கியாஸ் ஏஜென்சி / நெல்லை / முறைகேடு

நெல்லை மாவட்டத்தில் கியாஸ் ஏஜென்சி முறைகேடுகளை கட்டுப்படுத்த வேண்டும்

நெல்லை மாவட்டத்தில் கியாஸ் ஏஜென்சி முறைகேடுகளை கட்டுப்படுத்த வேண்டும்
கலெக்டரிடம் தவ்ஹீத் ஜமாத் மனு

நெல்லை, ஜன.1-

நெல்லை மாவட்டத்தில் சமையல் கியாஸ் ஏஜென்சியில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இது பற்றி தவ்ஹீத் ஜமாத் மூத்த தலைவர் சைபுல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

கேஸ் ஏஜென்சி முறைகேடு

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கியாஸ் ஏஜென்சிகளில் முறைகேடுகள் நடக்கிறது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. புதிய இணைப்பு கேட்பவர்களிடம் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கினால் தான் புதிய இணைப்பு தருவேம் என்று கூறுகின்றனர்.

இதுதவிர வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களை கல்யாண மண்டபங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய சிலிண்டர் கிடைப்பது இல்லை.

எனவே கியாஸ் வழங்கும் முறையை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து முறைகேடுகளை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் சிலிண்டர் கிடைக்கிறதா என்று அரசு உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளளோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்திவோம்.

திருமங்கலம் தொகுதி

தவ்ஹீத் ஜமாத் அரசியலில் போட்டியிடாத அமைப்பாகும். எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. எங்களுடைய அமைப்பினருக்கு யார் நல்ல வேட்பாளராக தெரிகிறார்களோ அவர்களுக்கு ஓட்டு அளிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். தற்போது உள்ள இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு சைபுல்லா கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர் ïசுப்அலி, பொருளாளர் நேஷனல் சாகுல், துணைத்தலைவர் ஜபருல்லா, கடைநல்லூர் நகர செயலாளர் முகமது காசிம், பொருளாளர் பாவா ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s