இந்தியா / நெடுஞ்சாலை

ஆப்கனில் இந்தியா கட்டிய நெடுஞ்சாலை ஒப்படைப்பு


ஆப்கனில் இந்தியா கட்டிய நெடுஞ்சாலை ஒப்படைப்பு டேலாரம், ஜன. 22: தலிபான் பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இடையே ஆப்கானிஸ்தானில் ரூ. 600 கோடியில் இந்திய கட்டிய நெடுஞ்சாலை பணி பூர்த்தியடைந்தது. இது இந்தியாவின் சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு சாட்சியாக விளங்கும் இந்த நெடுஞ்சாலையை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயிடம் வியாழக்கிழமை முறைப்படி ஒப்படைத்தார். இதற்கான விழா ஆப்கானிஸ்தானில் உள்ள டேலாராமில் நடைபெற்றது. டேலாராமில் இருந்து ஜராஞ்ச் என்ற இடத்தை … Continue reading

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன், காங்கிரசில் சேருவாரா?


இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன், காங்கிரசில் சேருவாரா?வீரப்ப மொய்லியுடன் சந்திப்பு ஐதராபாத், ஜன.23- இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், ஐதராபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை செய்தித்தொடர்பாளரும், ஆந்திர மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிப்பவருமான வீரப்ப மொய்லியை சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கு பிறகு அசாருதீன், நிருபர்களிடம் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அசாருதீன் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் … Continue reading

இன்டர்நெட் / சீனா

இன்டர்நெட் வசதியுடன் கூடிய சீனா செல்போனுக்கு கடும் கிராக்கி


இன்டர்நெட் வசதியுடன் கூடிய சீனா செல்போனுக்கு கடும் கிராக்கிவெளிநாட்டு மதுபானம்-சிகரெட் விற்பனை அமோகம் சென்னை, ஜன.23- சென்னை பர்மா பஜாரில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சீன செல்போன்கள் விலை மகவும் குறைவாக கிடைப்பதால் இதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது. பர்மா பஜாரில் டி.வி.டி. சென்னை தியாகராயர்நகர் போல பர்மாபஜாரும் கூட்டம் அலைமோதும் பகுதியாக மாறிவருகிறது. இங்கு வெளிநாடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் மலிவான விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் … Continue reading

வி.பி.சிங்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்


முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் சென்னை, ஜன_23_ முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் வாவித்தார். சமூகநீதிக் காவலரும், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இடஒதுக்கீடு வழங்கிட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொண்டவரும், இந்திய அரசியலில் அரசியல் நாகரிகத்துக்கும், பண்பாட்டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவரும், தமிழக மக்களின் ஆழமான அன்புக்கும் … Continue reading