Uncategorized

விளம்பர துண்டு பிரசுரமாகும் ரூபாய் நோட்டுகள்


விளம்பர துண்டு பிரசுரமாகும் ரூபாய் நோட்டுகள் திருநெல்வேலி, பிப். 2: ரூபாய் நோட்டுகளில் விளம்பரங்களை அச்சிட்டு ஆதாயம் தேடிக் கொள்ளும் செயல் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பாமர மக்களின் தவறான உபயோகத்தால் ரூபாய் நோட்டுகள் அழுக்கடைந்து, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னரே காலாவதியாவது ஒருகாலத்தில் பெரும் பிரச்னையாக இருந்து வந்தது. இதையடுத்து, ரூபாய் நோட்டுகளில் “பின்’ அடிக்கக் கூடாது, எழுதக் கூடாது என கடுமையான சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் பின்னர், அதுபோன்ற செயல்கள் … Continue reading

Uncategorized

எங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: முஸ்லிம்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்


எங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: முஸ்லிம்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலமாக்கள்- உமராக்கள்’ மாநாட்டில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலர் கே.எம்.காதர்மொகிதீன். உடன் சுற்றுச்சூழல் மற்றும் வக்ஃப் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான். சென்னை, பிப். 1 : முஸ்லிம்களுக்காக திமுக அரசு செய்த சாதனைகளை எல்லாம் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் … Continue reading

தொண்டி / பள்ளி

தொண்டியில் பள்ளி ஆண்டு விழா


தொண்டியில் பள்ளி ஆண்டு விழா திருவாடானை, பிப். 2: திருவாடானை அருகே தொண்டியில் இஸ்லாமிக் மாடல் மெட்ரிகுலேசன் பள்ளியில் மேல்நிலைப்பள்ளி 12-வது ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கலந்து கொண்டு பேசியது: தொண்டியில் ஆரம்பிக்கப்பட்ட கடலியல் கல்லூரி அழகப்பசெட்டியாரின் கணவு நனவாகும் வகையில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் வழங்கி தொண்டி மக்கள், ஜமாத்தார்களின் சொந்த பணத்தை செலவு செய்து இக்கல்லூரியின் கட்டடத்தை கட்டி முடித்து … Continue reading

தலைமை ஆசிரியர் / மனு

தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு


தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு பரமக்குடி, பிப். 2: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள நெடுந்துளசி பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்தியாகுவை மற்றக்கோரி பள்ளி மாணவர்கள் ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர். நெடுந்துளசி ஆர்சி தொடக்கப்பள்ளியில் சந்தியாகு 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் ஓராண்டாகப் பள்ளிக்கு வருவதில்லை. ஏதாவது … Continue reading

வங்கிகளின் அத்துமீறல்கள்

ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூடாரங்களா


http://arivili.blogspot.com/2009/02/icici.htmlசும்மா இருக்கும் மக்களுக்கு ஆசைகாட்டி, அவர்களுக்குக் கடன்களைத் தந்து விட்டுப் பின்னர் அவர்களைச் சொல்லொணாத் துயருக்கு ஆளாக்கி, அதன் மூலம் தாங்கள் லாபம் சம்பாதிக்க முயலும் இது போன்ற பொறுப்பற்ற வங்கிகளின் செயல்களைத் தட்டிக் கேட்பது எப்படி? வங்கிகளில் வாங்கிய கடனுக்கான் தவணைத் தொகைகளைக் கட்டத் தவறும் வாடிக்கையாளர்களைக் குண்டர்களைக் கொண்டு மிரட்டியும், அடித்தும் தங்கள் பணத்தை வசூல் செய்கின்றன வங்கிகள் இப்போதெல்லாம். வாங்கிய கடனை ஒழுங்காகக் கட்டாவிட்டால் பின்னர் அவர்கள் அதனை வசூல் செய்ய, இது … Continue reading