உரை / ஜப்பான் / பல்கலை / லாலு

ஜப்பான் பல்கலையில் லாலு உரை


ஜப்பான் பல்கலையில் லாலு உரை பாட்னா, ஜன. 4: ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குப் பாடம் நடத்த உள்ளார். இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தி தொடர்பாளர் ஷியாம் ரஜாக் கூறியதாவது: ஜப்பான் அரசின் அழைப்பின் பேரில் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் வருகிற ஜன-11ம் தேதி முதல் அந்நாட்டிற்கு 10 நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இந்திய ரயில்வே துறை குறித்து … Continue reading

குண்டு / பணிப்பெண் / விமானம் / வேலை

குண்டான, விமானப் பணிப்பெண்கள் வேலை நீக்கம்


குண்டான, விமானப் பணிப்பெண்கள் வேலை நீக்கம் புதுடெல்லி, ஜன.6- மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விமானப் பணிப்பெண்கள் 10 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது வேலை நீக்கத்துக்கு காரணம் அவர்களது குண்டான-அதிக எடை உள்ள உடல் ஆகும். அவர்கள் தங்களது எடையை குறைக்கும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டும் அதன்படி செய்யாததால் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் இதே போல … Continue reading

சாளரம் / திருநெல்வேலி / தோப்பில்

முகம் பார்க்கும் கண்ணாடி: தோப்பில் முகம்மது மீரான்


முகம் பார்க்கும் கண்ணாடி: தோப்பில் முகம்மது மீரான் திருநெல்வேலி, ஜன. 4: தமிழகத்தின் முகம் பார்க்கும் கண்ணாடியாக “சாளரம்’ இருப்பதாக சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் தெரிவித்தார். “கடந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு தினசரி பத்திரிகையின் குடும்ப விழாவில் கலந்து கொண்டேன். அந்த விழாவில் ஏதாவது ஒரு தமிழ் தினசரி பத்திரிகைப் பற்றிப் பேசக் கூறினார்கள். தமிழில் பல தினசரி பத்திரிகைகள் வெளிவந்தாலும், எனக்கு அப்போது தினமணி மட்டும்தான் நினைவுக்கு வந்தது. … Continue reading

மருத்துவமனை

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி அலைக்கழிப்பு: இலவச ஆம்புலன்ஸிலேயே பிறந்தது குழந்தை


அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி அலைக்கழிப்பு: இலவச ஆம்புலன்ஸிலேயே பிறந்தது குழந்தை சிதம்பரம், ஜன. 4: சிதம்பரம் அருகே குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் பிரசவத்திற்கு வந்த பெண் அலைக்கழிக்கப்பட்டார். பின்னர் 108 எண்ணில் தொடர்பு கொண்டு இலவச ஆம்புலன்ஸில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அப்பெண்ணிற்கு பிரசவமாகி குழந்தை பிறந்தது. சிதம்பரத்தை அடுத்த கீழக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் புலவேந்திரன். இவரது மனைவி கண்ணகி (27). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு … Continue reading

வட்டி / விருது

வட்டித் தொகையின் மூலம் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள்


கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள் சென்னை, ஜன.5: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு 30-வது புத்தகக் காட்சியில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார். அத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து, அதன் மூலம் … Continue reading

கவிதை / சங்கமம் / சென்னை / போட்டி

சென்னை சங்கமம் கவிதைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்


சென்னை சங்கமம் கவிதைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை, ஜன. 5: சென்னை சங்கமம் விழாவில் நடைபெறும் கவிதைப் போட்டிக்கு ஜனவரி 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கனிமொழி எம்.பி. நடத்தும் சென்னை சங்கமத்தின் ஒரு அங்கமான தமிழ்ச் சங்கமம் இலக்கிய நிகழ்வுகள்-09 ஜனவரி 11 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இப்போட்டியில் இந்த ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுக்கான கவிதைப் போட்டி நடைபெறுகிறது. சிறந்த கவிதைகளுக்கு முதல் பரிசாக ரூ.25 … Continue reading

சென்னை / புத்தகக் கண்காட்சி

ஜனவரி 8-ல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: அப்துல் கலாம் தொடங்கிவைக்கிறார்


ஜனவரி 8-ல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: அப்துல் கலாம் தொடங்கிவைக்கிறார் சென்னை, ஜன.5: 32-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொடங்கிவைக்கிறார். இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் ஆர்.எஸ். சண்முகம் ஆகியோர் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 32-வது சென்னை புத்தகக் காட்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் … Continue reading

முஸ்லிம் / மேல்நிலைப்பள்ளி

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ். முகாம் நிறைவு விழா


என்.என்.எஸ். முகாம் நிறைவு விழா கமுதி, ஜன. 5: கமுதி அருகே காட நகரியில் அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ். முகாம் நிறைவு விழா நடைபெற்றது. காட நகரியில் தொடர்ந்து 10 நாள் நடைபெற்ற சிறப்பு சேவை முகாமில் தெருச் சுத்தம், கிராம சாலை சீரமைப்பு, கோவில் உழவாரப் பணி, எய்ட்ஸ் ஒழிப்பு, பாலிதீன் ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி உள்பட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதை முன்னிட்டு பொது … Continue reading

திருவாடானை / மருத்துவமனை

திருவாடானை அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் அவதி


திருவாடானை அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் அவதி திருவாடானை, ஜன. 5: திருவாடானை அரசு மருத்துவமனையில் பத்து நாளாக தண்ணீர் இன்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனர். திருவாடானையில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. 30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பல நாளாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் உள் நோயாளிகளும், ஊழியர்களும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய வருவோர் வீட்டிலிருந்தே … Continue reading

பரமக்குடி / முஸ்லிம் / மேல்நிலைப்பள்ளி

பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்


என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் பரமக்குடி, ஜன. 5: பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். முகாம் பார்த்திபனூர் அருகே உள்ள பரளை கிராமத்தில் நடைபெற்றது. டிச.25-ம் தேதி தொடங்கி ஜன.3 வரை இம் முகாம் நடைபெற்றது. துவக்க விழாவுக்கு பள்ளித் தாளாளர் இ. அப்துல்ரஹிம் தலைமை வகித்தார். ஜமாத் தலைவர் எஸ்.என்.எம். முகம்மதுயாக்கூப், செயலர் எஸ்.என்.ஏ. முகம்மதுஈசா, கல்விக் குழு உறுப்பினர்கள் எஸ்.என். முகம்மதுயாசின், எஸ்.எம். சாகுல் ஹமீது, ஏ. லியாக்கத்தலி ஆகியோர் முன்னிலை … Continue reading