டாக்டர் ஜாகிர் நாயக்

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்


இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது. எல்லா மத … Continue reading

கூடைப்பந்து / சென்னை / தமிழ்நாடு / பிரச்னை

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கப் பிரச்னை: இம்மாத இறுதியில் சென்னையில் முடிவு?


தமிழ்நாடு கூடைப்பந்து சங்கப் பிரச்னை: இம்மாத இறுதியில் சென்னையில் முடிவு? சென்னை, ஜன. 9: தமிழக கூடைப்பந்து சங்கத்தை நிர்வகிப்பதில் இரு கோஷ்டிகளுக்கு இடையே எழுந்துள்ள பிரச்னைக்கு இம்மாத இறுதியில் தீர்வு காணப்படும் எனத் தெரிகிறது. ஆடவர், மகளிர் ஆகிய இரு பிரிவிலும் இந்தியாவிலேயே அதிகமான குழுக்களை (கிளப்புகள்) கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இங்குள்ள மாநில கூடைப்பந்து சங்கத்தை நிர்வகிப்பதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.என்.தியானேஸ்வரன் மற்றும் நடிகர் நெப்போலியன் கோஷ்டிகளுக்கிடையே பிரச்னை இருந்து வருகிறது. அவர்களால் … Continue reading

ஏ.ஆர்.ரகுமான் / விருது

ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க விருது


ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க விருது லாஸ் ஏஞ்சல்ஸ், ஜன.10- ஆலிவுட்டில் தயாரான ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்துக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். இவருக்கு அமெரிக்காவின் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது கிடைத்து உள்ளது. இந்த படம் சிறந்த படமாகவும், இதை இயக்கிய டானி பாய்லே சிறந்த டைரக்டராகவும், சைமன் பீயுபாய் சிறந்த திரைக்கதாசிரியராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். இதில் நடித்த நடிகர் தேவ் பட்டேல் சிறந்த நடிகராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த படம், மும்பையில் எடுக்கப்பட்டது. … Continue reading

இந்தியர் / ஜனாதிபதி / மாநாடு / விருது / வெளிநாடு

வெளிநாட்டு இந்தியர்கள் மாநாட்டு விருதுகள் ஜனாதிபதி வழங்கினார்


வெளிநாட்டு இந்தியர்கள் மாநாட்டு விருதுகள் ஜனாதிபதி வழங்கினார் சென்னை, ஜன.10- சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த வெளிநாட்டு இந்தியர்களுக்கான மாநாட்டு விருதுகள் நேற்று 13 பேருக்கு வழங்கப்பட்டன. மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை உரியவர்களிடம் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார். விருது பெற்றவர்கள் பெயர்கள் வருமாறு:- சுர்னாம் நாட்டு துணை ஜனாதிபதி ராம்டின் சர்ஜோ, மொரிசீயஸ் நாட்டு துணை ஜனாதிபதி அங்கிடி வீரய்யா செட்டியார் மற்றும் பக்ரைன் நாட்டை சேர்ந்த சோமன் பேபி, கனடா -தீபக் … Continue reading

காதல் / திருமணம்

ஆம்பூரில் போலீசார் சமரசத்தால் காதல் ஜோடி திருமணம்


ஆம்பூரில் போலீசார் சமரசத்தால் காதல் ஜோடி திருமணம் ஆம்பூர், ஜன.10- ஆம்பூரில், போலீசார் சமரசம் செய்து வைத்ததால், காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இதுபற்றிய விவரம் வருமாறு:- காதலில் கர்ப்பம் ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னரசன். அவரது மகள் ஷீபா (வயது 19). அந்தப்பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஷீபாவும், அங்கே வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (22) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் … Continue reading

இஸ்லாமிய வங்கி / தோஹா வங்கி / பொருளாதாரம்

இஸ்லாமிய வங்கி முறையே பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு: தோஹா வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரி


இஸ்லாமிய வங்கி முறையே பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு: தோஹா வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரி சென்னை, ஜன. 9: உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இஸ்லாமிய வங்கி முறையே தீர்வாக அமையும் என்று கத்தார் நாட்டில் உள்ள தோஹா வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.சீதாராமன் (படம்) கூறினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்த சீதாராமன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: வங்கித்துறையில் சர்வதேச அளவில் தோஹா வங்கி முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்திய … Continue reading

கைது / பதவிஎம்எல்ஏ / போன்

அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக எம்எல்ஏவிடம் போனில் பேசியவர் கைது


அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக எம்எல்ஏவிடம் போனில் பேசியவர் கைது திருநெல்வேலி, ஜன. 9 திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மு. அப்பாவுக்கு அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, பணம் கேட்டு தொலைபேசியில் பேசியவரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அப்பாவு எம்.எல்.ஏ.வை கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வந்துள்ளார். “திமுக மேலிடத்தில் தனக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாகவும், ரூ. 50 ஆயிரம் தந்தால் அமைச்சர் பதவி … Continue reading

இஸ்ரேல் / சென்னை / முஸ்லிம் லீக்

இஸ்ரேலுக்கு கண்டனம்…


இஸ்ரேலுக்கு கண்டனம்… பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் ஈடுபட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர். Continue reading