கவலை / மத்திய அமைச்சர் / மருத்துவம் / வசதி

தனியாரிடம் மருத்துவ வசதிகள்: மத்திய அமைச்சர் அன்புமணி கவலை

தனியாரிடம் மருத்துவ வசதிகள்: மத்திய அமைச்சர் அன்புமணி கவலை

சென்னை, ஜன. 8: நாட்டில் 75 சதவீத மருத்துவ வசதிகள் தனியாரிடமே உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கவலைப்பட தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்று வரும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில், வியாழக்கிழமை அவர் பேசியது:

மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். எனினும் மத்திய அரசு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

இந்த ஆண்டு சுகாதாரத் துறைக்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 11-வது 5 ஆண்டு திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ரூ.1.40 லட்சம் கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

நாடு முழுவதும் கிராம சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருந்துப் பொருள்கள் உற்பத்தியில் 15 சதவீத வளர்ச்சி எட்டியுள்ளது.

தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்துக்கு உலகின் பல்வேறு அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன. எனினும் நாட்டில் மக்கள் தொகையின்படி 8 லட்சம் டாக்டர்கள் தேவைப்படுகின்றன்ர். மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.

தற்போது நாட்டில் 290 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு 32,500 மருத்துவர்கள் வெளியே வருகிறார்கள். இதை மேலும் அதிகரிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளையும், செவிலியர் பயிற்சி கல்லூரிகளையும் திறக்கவேண்டும்.

தமிழகத்தில் அரசு மருத்துமனைகளில் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

விரைவில் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் யோகா படிப்பு சேர்க்கப்படும். நாடு முழுவதும் விரைவில் தேசிய குழந்தைகள் சுகாதாரத் திட்டமும், தேசிய நகர் புற சுகாதாரத் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s