கவலை / மத்திய அமைச்சர் / மருத்துவம் / வசதி

தனியாரிடம் மருத்துவ வசதிகள்: மத்திய அமைச்சர் அன்புமணி கவலை


தனியாரிடம் மருத்துவ வசதிகள்: மத்திய அமைச்சர் அன்புமணி கவலை சென்னை, ஜன. 8: நாட்டில் 75 சதவீத மருத்துவ வசதிகள் தனியாரிடமே உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கவலைப்பட தெரிவித்தார். சென்னையில் நடைபெற்று வரும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில், வியாழக்கிழமை அவர் பேசியது: மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். எனினும் மத்திய அரசு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த ஆண்டு சுகாதாரத் … Continue reading

இந்தியர் / டத்தோ எஸ். சுப்பிரமணியம் / மலேசியா / வேலைவாய்ப்பு

"1.40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு’: டத்தோ எஸ். சுப்பிரமணியம்


“1.40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு’: டத்தோ எஸ். சுப்பிரமணியம் சென்னை, ஜன. 8: மலேசியாவில் 1.40 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று மலேசிய மனித வளத்துறை அமைச்சர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசியதாவது: இந்திய-மலேசிய நல்லுறவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இருநாடுகளுக்கு இடையே தொழில்-வணிக உறவு மேம்பட்டுள்ளது. இருநாடுகளின் வர்த்தகமும் 8 பில்லியன் டாலர் அளவுக்கு … Continue reading

சோர்வு / புத்தகம் / புத்துணர்ச்சி

சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன: அப்துல் கலாம்


சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன: அப்துல் கலாம் சென்னை, ஜன.8 : எனக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் புத்தகங்களே புத்துணர்ச்சியைத் தருகின்றன என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய 32-வது புத்தகக் காட்சியை, அப்துல் கலாம் தொடக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் உடல் நலக் குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி தொடக்க விழாவில் வாசிக்கப்பட்டது. அந்த வாழ்த்துச் செய்தியில் … Continue reading

உடல்நிலை / கலாம் / முன்னேற்றம்

கலாம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்


கலாம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் புதுதில்லி, ஜன.8: உடல் நலக்குறைவால் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். வெள்ளி அல்லது சனிக்கிழமை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர். தோல் நோய் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அப்துல் கலாமுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. அவரது உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவர்கள் … Continue reading

சாவு / பாலஸ்தீன்

பாலஸ்தீனியர்கள் சாவு எண்ணிக்கை 658 ஆக உயர்ந்தது


பாலஸ்தீனியர்கள் சாவு எண்ணிக்கை 658 ஆக உயர்ந்தது காசா, ஜன.9- பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 658 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு நாள் தாக்குதல் இல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட 2 வார காலம் நடந்த தாக்குதலில் நேற்று முன்தினம் தான் பாலஸ்தீனியர்கள் பொருள்களை வாங்குவதற்காக ஒரு நாள் மட்டும் தாக்குதலை நிறுத்தி வைத்தது. நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கியது. மிக உக்கிரமாக தாக்குதல் நடந்தது. 3 சிறுவர்கள் … Continue reading

கத்தி / கனடா / கைது / கொலை / பெண் / மாமனார்

கனடாவில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை மாமனார் கைது


கனடாவில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை மாமனார் கைது டொராண்டோ, ஜன.9- கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் காமிகர் சிங் தில்லான். இவர் தன் கடையில் இருந்தபோது 22 வயது மருமகள் அமன்தீப் கவுரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. போலீசார் அவரை கைது செய்தனர். அமன்தீப்பின் கணவர் கரீந்தர் சிங். இவர்களுக்கு 22 மாத குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை … Continue reading

கம்ப்ïட்டர் / சத்யம் / நிறுவனம் / வேலை

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் அடுத்த மாதம் 10 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள்


சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தில் அடுத்த மாதம் 10 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் புதுடெல்லி, ஜன.9- மோசடி புகாருக்கு உள்ளான `சத்யம் கம்ப்ïட்டர்ஸ்’ நிறுவனம், அடுத்த மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்யும் என்று `ஹெட்ஹன்டர்ஸ் இன்டியா’ என்ற பணியாளர் தேர்வு நிறுவனத்தின் தலைவர் கிரிஸ் லட்சுமிகாந்த் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:- சம்பளம் கொடுப்பதற்கே, சத்யம் நிறுவனத்திடம் பணம் இல்லை. எனவே, அடுத்த மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்படக்கூடும். உபரியாக சுமார் … Continue reading

ஊழியர் / கம்ப்யூட்டர் / சத்யம் / பதற்றம்

சத்யம் கம்ப்யூட்டர் ஊழியர்கள் பதற்றம்


சத்யம் கம்ப்யூட்டர் ஊழியர்கள் பதற்றம் பெங்களூர், ஜன.7: சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தில் நடந்துள்ள நிதி முறைகேடுகள் குறித்து அதன் தலைவர் பி.ராமலிங்க ராஜு வெளியிட்ட அறிக்கையையடுத்து, பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்தின் 6 ஆயிரம் ஊழியர்களிடையே புதன்கிழமை பெருத்த பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. தங்கள் பணியின் எதிர்காலம் எப்படி இருக்குமோ வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு இந்த நிறுவனத்தைச் சார்ந்த சாப்ட்வேர் ஊழியர்களிடையே புதன்கிழமை முற்பகலில் ஏற்பட்டது. அவர்கள் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தவாறு … Continue reading

தங்கக் காசு / பஞ்சாமிர்தம் / பரபரப்பு / வதந்தி

பஞ்சாமிர்தத்தில் தங்கக் காசு?: வதந்தியால் பரபரப்பு


பஞ்சாமிர்தத்தில் தங்கக் காசு?: வதந்தியால் பரபரப்பு திருமங்கலம், ஜன. 7: திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரம் புதன்கிழமை நிறைவுபெற்ற நிலையில், வாக்காளர்களுக்கு திமுகவினர் வழங்கிய பஞ்சாமிர்தத்தில் தங்கக் காசு இருப்பதாக ஏற்பட்ட வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது. வரும் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள திருமங்கலத்தில், ஆளும் கட்சியான திமுக சார்பில் பணம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவற்றுடன் அல்வா, சிக்கன், மட்டனும் வழங்கப்பட்டதாகப் புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலையில் திருமங்கலத்தில் சோமசுந்தரம் நகர் உள்ளிட்ட … Continue reading

நர்கிஸ் / போட்டி

நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய நாவல் – கட்டுரைப் போட்டி


நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘நாவல் -கட்டுரைப் போட்டியின் இறுதிகட்டத் தேர்வில் இடம் பெற்றோர் பட்டியல் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நமக்கு ஆதரவு நல்கியிருக்கிறார்கள். புதியவர்களுடன் மூத்த எழுத்தாளர்களும் கலந்து கொண்டு நம்மை கௌரவித்திருக்கிறார்கள். அந்தப் பெருமக்களுக்கு நம் முதல் நன்றி. முதல் கட்டத் தேர்வு முடிந்து இரண்டாம் கட்டத் தேர்வுக்கு நீதிபதிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள ஆக்கங்களை மட்டும் பட்டியலிட்டிருக்கிறோம். இதில் தேர்வு செய்யப் படும் ஆக்கங்கள் … Continue reading