தம்பதி / மன்னிப்பு / முஸ்லிம் / விமானம்

அமெரிக்க விமான நிறுவனம் இந்திய முஸ்லிம் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டது

அமெரிக்க விமான நிறுவனம் இந்திய முஸ்லிம் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டது

வாஷிங்டன், ஜன.4-

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம் குடும்பத்தினரை விமானத்தில் இருந்து இறக்கி விட்டதற்காக அமெரிக்க விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

பயணிகள் சந்தேகம்

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட காசிப் இர்பான், அவரது சகோதரர் அதிப் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் வசிக்கின்றனர். அவர்கள் தங்களுடைய மனைவிகள், சகோதரி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஓர்லாண்டோ நகருக்கு `ஏர் டிரான்’ என்ற அமெரிக்க விமானம் மூலமாக கடந்த வியாழக் கிழமை புறப்பட்டனர்.

விமானத்தில் பாதுகாப்பான இடம் என்ஜின் பகுதியா, வால் பகுதியா, இறக்கை பகுதியா என்று அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சில பயணிகள், அவர்களைப்பற்றி விமான அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். உடனே, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் (எப்.பி.ஐ.) வந்து விசாரணை நடத்தி அவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறினார்கள்.

இலவச பயணத்துக்கு அழைப்பு

எனினும் இர்பான் மற்றும் அவருடன் வந்த 7 பேரையும் விமானத்தில் ஏற்றுவதற்கு விமான அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்களை விட்டு விட்டு விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், இர்பான் குடும்பத்தினரிடம் `ஏர் டிரான்’ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விமான டிக்கெட் பணத்தை திரும்ப தருவதுடன் வாஷிங்டனுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்து வரவும் அந்த நிறுவனம் உறுதி அளித்து இருக்கிறது.

இது தொடர்பாக ஏர் டிரான் வெளியிட்ட அறிக்கையில், `பாதுகாப்பு காரணமாக நடந்துள்ள அந்த பிரச்சினைக்காக நாங்கள் வருந்துகிறோம். எனினும், எங்களுடைய பயணிகளின் பாதுகாப்புக்காக எடுத்த நடவடிக்கையை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டு உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s