சென்னை / ஜனவரி / தமிழர் / பொருளாதாரம் / மாநாடு

சென்னையில் ஜனவரி 6, 7 தேதிகளில் உலகத் தமிழர்களின் முதல் பொருளாதார மாநாடு

சென்னையில் ஜனவரி 6, 7 தேதிகளில் உலகத் தமிழர்களின் முதல் பொருளாதார மாநாடு

சென்னை, டிச. 30: சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் உலக தமிழர்களின் முதல் பொருளாதார மாநாடு ஜனவரி 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர், வி.ஐ.டி. தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய நாளான ஜனவரி 8-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை அழைத்து கலை, பண்பாடு, பொருளாதாரம் குறித்து “”பிரவேசி பாரதிய திவஸ்” எனும் பெயரில் மத்திய அரசு மாநாடு நடத்துகிறது.

மத்திய அரசு நடத்தும் பிரவேசி 2009- ஆம் ஆண்டிற்கான மாநாடு ஜனவரி 8-ல் சென்னையில் நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் தமிழர்களுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாகத் தமிழர் பொருளாதார மாநாட்டை ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் சென்னையில் நடத்தவுள்ளோம்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் உள்ளூர் தமிழர்களையும் ஒருங்கிணைத்து, தமிழர்கள் பொருளாதாரத்தில் வளம் பெறவும், தமிழகத்தில் முதலீட்டை அதிகரிக்க செய்து அதன் மூலம் மாநிலத்தில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பை பெருக்குவதே இந்த மாநாட்டின் நோக்கம்.

இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், மேதைகள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்கள் என்றார் அவர்.

இந்தச் சந்திப்பில் சென்னை வளர்ச்சி கழகச் செயலர் வி.ஆர்.எஸ். சம்பத், தொழில் அதிபர்கள் வீரமணி, அபுபக்கர், வி.ஜி.பி.சந்தோஷம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s