சிறுமி / திருமணம்

4 சிறுமிகளுக்கு திருமணம்: அரசு அதிகாரிகளின் தலையீட்டால் நிறுத்தம்


4 சிறுமிகளுக்கு திருமணம்: அரசு அதிகாரிகளின் தலையீட்டால் நிறுத்தம் ஊத்தங்கரை, ஜன. 20: ஊத்தங்கரை அருகே 4 சிறுமிகளுக்கு நடத்தவிருந்த திருமணங்கள் அரசு அதிகாரிகளின் தலையீட்டால் நிறுத்தப்பட்டன. தகவலின்பேரில் ஊத்தங்கரை வட்டாட்சியர் முகந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையனின் மகள் பூங்கொடி (14), கிருஷ்ணணின் மகள் சரண்யா (14), கன்னையாவின் மகள் செம்பருத்தி (15), சண்முகத்தின் மகள் திவ்யா (14) ஆகியோருக்கு திருமண … Continue reading

கிரண்பேடி

மாணவர்களுக்கு கிரண்பேடி அறிவுரை


மாணவர்களுக்கு கிரண்பேடி அறிவுரை கோவை, ஜன.20: இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி. கோவை ஜிஆர்டி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அவர் பேசியது: எதிர்காலத்தில் பல்வேறு சவால்கள் காத்திருப்பதால் மாணவர்கள் தங்களது மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் முக்கியமானவை. எதிர்காலத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நமக்குள் இலக்கு நிர்ணயித்து அதை அடைய … Continue reading

பட்டம்

நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கத் தேவையில்லை: உ.பி. ஆளுநர் ராஜேஸ்வர் யோசனை


நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கத் தேவையில்லை: உ.பி. ஆளுநர் ராஜேஸ்வர் யோசனை சென்னை, ஜன. 19 : நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரப் பிரதேச ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் யோசனை தெரிவித்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் 151-வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: சில தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விதிகளை மீறி கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி வருகின்றன. இதனால் … Continue reading

நிதி உதவி

பத்து மீட்புச் சங்கத்துக்கு நிதி உதவி


பத்து மீட்புச் சங்கத்துக்கு நிதி உதவி ராமநாதபுரம், ஜன. 20: ராமநாதபுரம் விபத்து மீட்புச் சங்கத்தின் வளர்ச்சிக்காக சாத்தான்குளத்தைச் சேர்ந்த அஹமது மைதீன் செவ்வாய்க்கிழமை ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். விபத்தில் காயம் அடைந்தோரை காப்பாற்றி அவர்களுக்கு தேவையான உதவிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்து மீட்புச் சங்கம் செய்து வருகிறது. இறந்தவர்களைப் பாதுகாப்புடன் பதப்படுத்தி வைக்க உதவும் குளிர் சாதனப் பெட்டியை வாங்கி ஏழைகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கிட உதவும் குளிர் சாதனப் பெட்டி வாங்குவதாக … Continue reading

Uncategorized

மாலேகான்: முக்கிய சதியாளர் லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!


மாலேகான்: முக்கிய சதியாளர் லெப்டினென்ட் கர்னல் புரோஹித்! மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாலேகான் சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியது ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையை நேற்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் நோக்குடன் இந்த … Continue reading

உயர்கல்வி_விழிப்புணர்வு_விழா

அதிரையில் உயர்கல்வி விழிப்புணர்வு விழா!!


அதிரை A.L. மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் “உயர்கல்வி விழிப்புணர்வு விழா” கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் CMN சலீம் உள்ளிட்ட பல அறிஞர்கள் பங்குபெற்று சிறப்புரை நிகழ்த்தினர். இஸ்லாமிய சமுதாயம் உயர்கல்வியில் பழங்குடியினரை விடவும் பின் தங்கி இருப்பதையும், இத்தகைய நிலை நீங்க நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதிரை மக்களிடையே,குறிப்பாக அதிரை பெண்களிடையே,கல்வி குறித்த விழிப்புணர்வை இவ்விழா கொண்டுவந்திருக்கும் என்பது திண்ணம்!! உங்களுக்காக,அதிரையிலுருந்து அருட்புதல்வன் Continue reading

Uncategorized

சேலம் தவ்ஹீத் கல்லூரியில் காட்டுமிராண்டி தாக்குதல்


சேலம் தவ்ஹீத் கல்லூரியில் காட்டுமிராண்டி தாக்குதல் (ஒரு நேரடி ரிபோர்ட்) 18.01.2009 ஞாயிறு அன்று காவல்துறை அனுமதியுடன் சேலம் சூரமங்களம், அம்மாபாளையம் மெயின் ரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பொதுக்கூட்டம் நடந்தது. இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி உரையாற்றினார். மக்கள் பெரும்திரளாக ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர். கூட்டம் அமைதியாக முடிந்தது. ஆனால் ஓரிறைக் கொள்கையின் வளர்ச்சியை பிடிக்காத அந்த பகுதியைச் சார்ந்த சக்கரவர்த்தி ஹாரூன், … Continue reading