Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அமீரகம் தோப்புத்துறை, அரசியல், அறிவிப்பு, இஸ்லாம், கல்வி செய்தி, தோப்புத்துறை
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அதிரை, அரசியல், இலங்கை, ஹிந்துத்வா, Editorials
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது - அதிரை ஏ.எம்.பாரூக்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
ஒரு வழியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழ்நாட்டு ஊடகங்களைத் தவிற வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இதற்காக மத்திய அரசை கடுமையாக சாடி எழுதி இருந்தன. கலைஞர் கருனாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து சாதித்து விட்டதாகவும் சாடி இருந்தன.
இனிவரும் காலங்களிலாவது ராணுவம் அப்பாவி மக்கள் மீது இது போன்று வரம்பு மீறுவது ஓரளவு குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம் ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் அமையாது ஐ.நா.வில் இயற்றப்படும் மனித உரிமை சம்மந்தமான சட்டங்கள் நெறிமுறைகள் அனைத்தும் பிற நாட்டவர்களுக்கு மட்டும் தான் அமெரிக்காவுக்கு மட்டும் கிடையாது இல்லை என்றால் இலங்கையை விடாது விரட்டிய அமெரிக்கா தனது ராணுவம் ஈராக்கின் அப்பாவி மக்கள் மீது வரம்பு மீறி அட்டூழியம் புரிந்ததற்காக கடும் நடிவடிக்கையை மேற்கொண்டிருக்கும் அல்லது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலாவது அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிருத்தி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கும் அதற்கு அபுகிரைப் சிறைச்சாலை சித்ரவதை ஒன்றுப்போதுமானதாகும் மீதமுள்ளவைகள் இந்த கட்டுரையில் பட்டியல் இட முடியாத அளவு நீளமானதாகும்)
கண்களை கசியச் செய்யும் நிகழ்வுகள்.
இலங்கையின் அப்பாவி மக்கள் (நிராயுதபாணிகள்) மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்கள் காண சகிக்காதது.
அப்பாவி தமிழர்களின் மீதான இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தைப் பார்த்த யாருடைய கண்களும் கசியாமல் இருக்காது அதனால் தான் அதைப்பார்க்க சகிக்காமல் கலைஞர் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி 27-4-2009 அன்று கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் இரண்டு கூலர்களை வைத்துக்கொண்டு கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்கி விட்டார்.
இன்று கலைஞர் அவர்கள் இலங்கை தமிழருக்கு மறுவாழ்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அறிவித்துள்ளார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் ஆனால் அவர்கள் கண்டு கொள்ள வில்லை என்றும் கூறுகிறார் (அரசியல் கூத்து).
மீண்டும் புலிகள் வரள மாட்டார்களா ?
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி இந்த ஆதரவு தீர்மானத்தால் மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.சபையில் எழுப்பியக் கேள்வி ஓட்டளித்த நாடுகளை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
காரணம் போருக்கு முன்னும் பின்னும் புலிகளில் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகள் போல் தப்பிச் சென்று விட்டனர் இவ்வாறு சென்றவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல asies பத்திரிகை கடந்த வருடம் தகவல் வெளியிட்டிருந்தது.
கடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியதும் நினைவிருக்கலாம்.
இவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியதாகக் காரணம் கூறியது.
இது ஒரு புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக 2011 அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.
அதனால் இலங்கைக்கான ஐ.நா தூதரின் கேள்வி சிந்திக்கக் கூடியது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இது விஷயமாக சிந்தித்து இலங்கை அரசுக்கு உதவ முன் வர வேண்டும்.
தமிழ்நாட்டில் செல்லாக் காசான புலிகள்
தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் நடத்திய கோரத் தாண்டவத்தால் தமிழ்நாட்டு மக்கள் அப்பொழுதே அவர்களை வெறுத்து விட்டனர் (ஜெயலலிதா,சோ உட்பட).
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களும் கூட புலிகளின் கொடூர குணத்தை அறிந்து அவர்களை விட்டு விலகியே இருந்தனர் ஆனாலும் இலங்கை ராணுவத்தின் நெருக்குதலை அறிந்த புலிகள் இந்த தடவை ராணுவம் நம்மை சும்மா விடாது என்பதை அறிந்து பல பகுதிகளிலிருந்தும் மக்களை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று தங்களுக்கு கேடயமாக்கினர். அப்பாவி தமிழர்கள் அதிகமாக கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
புலிகள் போரில் ஒடுக்கப்படுவதற்கு முன்னரே உலகம் முழுவதும் புலிகளுக்கான ஆதரவு குரல் ஒய்ந்து விட்டது இந்தியாவில் மட்டும் பிரபாகரனை இரகசியமாகச் சென்று சந்தித்து வந்த வை.கோ போன்றவர்களினால் அவ்வப்பொழுது ஒலித்துக் கொண்டிருந்தது இதில் புதிதாக சீமான் இணைக்கப்பட்டார்.
இதற்கெல்லாம் வெளிநாட்டில் வாழக்கூடிய புலிகள் ஆதரவு அமைப்பினர் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கனடாவில் உள்ள கர்நாடக தமிழர் பேரவை அமைப்பினர் இந்தியா ஓட்டளித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் இலங்கை மக்களுக்கான மறுவாழ்வு கிடைக்கும் வரை இந்தியாவில் போராட்டத்தை கடந்த காலத்தைப் போலவே வீரியப்டுத்துங்கள் என்று அறிவித்து உள்ளது.
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.வில் கேள்வி எழுப்பியது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.
கொலைவெறியும், இரத்த தாகமும்.
புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,
1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று கிராமத்தில் 40 முஸ்லீம்கள் கைகள் பிணைத்து கட்டப்பட்டு தலையில் சுட்டு வீழ்த்தியவர்கள்.
அதே ஆகஸ்டு 2ம் தேதி அதே பாணியில் மஜீத் புரத்தில் 15 முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியவர்கள்.
அதே ஆகஸ்டு 3ம் தேதி காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லீம்களை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு வீழத்தியவர்கள்.
தொடர்நது இடைவிடாமல் மூன்று நாட்கள் கொலைவெறி புலிகளால் நடத்தப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மீதான வெறியாட்டததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
1985ல் தொடங்கி இலங்கை ராணுவத்தினரின் கிடிக்கிப் படிக்குள் புலிகள் சிக்கும் வரை அவர்களால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

1987ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி யாழ்பானத்திற்குள் நுழைந்து முஸ்லீம்களுக்கு 2 மணிநேரம் மட்டும் கால அவகாசம் கொடுத்து உடுத்திய ஒருத் துணியுடன் கையில் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேற்றியவர்கள். 1990ல் மன்னார் முஸ்லீம்களை இதே பாணியில் வெளியேற்றியவர்கள்.
இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த நாட்டவருக்கும் தெரியாமலில்லை, தமிழ்நாட்டு வை.கோ.வுக்கும் தெரியாமலில்லை, சீமானுக்கும் தெரியாமலில்லை. கலைஞருக்கும் தெரியாமலில்லை, ஆனாலும் இனம் இனத்துடன் இணைந்தது.
இவர்களுக்கு உள்ள இன உணர்வும் கூட புலிகளுக்குக் கிடையாது அவர்களிடத்தில் ஊட்டப்பட்டது எல்லாம் கொலைவெறியும், இரத்த தாகமும் தான் அவர்களை எதிர்த்தால் யாராக இருந்தாலும் வேட்டையாடி விடுவார்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து புலிகள் அமைப்பை நிறுவிய எம்.ஜி.ஆர் எதிர்த்திருந்தாலும் கூட சுட்டுத் தள்ள முயற்சி எடுத்திருந்திருப்பார்கள் இவர்களின் குணத்தை அறிந்து பணம் போனாலும் பரவா இல்லை தலை தப்பினால் போதும் என்று எம்.ஜி.ஆர் சும்மா இருந்து விட்டார்.
தமிழீழ விடுதலை எனும் ஒரே சிந்தனையில் செயல்பட்ட மாத்தையா, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று இந்த காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
அதனால் இந்த ஆதரவு தீர்மானத்தால் கொலைவெறிப் பிடித்த இந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் வளர மட்டார்கள் என்பதற்கு உலக நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிராக திரட்டிய அமெரிக்கா உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.
இது தான் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் மீண்டும் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.
புலிகள் மீண்டும் வளர விடாமல் தடுப்பதற்கான திட்டத்தை வகுத்து இலங்கை அரசிடம் ஐ.நா. கொடுக்க வில்லை என்றால் மீண்டும் இலங்கை இரத்த பூமியாவதை எத்தனை நூரு அமெரிக்கா தலையிட்டாலும் தடுக்க முடியாது.
4:168,169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழி காட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
- அதிரை ஏ.எம்.பாரூக்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்……
அனைவருக்கும் என் இனிய “ஈதுல் அல்ஹா” எனும்
“ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.
இந்த தியாக திருநாளில்
அல்லாஹ்வின் அருள் நம்
அனைவர் மீதும் உண்டாகட்டுமாக,
இந்த தியாகத் திருநாளில் அனைத்து
மக்களுக்கும் பரக்கத்தையும், சந்தோஷத்தையும், நோயில்லாத வாழ்க்கையும்
அளவின்றி அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக..
ஆமீன் !… ஆமீன் !!… யாரப்பல் ஆலமீன்….!!
சகோதரவத்துடன்…
ஆதம்.ஆரிபின் (மண்ணடிகாகா.காம்)
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ஏகத்துவ எழுச்சி மாநாடு, ராஸ்-அல்-கைமா, Ras Al Khaimah
சிறப்பு பேச்சாளர்கள் :
மவ்லவி இலங்கை முஹம்மத் நாஸர் அவர்கள்
—————————————————————————
055 1398 200 – 050 6903 993
Filed under: Abu Adhil
நாகை மாவட்டம், கோடியக்கரை’யில் நடந்த இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க் திருவிழா
Photos by : Murshid – Kodiyakarai
This slideshow requires JavaScript.
மரணத்திடம் தோற்ற அவதாரம்!!

‘உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’, ‘சீரான உடல்நிலையில் உள்ளார்’ என்று சில நாட்கள் கூறப்பட்டு வந்த சாய்பாபா ஏப்ரல் 24 அன்று காலையில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினமே, அதாவது மார்ச் 28 அன்றே அவர் மரணமடைந்ததாகவும் ஆனால் நல்ல நாளில் அவரின் மரணத்தை அறிவிக்க வேண்டும் என்பதற்காக அவரின் குடும்பத்தினர் இதனை பிற்படுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர்.
நாள்தோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மரணங்களில் குறிப்பிட்டு சொல்லவதற்கு இவர் ஒன்றும் அரசியல்வாதியோ நாட்டின் தலைவரோ அல்ல. ஆனால் அவர்களுக்கு ஈடான ஒரு மதிப்பை இவர் பெற்றார், ஆன்மீகத்தின் காரணமாக. கடவுள்களுக்கு குறைவில்லாத இந்த தேசத்தில் கடவுளின் அவதாரங்களுக்கும் குறைவில்லை. மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் பணம், மானம், உயிர் என எதையும் சூறையாடுவதற்கு இந்த அவதாரங்களும் சாமியார்களும் தவறவில்லை. பிரேமானந்தா முதல் நித்தியானந்தா வரை பல ஆனந்தாக்கள் வந்தாலும் மக்கள் திருந்தியபாடில்லை.
சாய்பாபாவிடமும் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. பதினான்காவது வயதில் ஷீரடி சாய்பாபாவின் அவதாரமாக தன்னை தானே முடிசூட்டிக்கொண்டார். விபூதி முதற்கொண்டு கைக்கடிகாரம் வரை மந்திர சக்தி மூலமாக வரவழைத்த இவரின் தந்திரத்தை பலரும் போட்டுடைத்தனர்.
1993ஆம் ஆண்டு இவரது ஆசிரமத்தில் காவல்துறையினரால் இவரின் நெருங்கிய வட்டத்தை சார்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எதற்காக கொல்லப்பட்டனர்? மர்மம் இன்னும் நீடிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுகளும் இவர் மீதுண்டு. இருந்தபோதும் இவரின் புகழுக்கும் பக்தர்களுக்கும் எவ்வித குறையுமில்லை. சாமான்ய மக்கள் முதற்கொண்டு நாட்டின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் என அனைவரும் இவரின் பக்தர்கள். பெரியாரின் பகுத்தறிவு பாசறையிலும் அண்ணாவின் வழிகாட்டுதலிலும் வந்ததாக கூறிக்கொள்ளும் கலைஞர் இவருக்கு ஒரு பாராட்டு விழாவையும் எடுத்தார். இவரின் குடும்பத்தினர் பாபாவின் பக்தர்கள்.
இவை ஒரு புறம் என்றால்,போலி ஆன்மீகத்தை மக்கள் இனியாவது உணர்வார்களா என்ற கேள்வி மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது. தான் 94 வயது வரை உயிர் வாழ்வேன் என்றும் அதற்கு முன் அடுத்த சாய்பாபாவை அறிவிப்பதாகவும் சாய்பாபா தெரிவித்திருந்தார். கடவுளின் அவதாரம் என்று கூறியவருக்கு தான் இந்த உலகை விட்டு பிரியப்பபோகும் நாளை.. இல்லை.. வருடத்தை கூட அறியும் சக்தி இல்லை என்பதை தற்போது அனைவரும் அறிந்துள்ளனர்.
மரணத்தை வென்றவர் எவரும் இல்லை. மரணம் தங்களை அழைத்து செல்லும் நேரத்தையும் எவரும் அறிவதில்லை. 125 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்று உறுதியுடன் கூறிய காந்தியடிகளையும் ‘எனக்கு மரணமே கிடையாது’ என்று கூறிய யாகவா முனிவரையும் இதே பூமியில் தான் நாம் கண்டோம். இறுதியில் வென்றவர் யார் என்பதையும் நாமறிவோம். நிச்சயம் சம்பவிக்க கூடிய மரணத்தை மனித மனம் ஏனோ ஏற்க தயங்குகின்றது.
நித்திய வாழ்வும் நீடித்த ஆயுளும் வேண்டும் என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. இது மனித இயல்பு. மனிதனை படைத்த இறைவனை இந்த நித்திய வாழ்வை வைத்தே உள்ளான். மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை பெரும்பான்மையான மதங்கள் கூறுகின்றன.
இஸ்லாம் இதனை தெளிவாக கூறுகின்றது. இந்த உலக வாழ்க்கை பயிர் செய்யும் ஒரு பூமியே. இதற்கான அறுவடையை மனிதன் மரணத்திற்கு பின் வரும் மறுமை என்ற வாழ்க்கையில்தான் மேற்கொள்ள முடியும். இவ்வுலகில் மனிதன் நல்லறங்களை செய்தால் சுவனத்தை அடைவான், தீயறங்கள் புரிந்தால் நரகத்தில் புகுவான். சுவனமோ, நரகமோ இரண்டுமே நிலையான வாழ்க்கைதான். ஆக தன்னை படைத்த இறைவனை ஏற்றுக்கொண்டு, நல்லறங்கள் புரிந்து வாழ்ந்தால் மனிதன் நிச்சயம் சுவனத்தில், ஒரு நிலையான வாழ்க்கைக்காக பிரவேசிப்பான். இந்த நிலையான வாழ்க்கையை அடைய அவன் நிச்சயம் மரணிக்க வேண்டும். ஆனால், மரணம் முற்றுப்புள்ளி அல்ல…
சிந்தனைக்கு
-ஏர்வை ரியாஸ்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: Ansari, அன்சாரி, அரசியல், தமிழகம், தமீமுன் அன்சாரி, தேர்தல்2011, Thopputhurai, tmmk
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
மமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் இன்ஷா அல்லாஹ் வெற்றிப்பெறுவோம்
-தமீமுன் அன்சாரி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிட்டு பேசப்படும் முஸ்லீம் அரசியல் கட்சிகளில் ஒன்றான மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்கள் 11-மார்ச்-2011 வெள்ளிக்கிழமை காலை நம் அதிரைநிருபருக்காக அளித்த பிரத்தியோக நேர்கானல்.
நன்றி : அதிரை நிருபர்.காம்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அரசிய்ரல், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி, குண்டுவெடிப்பு, சுனில் ஜோஷி கொலை, பிரக்யாசிங் தாக்கூர், ஹிந்துத்துவ தீவிரவாதி, ஹிந்துத்துவா
சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூர் கைது
இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime Act (MCOCA) நீதிமன்றத்தின் அனுமதியுடன் மத்தியபிரதேச போலீஸார் பிரக்யா சிங்கை கைது செய்தனர். இதனை சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியன் தெரிவித்தார்.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்தாம் என்ற உண்மை வெளியானது.
ஜோஷி கொல்லப்பட்ட தினம் இவருடைய வீட்டிற்கு சென்ற பிரக்யா சிங் ஜோஷியின் பொருட்களையும் இதர ஆதாரங்களையும் அங்கிருந்து கடத்திச் சென்றதாக புலனாய்வுக்குழு கண்டறிந்தது.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ், நன்றி : பாலைவனத்தூது
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அமீரகம் தோப்புத்துறை, அரசியல், அறிவிப்பு, அல்-ஜன்னத், இந்தியா, இஸ்லாம், ஒற்றுமை, சமூகம், ஜனவரி-2011, ஹிந்துத்வா, India, Thamilagm, Thopputhurai
சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்…
இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி சிதறிப்போனார்களோ அதைப்போன்றே மற்ற சமூகங்களும் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம், அவர்களுடைய இந்த சூழ்ச்சியை முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் எந்தெந்த காலத்திலெல்லாம் இஸ்லாமிய சமுதாயம் ஓர் அணியில் ஒன்று சேரவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியதோ அப்போதெல்லாம் அந்த முயற்சியைத் தகர்ப்பதற்காக இஸ்லாத்தின் எதிரிகள் முழு முயற்சியோடு செயல்பட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.
நபிகளாரின் மறைவுக்குப்பின் 1420 வருடங்கள் ஆகியும் இன்றுவரை நபிகளார் காலத்தில் காணப்பட்ட சமூக ஒற்றுமையை காண முடியவில்லை. கொள்கையை காரணமாகக் கொண்டு பிரிந்தார்கள் அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்தார்கள். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக பிரிந்தார்கள். குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவதில் ஒவ்வொருவரும் சுயவிளக்கங்களைக் கொடுத்து பிரிந்தார்கள் தனி நபர்களின் மீதுள்ள பற்றின் காரணத்தினால் பிரிந்தார்கள் ஒவ்வொரு சாராரும் தங்களுடைய போங்கை நியாயப்படுத்துவதற்காக குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ் ஆதாரணங்களையும் தான் பயன்படுத்தினார்கள்.
இன்றய இஸ்லாமிய சமூகத்தையும் அது எதிர்நோக்கியுள்ள அவல நிலைகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் போது கடந்த காலங்களிலே சந்திக்க அதே நிலையைத் தான் சிறிதும் மாற்றமின்றி சந்தித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவிலும் அப்படித்தான் இருக்கிறது. வட்டார அளவிலும் அப்படித்தான் இருக்கிறது.
நாம் வாழும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் என்றைக்காவது இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டு ஒர்அணியில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை நம்மால் பார்க்க முடியவில்லை. நம்மைப் படைத்த இறைவன் அல்லாஹ்வை புரிந்து கொள்வதிலும் ஒன்றுபட்டவர்களாக இருக்கவில்லை.
சமுதாயத்தின் இப்படிப்பட்ட அவல நிலையை கண்கூடாக பார்த்தபோது தான் அறியாமையிலிருக்கின்ற மக்களுக்கு அல்லாஹ்வை புரிய வைத்து, அவன் தான் இறைவன் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஓர் இறைக் கொள்கையை நிலை நாட்டுகின்ற விஷயத்திலாவது சமூகத்தை ஒன்று கூட்டிவிடலாம் என்ற நல்லெண்ணத்தோடு, அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று எல்லோரும் சபதம் ஏற்போம் என்ற முழக்கத்தோடு இஸ்லாமிய சமூகத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் வீதியில் இறங்கினோம். அதனுடைய நல்ல பலனை கண் கூடாகக் கண்டோம். இலட்சியப் பயணத்தில் வெற்றியை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டிருப்பது சத்தியத்தின் எதிரியான சாத்தானுக்கு எப்படி நிம்மதியைத் தரும், வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பாணையை உடைத்த கதை போன்று, அல்லாஹ்வைப் பற்றி சரியாக புரியாமலிருந்த மக்கள் தெளிவுபெற்று அதிலேயே தங்களை ஐக்கியமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முழு மூச்சோடு செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் சாத்தான் சமூகத்தில் ஊடுருவி, சிந்தனை சலவை செய்து, வேறுபக்கம் சமூகத்தின் சிந்தனையைத் திருப்பும் முயற்சியில் இறங்கினான். பலவீனமான மனமுடைய மனிதன் திசைமாறி போகும் நிலை உருவாகி இன்று பல்வேறு திசைகளிலும் சமூகம் சிதறிச் சென்று கொண்டிருக்கிறது.
இதைப்பார்த்து கவலைப்பாடத நல்லுள்ளங்கள் இல்லாமல் இருக்க முடியாது. நாளுக்கு நாள் அதிகாரித்துச் செல்லும் பிரிவினை வாதம் முற்றுப் பெற்றுவிடாதா? ஒர் அணியில் ஒன்று பட்டுவிட மாட்டார்களா? என்று ஏங்கும் நெஞ்சங்களின் உணர்வுகளை நியாயமானவை.
இவர்களை எப்படி ஒருங்கிணைப்பது? ஏற்கனவே ஒன்று படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளெல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டு விட்டதே இனிமேலும் முயற்சிகள் பயனளிக்குமா? என்றெல்லாம் கேள்விகள் எழுவதில் தவறில்லை. அதேநேரத்தில், சிலர் வரட்டுத்தனமான வாதங்களையும், முரட்டுத்தனமான அனுகுமுறைகளையும், கசப்பான வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி, சமூகத்தை தாங்கள் விரும்புகின்ற விதத்தில் ஒன்று சேர்த்துவிடலாம் என மனப்பால் குடித்துவருகின்றனர். இவர்களின் அனுகுமுறைகளினால் சமூகம் எதிர்விளைவுகளைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குரோதமும் விரோதமும் கூடிக் கொண்டே போகிறது. இந்த அனுகுமுறையினால் எந்த வித பலனையும் எதிர்பார்க்க முடியவில்லை. இருக்கின்ற அணிகளோடு புதிதாக ஒரு அணியைத் தான் உருவாக்க முடிந்ததே தவிர, ஓர் அணியில் ஒன்று சேர்க்க முடியவில்லை.
இஸ்லாமிய சமூகத்தை ஒர் அணியில் ஒன்று சேர்க்க ஒரேவழி அல்லாஹ்வால் மனித சமூகத்திற்கு வழிகாட்டுவதற்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் எந்த இலட்சியத்தை முன்வைத்து மக்களை ஒன்றிணைக்க பாடுபட்டார்களோ அதே இலட்சியத்தின் பால் மக்களை அழைத்தால் மட்டுமே அவர்களை ஒர் அணியில் ஒன்று சேர்க்க முடியும்.
அதாவது அல்லாஹ், ஒருவனை மட்டுமே வணங்குங்கள் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள் என்ற இந்த இலட்சியத்தை சரியான முறையில் மக்களுக்கு புரிய வைக்கும் முயற்சியில் மட்டும் எல்லோரும் இணைந்து பாடுபடுவார்களானால் அல்லாஹ்வின் நாட்டத்தால் நிச்சயம் சமுதாயத்தை ஒர் அணியில் திரட்டி விடலாம். இந்த இலட்சியத்தை நிலைநாட்டும் முயற்சியைத்தான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் தமிழ் மக்களிடையில் 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
இன்று பலர் இந்த அடிப்படை இலட்சியத்தை மறந்துவிட்டு, அடிப்படை இல்லாத சில்லறை விஷயங்களில் மூக்கை நூழைத்து அதை பெரிது படுத்திக்கொண்டிருப்பதால் தான் சமூகம் சிதறிக் கொண்டிருக்கிறது.
எல்லா இறைத்தூதர்களும் தங்களுடைய மக்களை இப்படித்தான் அழைத்தார்கள்….
”என்னுடைய சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள் உங்களுக்கு அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை” (அல்குர்ஆன் 11:50)
அல்லாஹ்வின் இறுதித் தூதர் சொன்னார்கள்: ”நீங்கள் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள் வெற்றிபெற்று விடுவீர்கள்.
(நூல் : ஸஹீஹ் இப்னு குஸைமா)
நன்றி: அல்-ஜன்னத் ஜனவரி-2011 தலையங்கம்
மெயிலில்…ABU SITHIQ ( siddiquetsi@gmail.com )

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது – ஷக்கீல் அன்ஸாரி
இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை. இனப்படுகொலைக்கு பிறகு மாநிலத்தில் முதலீடுகளும், வளர்ச்சியும் குறைந்துள்ளது என ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சட்ட உதவிகள் அளிப்பதில் முன்னணியில் உள்ள அமைப்பான அசோசியேசன் ஃபார் ப்ரொட்டக்ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸின் தேசிய கன்வீனரான அன்ஸாரி கோழிக்கோட்டில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக கேரள மாநிலத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.
காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடி வெற்றிப் பெறுகிறார். ஆனால், அரசியல் ரீதியாக பா.ஜ.கவுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்களில் 33 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.
வழக்குகளை நடத்துவதிலும்,புனர்வாழ்வுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் தலைமை வகித்துவரும் இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத்தின் கன்வீனருமான ஷக்கீல் அன்ஸாரியின் மகனை மோடி அரசு பொய்வழக்கில் கைதுச்செய்து சிறையிலடைத்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், நன்றி ; பாலைவனத் தூது