எல்கேஜி / பெற்றோர் / விண்ணப்பம்

எல்கேஜி விண்ணப்பம் பெற விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்

எல்கேஜி விண்ணப்பம் பெற விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்

சென்னை, ஜன.1: சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி சீனியர் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை காலையிலேயே பெற்றோர்கள் வரிசையில் நின்றனர்.

ஜூன் மாதம் தொடங்கவுள்ள வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் வழங்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களைப் பெற ஜனவரி 1-ம் தேதி காலை முதலே பெற்றோர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

சிறுவர், சிறுமியருக்கான 2 பள்ளிகளிலும் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர். உணவு, படுக்கை, போர்வை சகிதம் மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.

நிர்வாகத்தின் அறிவிப்பு: நிர்வாகத்தின் சார்பில் பள்ளிக்கு வெளியில் போடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையில் நிறைய விண்ணப்பங்கள் இருப்பதாகவும் அதனால் பெற்றோர்கள் இரவே வந்து வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை 9 மணி முதல் 12 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். வரிசைக்கான டோக்கன் கொடுத்தாலும் வாங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கூட்டு டோக்கன்: நிர்வாகம் அவ்வாறு அறிவுறுத்தியிருந்தாலும் பெற்றோர்கள் அவர்கள் தங்களுக்குள்ளாகவே டோக்கன் முறையைப் பின்பற்றினர்.

ஒரு நோட்டுப் புத்தகத்தில் பெற்றோரின் பெயர், அவருக்கான எண் மற்றும் செல்போன் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அதில் பெயர் கொடுத்தவர்கள் அனைவரும் உள்ளனரா என பரிசோதனையும் நடந்தது. அச்சமயம் அங்கில்லாதவர்கள் பெயர் வரிசையில் இருந்து நீக்கப்படுகிறது.

பெற்றோரின் புலம்பல்: பள்ளி நிர்வாகம் அதிக அளவு விண்ணப்பங்கள் இருப்பதாக கூறியிருந்தாலும் மக்கள் கூட்டம் சேர்வதைப் பார்க்கும் போது தானாக பயம் வந்துவிடுகிறது. அதனால் நாங்களும் வரிசைக்கு வந்து விட்டோம் என்றார் புவனேஸ்வரி என்பவர்.

தானாக ஏற்படுத்திக் கொண்ட வரிசை முறையும் பள்ளி வாயில் திறந்ததும் எல்லோரும் முந்தி அடித்துக் கொண்டு உள்ளே சென்றால் மாறி விடுமோ என்ற அச்சமும் உள்ளது என்கிறார் கணபதி.

மாற்று வழி: இவ்வாறு வருடா வருடம் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க பள்ளி இணையதளத்திலேயே விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வசதி செய்யலாம். அதற்கான பதிவுக் கட்டணத்தை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது பெற்றுக் கொள்ளலாம் என்கின்றனர் அங்குள்ள பெற்றோர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s