கியாஸ் ஏஜென்சி / நெல்லை / முறைகேடு

நெல்லை மாவட்டத்தில் கியாஸ் ஏஜென்சி முறைகேடுகளை கட்டுப்படுத்த வேண்டும்


நெல்லை மாவட்டத்தில் கியாஸ் ஏஜென்சி முறைகேடுகளை கட்டுப்படுத்த வேண்டும்கலெக்டரிடம் தவ்ஹீத் ஜமாத் மனு நெல்லை, ஜன.1- நெல்லை மாவட்டத்தில் சமையல் கியாஸ் ஏஜென்சியில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது பற்றி தவ்ஹீத் ஜமாத் மூத்த தலைவர் சைபுல்லா நிருபர்களிடம் கூறியதாவது:- கேஸ் ஏஜென்சி முறைகேடு நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கியாஸ் ஏஜென்சிகளில் முறைகேடுகள் நடக்கிறது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக … Continue reading

இன்டர்நெட் / பரிசு / விளம்பரம்

இன்டர்நெட்டில் வரும் பரிசு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்


இன்டர்நெட்டில் வரும் பரிசு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்பொதுமக்களுக்கு, கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் சென்னை, ஜன.1- இன்டர்நெட்டில் வரும் பரிசு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- மோசடி கும்பல் அண்மை காலமாக இன்டர்நெட் மூலம் கவர்ச்சியான பரிசு விளம்பரங்களை வெளியிட்டு, மக்களை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றி வருகிறது. பல கோடி ரூபாய் பரிசு சீட்டு விழுந்துள்ளது என்றும், அந்த பணம் இங்கிலாந்து … Continue reading

புலனாய்வு

தேசியப் புலனாய்வு அமைப்பு செயல்படத் தொடங்கியது


தேசியப் புலனாய்வு அமைப்பு செயல்படத் தொடங்கியது புது தில்லி, டிச. 31: பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அமைப்பான தேசியப் புலனாய்வு அமைப்பு இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதற்கு ஓரிரு தினங்களில் தலைமை இயக்குநர் நியமிக்கப்படுவார். தேசியப் புலனாய்வு அமைப்பு அமைக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புதன்கிழமை தெரிவித்தார். முன்னதாக, தேசியப் புலனாய்வு அமைப்பை நிறுவ வகை செய்யும் தேசியப் புலனாய்வு அமைப்பு … Continue reading

இணையதளம் / தகவல்

பழைய தகவல்களுடன் அரசு இணையதளம்!


“பழைய” தகவல்களுடன் அரசு இணையதளம்! சென்னை, டிச. 31: தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன் றாக தமிழகம் கருதப்பட்டாலும், மாநில அர சின் இணையதளத்தில் இந்த வசதிகள் முழுமை யாகப் பயன்படுத்தப்படவில்லை அலுவலகத்திற்குள் காகிதங்கள் இல்லாமலே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துறைகளின் உயரதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரியும்கூட இணையதளத்தில் தரப்பட்டுள்ளன ஆனால், மின்னஞ்சல் மூலம் ஒரு தகவலைக் கேட்டால், அதற்குப் பதில் கிடைப்பது இல்லை. பெயரளவுக்குதான் கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, … Continue reading

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா / பொதுக்கூட்டம்

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா’ அமைப்பு பொதுக்கூட்டம்


பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா’ அமைப்பு பொதுக்கூட்டம் பெரியகுளம், டிச. 30: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய அரசியல் மாநாடு பிரசார பொதுக்கூட்டம் பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மனித நீதிப்பாசறை செயலர் எம். அப்துல்காதர் இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். மனிதநீதிப் பாசறைப் பாசறையின் மாநில தலைவர் எம். முஹமது அலி ஜின்னா, துணைத் தலைவர் ஷேக் முகமது தெஹ்லான், செய லர் ஏ.பக்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் எம்.தமீம்சேட் வரவேற்றார். … Continue reading

சென்னை / ஜனவரி / தமிழர் / பொருளாதாரம் / மாநாடு

சென்னையில் ஜனவரி 6, 7 தேதிகளில் உலகத் தமிழர்களின் முதல் பொருளாதார மாநாடு


சென்னையில் ஜனவரி 6, 7 தேதிகளில் உலகத் தமிழர்களின் முதல் பொருளாதார மாநாடு சென்னை, டிச. 30: சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் உலக தமிழர்களின் முதல் பொருளாதார மாநாடு ஜனவரி 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர், வி.ஐ.டி. தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய நாளான ஜனவரி 8-ஆம் … Continue reading

இல‌ங்கை / க‌விஞர் / துபாய் / நூல் / வெளியீடு

துபாயில் இல‌ங்கைக் க‌விஞரின் நூல் வெளியீடு


துபாயில் இல‌ங்கைக் க‌விஞரின் நூல் வெளியீடு http://www.muduvaivision.com துபாயில் ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சியின் ஆஸ்தான‌ க‌விஞர் இல‌ங்கையைச் சேர்ந்த‌ டாக்ட‌ர் ஜின்னாஹ் ச‌ர்புதீன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ‘வேர் அ‌றுந்த‌ நாட்க‌ள்’ எனும் க‌விதை நூல் வெளியீட்டு விழா 02.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ம‌ஹ்ரிஃப் தொழுகைக்குப் பின்ன‌ர் துபாய் க‌ராமா ப‌குதியில் அமைய‌ப்பெற்றுள்ள‌ சிவ் ஸ்டார் ப‌வ‌னில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியால் எழுதப்பட்ட பண்டார வண்ணான் நூலை காவியமாக … Continue reading