பள்ளிவாசல் / வத்தலகுண்டு

வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் தலைவருக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ்


வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் தலைவருக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ் வத்தலகுண்டு, ஜன. 18: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் தலைவருக்கு காரணம் கேட்டு வக்ஃப் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசலின் தலைவர் முகமது மன்சூர். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறி, வத்தலகுண்டைச் சேர்ந்த மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அகமது சல்மான், சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 மாதங்களுக்கு முன்பு வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், … Continue reading

கல்வி

கல்வித் துறையில் இஸ்லாமியர்கள் முன்னேற வேண்டும்


கல்வித் துறையில் இஸ்லாமியர்கள் முன்னேற வேண்டும் தென்காசி, ஜன. 18: கல்வித் துறையில் இஸ்லாமியர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது கவலையளிக்கிறது. அவர்கள் முன்னேற முயல வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அகமது தெரிவித்தார். தென்காசியில் மதுரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அல்ஹிதாயா பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவன திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.செய்யது சுலைமான் தலைமை வகித்தார். இமாம் கே.கே. காதர் ஒலி முஸ்தபா இறைவணக்கம் பாடினார். … Continue reading

டிரைவிங் / பிரதமர்

டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க நேரில் சென்ற பிரதமர்


டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க நேரில் சென்ற பிரதமர் புதுடெல்லி, ஜன.19- டெல்லி இந்திரபிரஸ்தா பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) கடந்த 1992-ம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் டிரைவிங் லைசென்சு எடுத்தார். அப்போது, மத்திய நிதி மந்திரியாக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது லைசென்சை புதுப்பித்து வந்தார். 45 நாட்களுக்கு முன் அது காலாவதியாகி விட்டது. இதையடுத்து டிரைவிங் லைசென்சை புதுப்பிப்பதற்காக இந்திரபிரஸ்தா வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரில் … Continue reading

காயல்பட்டினம்

காயல்பட்டினத்தில் தெருமுனை பிரசாரம்


காயல்பட்டினத்தில் தெருமுனை பிரசாரம் ஆறுமுகனேரி, ஜன. 18: காயல்பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டச் செயலர் கே.நிஸôர் தலைமை வகித்தார். பிப். 13 முதல் 15-ம் தேதி வரை, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெறவுள்ள பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டின் நோக்கம் குறித்து அப்துல் ரஹ்மான் விளக்கினார். டி.ஷேக் மைதீன் நன்றி கூறினார். Continue reading

காயல்பட்டினம்

காயல்பட்டினம் இக்ரா கல்வி சங்கத்திற்கு ஹாங்காங் முஸ்லிம் பேரவை பிரதிநிதி வருகை


காயல்பட்டினம் இக்ரா கல்வி சங்கத்திற்கு ஹாங்காங் முஸ்லிம் பேரவை பிரதிநிதி வருகை ஆறுமுகனேரி, ஜன. 18: காயல்பட்டினம் இக்ரா கல்விச் சங்கத்திற்கு ஹாங்காங் காயல் முஸ்லிம் ஐக்கிய பேரவை பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் வருகைதந்தார். அவர் சங்கத்தின் செயல்திட்டங்களையும், அனைத்துப் பணிகளையும் ஆய்வுசெய்தார். இக்ரா கல்வி சங்கச் செயலர் ஏ. தர்வேஷ் முஹம்மது, பொருளாளர் ஸ்மார்ட் அப்துல் காதிர், செயற்குழு உறுப்பினர் எம்.எல். ஷேக்னா லெப்பை, துணைச் செயலாளர் எஸ்.கே. சாலிஹ் ஆகியோர் கலந்து … Continue reading

டிரைவர் / பயணி

பயணி தவறவிட்ட ரூ. 3 லட்சத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!


பயணி தவறவிட்ட ரூ. 3 லட்சத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்! சென்னை, ஜன. 17: தனது ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ. 3.5 லட்சத்தை, ஆட்டோ டிரைவர் பாபு சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தார். இதுகுறித்த விவரம்: வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு, தன்னுடைய ஆட்டோவில் வெள்ளிக்கிழமை இரவு பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் வரை சவாரி சென்றார். கருப்பு நிறத்திலான பையை பயணி ஆட்டோவிலேயே மறந்து சென்றுவிட்டார். பாபு … Continue reading

வேளாண்மை

எம்.எஸ்.சுவாமிநாதன் : வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா?


எம்.எஸ்.சுவாமிநாதன் : வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா? கார்ப்பரேட் கம்பெனிகள் கனிவுடனும் சமுதாய அக்கறையுடனும் அளிக்கும் தொகையைப் பயன்படுத்தி, நாட்டு மக்களின் பசியைப் போக்கத் திட்டங்கள் தீட்ட வேண்டும். சிறுகுறு விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கி இலாபம் ஈட்டும் வகையில் அத்திட்டங்கள் அமைய வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ஒத்துழைப்போடு சத்துணவு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிப் பசியைப் போக்க வேண்டும் என்று அண்மையில் உபதேசித்திருக்கிறார், ஒரு மாபெரும் விவசாய விஞ்ஞானி. எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து … Continue reading

Uncategorized

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது; பாக்கர் தலைமையில் புதிய அமைப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது; பாக்கர் தலைமையில் புதிய அமைப்பு சென்னை, ஜன. 16 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உடைந்து அதன் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம். பாக்கர் தலைமையில் ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய அமைப்பை எஸ்.எம். பாக்கர் அறிவித்தார். பாக்கருடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எம். சையது இக்பால், மாநிலப் … Continue reading

தப்லீக்

தப்லீக் அன்றும் இன்றும். தப்லீக் பற்றி உங்கள் கருத்து என்ன?


தப்லீக் சகோதரர்கள் சிந்திப்பார்களாக தப்லீக் அன்றும் இன்றும் ஆசிரியர் : ஓட்டமாவடி அறபாத் – கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா தவிர்க்க முடியாத சில குறிப்புகள் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் உத்தம ஸஹாபாக்கள் துயர்ந்தோர் அனைவர் மீதும் யுக பரியந்தம் சொரியட்டும். ‘எவர்கள் மெய்யாகவே விசுவாசம் கொண்டு தங்கள் விசுவாசத்துடன் யாதோர் அக்கிரமத்தையும், கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு. அவர்கள் தாம் நேரான வழியிலும் … Continue reading