இன்டர்நெட் / சீனா

இன்டர்நெட் வசதியுடன் கூடிய சீனா செல்போனுக்கு கடும் கிராக்கி

இன்டர்நெட் வசதியுடன் கூடிய சீனா செல்போனுக்கு கடும் கிராக்கி
வெளிநாட்டு மதுபானம்-சிகரெட் விற்பனை அமோகம்

சென்னை, ஜன.23-

சென்னை பர்மா பஜாரில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சீன செல்போன்கள் விலை மகவும் குறைவாக கிடைப்பதால் இதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.

பர்மா பஜாரில் டி.வி.டி.

சென்னை தியாகராயர்நகர் போல பர்மாபஜாரும் கூட்டம் அலைமோதும் பகுதியாக மாறிவருகிறது. இங்கு வெளிநாடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் மலிவான விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள்.

வெளிநாட்டு பொருட்களுக்கு சுங்கவரி குறைவு என்பதால் சீனா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து சென்னை சவுக்கார்பேட்டை மற்றும் பர்மா பஜாருக்கு அதிக அளவில் வெளிநாட்டு பொருட்களை விமானம் மூலம் கொண்டுவருகிறார்கள்.

பர்மா பஜாருக்கு எத்தனையோ விதமான வெளிநாட்டு பொருட்கள் வந்தாலும் டி.வி.டி. விற்பனை மூலம்தான் அதிக லாபம் கிடைக்கிறது என்பது வியாபாரிகளின் கருத்தாகும். ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்ட டி.வி.டி. விற்பனை ஆகிறது. தமிழ்பட டி.வி.டி.கள் புதுச்சேரியில் இருந்தும், மற்ற மொழி படங்களின் டி.வி.டி.களை சென்னையில் தயார் செய்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. ஒரு டி.வி.டி.யை தயார் செய்ய ரூ.10 அடக்கவிலை ஆகிறது. ஆனால் பொதுமக்களிடம் ஒரு டி.வி.டி. ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்துவருகிறார்கள்.

சீனா செல்போன்

சீனா செல்போன்களில் கேமரா, வீடியோ, இன்டர்நெட், ரெக்கார்டிங் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளதால் இவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ஒரு சீன செல்போன் ரூ.1,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் ரூ.5 ஆயிரத்திற்கு கிடைக்கிறது.

சீனாவில் இருந்து மாதம் ஒரு லட்சம் செல்போன்கள் வந்துகொண்டு இருக்கிறது. சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் ஒரு செல்போனுக்கு ரூ.100 வீதம் ஆயிரம் செல்போனுக்கு ரூ.1 லட்சம் வரை கொடுக்கவேண்டியது உள்ளது என்று வியாபாரி ஒருவர் வருத்தத்துடன் கூறினார்.

பர்மா பஜாரில் எல்.சி.டி. டி.வி.க்கு கடும் கிராக்கி அதிகம் உள்ளது. இந்த வகையான டி.வி.கள் 26 அங்குலம் அகலம் முதல் 48 அங்குலம் வரை அகலம் உள்ளன. 48 அங்குலம் அகலம் உள்ள டி.வி.யில் படம் பார்க்கும் போது சினிமா தியேட்டரில் படம் பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது. இந்த வகையான டி.வி.யின் விலை ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் ஆகும்.

வெளிநாட்டு மதுபானம்

இது மட்டும் அல்லாமல் இலங்கையில் இருந்து கொண்டுவரப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை வாங்குவதற்கு ஏராளமான வாடிக்கையார்கள் உள்னர். மார்ல்பரோ, டிரிபிள் 5, பென்சன் ஹெட்ஜஸ், ரோத்மன்ஸ் சிகரெட்களை காட்டன், காட்டனாக வாங்கிச்செல்கிறார்கள். 20 பாக்கெட்டுகளைக் கொண்ட ஒரு கார்ட்டன் வெளிநாட்டு சிகரெட் ரூ.690 முதல் ரூ.750 வரை விற்பனை ஆகிறது.

புளூரிபன்ட் மது பாட்டில் ரூ.7 ஆயிரத்துக்கும், கார்டினால் மது பாட்டில் ரூ.2,500-க்கும், சிவாஸ்ரிகல் மது பாட்டில் ரூ.2,100-க்கும், பிளாக்லேபிள் ஒரு பாட்டில் ரூ.2,000-க்கும், ரெட்லேபிள் ஒரு பாட்டில் ரூ.1,100-க்கும் பிளாக் அண்டு ஒய்ட் ஒரு பாட்டில் ரூ.900-க்கும் கிடைக்கிறது.

பெண்களுக்கான விதவிதமான அழகு சாதன பொருட்களும் விலை மலிவாக கிடைக்கிறது. வெளிநாட்டு பொருட்களை அதிக அளவில் வியாபாரம் செய்யும் சவுகார்பேட்டை வியாபாரிகள் மீது போலீசார் மென்மையாக நடந்துகொள்கிறார்கள். ஆனால் அரசு அனுமதியுடன் நியாயமான முறையில் வியாபாரம் செய்துவரும் பர்மா பஜார் வியாபாரிகள் மீது மட்டும் போலீசார் பொய்வழக்கு போடுவது மிகவும் வேதனையாக உள்ளது என்று பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்க தலைவர் காதர் மொய்தீன், பொதுச்செயலாளர் கே.எ.சாகுல் அமீது ஆகியோர் கூறினார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s