfotech.com/2012/02/last-day-of-web-history-removing.html#ixzz1neuHnhRG
Filed under: Abu Adhil
பிப்ரவரி 25 முதல் புதுதில்லியில் உலக புத்தகக் கண்காட்சி
புதுதில்லி : புதுதில்லியில் 20 ஆம் ஆண்டாக உலக புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 25 முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை பிரகதி மைதானில் நடைபெற இருக்கிறது.
இப்புத்தகக் கண்காட்சியினை தேசிய புத்தக டிரஸ்ட் நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்துகிறது. இக்கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தக நிறுவனங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமல்லாது பல வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
1957 ஆம் ஆண்டு இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் சுதந்திர அமைப்பாக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் தேசிய புத்தக டிரஸ்ட் நிறுவனம். இந்நிறுவனம் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு மொழிகளில் நூல்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிறுவனம் மாதந்தோறும் செய்தி இதழை ஆங்கில மொழியில் வெளியிட்டு வருகிறது.
இதனைப் பெற கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு :
NATIONAL BOOK TRUST, INDIA
5, Nehru Bhawan, Institutional Area,
Vasant Kunj, New Delhi -110070
Phone No 011-26707700
nbtindia
CHAIRMAN
Prof. Bipan Chandra
Nehru Bhawan, 5-Institutional Area, Vasant Kunj, Phase – II
New Delhi-110070 Tel: + 91 11 26121880
E-mail: chairman
DIRECTOR
Mr.M.A.Sikandar
Nehru Bhawan, 5-Institutional Area, Vasant Kunj, Phase -II
New Delhi-110070 Tel: + 91 11 26121830
E-mail: directornbtindia.org.in
HEAD OFFICE
National Book Trust, India,
Nehru Bhawan, 5-Institutional Area, Phase – II, Vasant Kunj
New Delhi-110070 Tel: +91 11 26707700
E-mail: nbtindia
JT. DIRECTOR (ADMINISTRATION & FINANCE)
Ms.Farida M Naik
Nehru Bhawan, 5-Institutional Area, Vasant Kunj, Phase – II
New Delhi-110070
Tel : + 91 11 26121843
News : Muduvai Hidayath
Filed under: Abu Adhil
இறைவனின் திருப்பெயரால்..
சங் பரிவார சூழ்ச்சி தடுக்கப் பட்டது!
சமுதாய மானம் காக்கப் பட்டது!
சமுதாயப் பெண்களை காதல் என்கிற பெயரில் வளைத்து அவர்களை மதம் மாற்றும் செயலுக்கு ஊக்கமும் உதவித் தொகையும் வழங்கும் இந்துத்துவ அமைப்புகளின் சூழ்ச்சிக்கு தொடர்ந்து நம் பெண்கள் பலியாகி வருகின்றனர். நம்மால் இயன்ற அளவு பிரசாரத்தின் மூலமும் கண்காணிப்பு மூலமும் இதை தடுத்து வருகிறோம் ! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று கடற்கரையில் பிரச்சாரத்திற்கு சென்ற போது பிடிபட்ட 10 முஸ்லிம் பெண்களில் 9 பேர் முஸ்லிம் அல்லாதவர்களுடன் வந்திருப்பது தெரிந்து சமுதாயம் அதிர்ந்து போனது.
அதே போன்று அவர்களை திருமணம் செய்யும் பெண்கள் இஸ்லாமிய பெயர் மற்றும் அடையாளங்களோடு பத்திரிகை அடித்து பகிரங்கமாக முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த பகுதிகளிலேயே இந்த திருமணங்களை நடத்தும் நிலை சமிபத்தில் அதிகமாகி உள்ளது ! இது வேண்டுமென்றே நம்மை வம்புக்கிழுத்து நம் உணர்வுகளை சீண்டி பார்க்கும் செயலாக உள்ளது.
இது போன்ற ஒரு திருமண வரவேற்பு பத்திரிகை நமது கைகளில் கிடைத்தது ! திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோரை கிளை நிர்வாகிகள் அணுகி விசாரித்த போது அவர்கள் நாங்கள் தலை முழுகி விட்டோம் எங்கள் பேச்சை கேட்காமல் இது நடக்கிறது. என சொன்னார்கள்.
பெற்றோர் சம்மதம் இல்லாத நிலையில் இது வேண்டும் என்றே வம்புக்கிழுக்கும் நோக்குடன் முஸ்லிம்கள் அதிகம் வாழும் , பெண்ணின் பெற்றோர் வாழும் பகுதியில் மண்டபத்தை தேர்ந்தெடுத்து
சீண்டிப் பார்க்கும் இந்துத்துவா முயற்சி என அறிந்து மண்டப நிர்வாகியிடம் இந்த நிகழ்ச்சி நடந்தால் பிரச்னை ஏற்படும் என எச்சரித்தும் பலனின்றி போனதால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மற்றும் திருவல்லிக்கேணி நிர்வாகிகள் ஜாம் பஜார் காவல் நிலைய ஆய்வாளருக்கும் உதவி ஆணையருக்கும் புகார் அளித்து இதை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்கப் பட்டது.
மேலும் நீங்கள் இதில் நடவடிக்கை எடுக்கவில்லையாயின் மாபெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சந்திக்க நேரிடும் என உளவுத்துறை அதிகாரிகளிடத்தில் சொன்னதை அடுத்து உளவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப் பட்ட வீட்டிற்க்கே நேரே சென்று பிரச்சனையின் தீவிரத்தை எடுத்து சொல்லி, இந்த நிகழ்ச்சி நடந்தால் மிகப் பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது ! ஆகையால் நீங்கள் வேறு பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள் ! என அதிகாரிகள் கூறியுள்ளனர். கழுத்தில் புது தாலியும் நெற்றியில் குங்குமமும் வைத்திருந்த அந்தப் பெண்ணிடம் பேசிய அதிகாரிகள் நீ எப்போது இந்துவை திருமணம் செய்து விட்டாயோ அப்போதே நீ சட்டப்படி உன் பெயர் மாற்றி அந்தப் பெயரில் பத்திரிகை அடித்து நடத்துவது தான் முறையாகும் என எடுத்து சொல்லியதன் பெயரில் இந்த நிகழ்ச்சி நிறுத்தப் பட்டு சம்பந்தப்பட்ட மண்டப வாசலில் அதற்கான அறிவிப்பும் எழுதி வைக்கப்பட்டது. இந்துத்வாவின் குழப்பத்தை முறியடிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்த முயற்சியை பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ் !
உங்கள் கண் முன்னே ஒரு தீமை நடந்தால் கரம் கொண்டு தடுங்கள், இயலவில்லை என்றால் நாவால் தடுங்கள் -நபி மொழி
Attachment(s) from IBNU HUSSAIN
5 of 5 Photo(s)
Filed under: Abu Adhil
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
நீதி எங்கே?
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
1995 ஆம் ஆண்டு நாகூரில் நடைப்பெற்ற பார்சல் வெடிகுண்டு வழக்கில் தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கில் சேர்க்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் மவ்லவி js ரிபாயி அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை சமுதாய உறவுகளுடன் வன்மையாக கண்டிக்கிறோம், இந்நிகழ்வு தமிழக நீதித்துறையில் காவிகளின் கயவர்கள் இருப்பதை தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.
ஆயிரம் காவிகள் நீதித்துறையில் இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் இறுதி வெற்றி நமக்கே.
அன்புடன்,
குணங்குடி முஹைதீன்
9042942770
Filed under: Abu Adhil
ஆன்லைன் ஷாப்பிங் – சில எச்சரிக்கைகள்
|
Filed under: Abu Adhil
டாக்டர் ஜாகிர் நாயிக் சர்வதேச விருது பெற்றார் :
உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய வெப்சைட் ஆன் இஸ்லாம் டாட் நெட் சர்வதேச அளவில் இஸ்லாமிய மற்றும் சமூக சேவைக்காக அளிக்கப்படும் "முஸ்லிம் ஸ்டார் ஆப் தி இயர்"- 2011 விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து டாக்டர் ஜாகிர் நாயிக், அப்துல் ஹக்கீம் பைஸி, ஆகியோர் விருதுகள் பெற்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆன்லைன் வாசகர்களின் வாக்கெடுப்பு அடிப்படையிலேயே, கல்வி, சமூகத்துறையை சேர்ந்த பத்து பிரமுகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எமன் விடுதலைப் போராளியும் நோபல் பரிசுபெற்றவருமான தவக்குல் கர்மான், எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியில் இரண்டு கண்களை இழந்தும்கூட போராட்டக்களத்தில் உறுதியுடன் நின்ற அஹ்மத் ஹறாறா, குவைத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணரும் ஜீவகாருண்ய சேவகருமான அப்து ரஹிமான் சுவைத்,

சுடீஸ் பாடகர் மாஹின் சைன், கனடா ஹாக்கி நட்சத்திரம் நசீம் காதரி, பிரபல கிளினிக்கல் சைகோளஜிஸ்ட் டாக்டர் நாயிப் அல் முதவ்வ,

சைனீஸ் அழைப்பாளன் வெயில் இப்ராஹீம், பிரிட்டிஷ் கம்யூனிட்டி லீடர் தாரிக் ஜஹான், ஆகியோரும் பரிசுபெற்றவர்களாவர்.
தகவல் : P.A. சையத் முஹம்மது
Filed under: Abu Adhil
அரசு வேலைவாய்பு! – இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?
அதிரை-நிருபர்-குழு | Friday, February 10, 2012 | அதிரை , அரசு வேலை வாய்ப்பு , சேக்கனா M.நிஜாம் , பதிவது எப்படி
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.
இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
இணையதள முகவரி : www.tnvelaivaaippu.gov.in
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு : TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :
1. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.
2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?
ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.
3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?
ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?
தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்
5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?
ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்
6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?
முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.
7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?
இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.
8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?
நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.
தொடரும் இறைவன் நாடினால்….!
-சேக்கனா M.நிஜாம்
– http://adirainirubar.blogspot.in/2012/02/blog-post_10.htm
Filed under: Abu Adhil
டான்செட் நுழைவுத் தேர்வு
விஷ்வபாரதி
தமிழகக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர டான்செட் தேர்வு எழுத வேண்டும். இந்த முதுநிலைப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் முதுநிலைப் படிப்புகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதன் அடிப்படையில்தான் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும்.
எம்.பி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இளநிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். அரசின் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, அதைத் தொடர்ந்து இளநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு படித்ததும் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து அதற்குப் பிறகு லேட்டரல் என்ட்ரி மூலம் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பார்ம்., படிப்புகளில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
அசோசியேட் மெம்பர் ஆஃப் திஇன்ஸ்டிடியூஷன் ஆஃப் என்ஜினீயர்ஸ் சான்றிதழ் பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அந்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் ஆசிரியராகவோ அல்லது நிறுவனங்களில் பணிபுரிந்தோ இருக்க வேண்டும்.
எம்.சி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், ஏற்கெனவே சொல்லியபடி ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ படித்து விட்டு கணிதப்பாடத்துடன் இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் இடம் பெறும் மாணவர்கள், 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான்., போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., அல்லது பி.பார்ம், பி.எஸ்சி (வேளாண்மை, வனம், தோட்டக்கலை, மீன்வளம்) படிப்புகள் அல்லது அறிவியல் படிப்புகளில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. மூன்று ஆண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு மற்றும் இரண்டு ஆண்டு எம்.எஸ்சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளை படித்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதனுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தொழில்முறை அமைப்புகள் அல்லது சங்கங்களிடம் இருந்து ஏ மற்றும் பி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். அந்தச் சான்றிதழுடன் இரண்டு ஆண்டுகள் துறை சார்ந்த முன் அனுபவ சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
பி.இ., பி.டெக். படிப்புகள் தவிர்த்து லேட்டரல் என்ட்ரி மூலம் வேறு ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., படிப்புகளில் வாரஇறுதியில் நடைபெறும் வகுப்புகளில் படித்தவர்களும், பி.இ., பி.டெக். படிப்புகளில் தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்களுக்கும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாது. இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
டான்செட் நுழைவுத் தேர்வு மொத்தம் இரண்டு மணி நேரம். நுழைவுத் தேர்வில் எம்.பி.ஏ. கேள்வித்தாளில் பிசினஸ் டிசைன், கணிதம், ஆங்கிலம், காம்ப்ரிஹென்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். இந்தக் கேள்வித்தாளுக்கான மொத்த மதிப்பெண்கள் 100. மொத்தக் கேள்விகள் 100. குவாண்டிடேட்டிவ் அபிலிட்டி, அனாலிட்டிக்கல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், கம்ப்யூட்டர் அவர்னஸ் போன்ற கேள்விகளும் அடிப்படை அறிவியல் குறித்து சில கேள்விகளும் உள்பட மொத்தம் 100 கேள்விகள் எம்.சி.ஏ. நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் இடம்பெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில் உள்ள இந்தக் கேள்விகளுக்கான தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள் மூன்று பகுதிகளைக் கொண்டது. இதில் முதல் இரண்டு பகுதிகளும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது. முதல் பகுதியில் 30 கேள்விகளுக்கும், இரண்டாம் பகுதியில் மொத்தம் 45 கேள்விகளுக்கும் மாணவர்கள் விடையளிக்க வேண்டியதிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா ஒரு மதிப்பெண். அனைத்துக் கேள்விகளும் அப்ஜக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். இரண்டாம் பகுதியில் உள்ள 45 கேள்விகளில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளித்தால் போதும். பகுதி மூன்று மட்டும் மாணவர்கள் எடுத்துக்கொண்ட
சிறப்புத் துறைகளின் அடிப்படையில் கேள்விகள் அமைந்திருக்கும். இதில் மொத்தம் 40 கேள்விகள் இடம்பெறும். அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டியதிருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 31ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை நடைபெறும். எம்.சி.ஏ. படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 31ஆம் தேதி பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் முதல் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.
சென்னை, கோயமுத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் போன்ற 15 ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் எஸ்.சி. அருந்ததியர் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., போன்ற அனைத்துத் தேர்வுகளுக்கும் ஒரே விண்ணப்பம்தான். எனவே, மாணவர்கள் ஒரே விண்ணப்பத்தை மட்டும் பயன்படுத்தி இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில் தேர்வுக் கட்டணம் கூடுதலாக ரூ. 500 செலுத்த வேண்டியதிருக்கும். அதுபோன்ற நிலையில் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி அருந்ததியர் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. விண்ணப்பங்களை நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி உண்டு.
விண்ணப்பங்களை மற்ற மையங்களில் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யவேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 23.
விண்ணப்பங்கள் சென்னையில் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டிய கடைசிதேதி: பிப்ரவரி 25.
விவரங்களுக்கு : http://www.annauniv.edu/tancet2012




