கல்லூரி / பேச்சுப் போட்டி / மாணவர்

24-ல் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி


24-ல் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி சென்னை, ஜன.15: மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஜனவரி 24-ம் தேதி நடைபெறவுள்ளது. நட்பின் செழிப்புக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் வள்ளுவர் காட்டும் நெறிமுறைகள்’ (அல்லது) “பன்னாட்டு அரிமா சங்கங்களின் சமுதாய நலப்பணிகள்’ எனும் தலைப்பில் மாணவர்கள் பேச வேண்டும். மாணவர்கள் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும். சென்னை மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்கிருத கல்லூரியில் மாலை … Continue reading

சூரியன் / வெள்ளி

சூரியனை நெருங்குகிறது வெள்ளி


சூரியனை நெருங்குகிறது வெள்ளி புது தில்லி, ஜன. 15: சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளிக் கிரகம் (வீனஸ்), சூரியனை மிகவும் நெருங்கி வந்துள்ளது. இதனால், இரவில் வெள்ளிக் கிரகத்தை தெளிவாகக் காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பொங்கல் அன்று வெள்ளிக் கிரகம் நீண்ட நேரம் வானில் ஒளிர்ந்ததாகவும், அடுத்த சில வாரங்களுக்கு அதனைத் தொடர்ந்து காண முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறினர். மார்ச் மாதத்தில் சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் வெள்ளி இடம் பெயர்ந்து விடும் என்பதால் … Continue reading

காவலர்

ஐஜிக்கே அபராதம் விதித்த காவலர்


ஜிக்கே அபராதம் விதித்த காவலர் பெங்களூர், ஜன.15: சாலையில் போக்குவரத்து விதியை மீறியதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலே அபராதம் கட்ட நேரிட்டது. இந்தச் சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இதன் விவரம் வருமாறு: கர்நாடக மாநில மனித உரிமை பாதுகாப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிபின் கோபால் கிருஷ்ணா. அவர் ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரியாவார். அவர் பெங்களூர் பிரிகேட் சாலை சந்திப்புக்குச் செல்வதற்காக சர்ச் தெருவில் இருந்து ஒரு தனியார் காரில் வலதுபுறம் திரும்பி எம்ஜி … Continue reading

கேரளா / நீதிமன்றம் / வழக்கு

கேரளத்தில் ஒரே வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை


கேரளத்தில் ஒரே வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை கோழிக்கோடு, ஜன. 15: கேரளத்தில் ஒரு வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கோழிக்கோடில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பாபு மாத்யூ பி.ஜோசப் வியாழக்கிழமை இந்த உத்தரவை வழங்கினார். கடந்த 2003-ம் ஆண்டு மராத் என்ற பகுதியில் கடற்கரை பகுதி அருகே நடந்த கலவரத்தில் 9 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 139 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் … Continue reading

நாடாளுமன்றம் / பிப்ரவரி

பிப்ரவரி 12-ல் கூடுகிறது நாடாளுமன்றம்


பிப்ரவரி 12-ல் கூடுகிறது நாடாளுமன்றம் புதுதில்லி, ஜன.15: பதினான்காவது மக்களவையின் நிறைவுக் கூட்டத் தொடர் பிப்ரவரி 12-ம் தேதி கூடுகிறது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியது: நாடாளுமன்றக் கூட்டத் தொடரை பிப்ரவரி 12-ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இக் கூட்டத் தொடர் பிப்ரவரி 26-வரை நடத்தப்படும். மக்களவை … Continue reading

எச்சரிக்கை / காபி

எச்சரிக்கை: காபி குடிப்பவர்களுக்கு…!


ஹேலூசிநேஷன்,அதாவது தோற்ற மயக்கம் அல்லது கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற நிலை, அல்லது இல்லாததை இருப்பதை போல நினைக்கும் ஒரு பிரமை, போலி எண்ணம் அல்லது மாயத்தோற்றம் போன்றவற்றை குறிக்கும் ஒரு சொல். புதிதாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் ஒரு நாளைக்கு ஏழு கோப்பைகள் காபி குடிப்பவர்களுக்கு இவ்வாறான ஒரு நிலை தோன்றக் கூடும் என்று கூறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கிறது. வட இங்கிலாந்திலுள்ள டர்ஹம் பல்கலைகழகத்தில், 250 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவு தெரியவந்துள்ளது. காபியில் … Continue reading