இந்தியர் / டத்தோ எஸ். சுப்பிரமணியம் / மலேசியா / வேலைவாய்ப்பு

"1.40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு’: டத்தோ எஸ். சுப்பிரமணியம்

“1.40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு’: டத்தோ எஸ். சுப்பிரமணியம்

சென்னை, ஜன. 8: மலேசியாவில் 1.40 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று மலேசிய மனித வளத்துறை அமைச்சர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசியதாவது:

இந்திய-மலேசிய நல்லுறவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இருநாடுகளுக்கு இடையே தொழில்-வணிக உறவு மேம்பட்டுள்ளது. இருநாடுகளின் வர்த்தகமும் 8 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சாலை மேம்பாடு, கட்டுமானம், கல்வி பரிமாற்றம், பயோ-டெக்னாலஜி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் மலேசிய நிறுவனங்கள் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளன.

மலேசிய சுற்றுலாத் துறையும் 15 சதவீத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆன்டு மட்டும் 2.50 லட்சம் பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதே அளவுக்கு மலேசியா வந்த இந்திய பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மலேசியாவுக்கு சட்ட விதிகளை மீறி வந்து ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட யாரையும் வேண்டும் என்றே சிறையில் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் மலேசிய அரசுக்கு இல்லை. இது குறித்து தூதரக அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அமைச்சர் சுப்பிரமணியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s