கல்லூரி / கவிதைப் போட்டி / சங்கமம் / தமிழ் / மாணவர்

தமிழ்ச் சங்கமம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 16-ல் கவிதைப் போட்டி

தமிழ்ச் சங்கமம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 16-ல் கவிதைப் போட்டி

சென்னை, ஜன. 12: தமிழ்ச் சங்கமம் சார்பில் அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை வகிக்கிறார். தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறந்த 10 கவிஞர்களுக்கு தலா ரூ.ஆயிரம் வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், 16-ம் தேதி காலை 9 மணிக்கு தியாகராய நகர் சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்துகொண்டு கவிதை படிக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s