மது

கடந்த ஆண்டில் மட்டும் மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ரூ.471 கோடிக்கு மது விற்பனை

கடந்த ஆண்டில் மட்டும் மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ரூ.471 கோடிக்கு மது விற்பனை
முந்தைய ஆண்டை விட ரூ.90 கோடி அதிகரிப்பு

மதுரை, ஜன.4-

கடந்த ஆண்டில் மட்டும் மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ரூ.471 கோடியை எட்டியது. அதற்கு முந்தைய ஆண்டை விட ரூ.90 கோடி விற்பனை அதிகரித்து உள்ளது.

அதிகரிக்கும் விற்பனை

தமிழக அரசின் சார்பில் டாஸ்மாக் மதுக்கடைகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 307 டாஸ்மாக் மதுக்கடைகள் பொதுமக்களிடம் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இரவு 10 மணியுடன் கடைகளை அடைக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. நாளுக்குநாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஆண்டு தோறும் மது விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவில் திருவிழாக்கள், தீபாவளி, பொங்கல், ஜல்லிக்கட்டு உள்பட முக்கிய விழாக்களின்போது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு உற்சாகம் அடையும் இளைஞர்களும் பெருகி வருகிறார்கள். இதனாலும் அரசு மதுக்கடைகளில் நாளுக்கு நாள் விற்பனை அதிகரித்து வருகிறது.

ரூ.471 கோடி

கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மொத்த விற்பனை ரூ.381 கோடி ஆகும். ஆனால் கடந்த 2008-ம் ஆண்டு இந்த விற்பனை ரூ.471 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த மாதம் 31-ந் தேதி இரவு புத்தாண்டு விழா அனைத்து இடங்களிலும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. பொதுவாக புத்தாண்டை முன்னிட்டு மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். அதுபோலவே கடந்த 31-ந் தேதி அன்று ஒரு நாள் மட்டும் மதுரை மாவட்டத்தில் ரூ.2 கோடியே 13 லட்சத்துக்கு மது விற்பனை ஆனது. அதேபோல் கடந்த 1-ந் தேதியும் பலர் புத்தாண்டு தினத்தை கொண்டாடினார்கள். இதனால் அன்று மட்டும் ரூ.1 கோடியே 28 லட்சத்துக்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் 103 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. அதன் மூலம் டிசம்பர் 31-ந் தேதி மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கும், அடுத்த நாளான புத்தாண்டு அன்று ரூ.49 லட்சத்துக்கும் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளின் சார்பிலும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கடந்த மாதம் முதல் திருமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s