பொட்டி தூக்கும் பொழப்பு...

பொட்டி தூக்கும் பொழப்பு…

பொட்டி தூக்கும் பொழப்பு…
இந்த தலைப்பை பார்த்தவுடன் இது ஏதோ போர்ட்டரை பற்றி ..என நினைத்தால் “நீங்கள் பரிசைப்பெறும் வாய்ப்பை இழக்கிறீர்கள்…இதற்காக Clue வெல்லாம் கேட்காதீர்கள்… நேராக விசயத்துக்கு வருவோம்
]
இது அதிராம்பட்டினம் மக்களுக்கு மட்டும் அல்ல ..பக்கத்தில் வாழும் பல முஸ்லீம் குடும்பங்களுக்கும் இழைக்கப்பட்ட ஒரு விதமான அநீதி.

இதை எழுத காரணமாக் இருந்தது, உண்மையான சம்பவங்கள், வாழ்கையை தொலைத்தவர்களின் பெருமூச்சு, இன்னும் ஒருமுறை அந்த இளமை வாராதா மற்றுமொருமுறை தான் யார் என்று இந்த சொந்தபந்தங்களுக்கு காட்ட மனதுக்குள் சவால்களை சவ அடக்கம் செய்த பலரின் மனக்குமுறல்.
வெளிநாட்டில் உள்ளவர்களின் வாழ்கை இப்படித்தான் ஆகி விட்டது. சம்பாதிக்கும் காலங்களில் வீட்டில் இவர்களூக்கு பிடிக்கும், அவர்களூக்கு பிடிக்கும் என்று பார்த்து பார்த்து வாங்கிய துணிமணிகள், வாட்ச், சென்ட் இவற்றை கொண்டு சென்று சேர்க்க காண்பித்த ஆர்வம் …தனது முதுமையை பார்க்க முக்கியத்துவம் தரவில்லை.

விரல் விட்டு [அல்லது விரல் விடாமல்] எண்ணக்கூடிய சிலபேரைத்தவிர நிறைய பேர் நமதூரில் மானத்துக்கு அஞ்சி மெளனமாக தன் வறுமையை மறைப்பதை நான் பார்த்திருக்கிறேன்


ஏன் இந்த சமுதாயம் இப்படி வெளிநாட்டில் கடுங்குளிரிலும் [ சமயங்களில் மைனஸ் டிகிரியில்] கடும் வெயிலிலும் [உம்ரா போனபோது ஒரு 10 ஹேர்ட்ரய்யரை முகத்துக்கு நேராக பிடித்தது போல் உணர்ந்தேன்]..இப்படி கஷ்டப்படுகிற சமுதாயமாக மாற்றப்பட்டது என்று பார்த்தால், அந்த உண்மைக்கு பின்னால் பலர் காரணம் என எனக்கு தோன்றுகிறது.

இது காலாகாலமாக வெளிநாட்டில் குப்பை கொட்டும் நம்மடவர்களைப்பற்றிய சிந்தனை. ஏன் இப்படி’பொட்டி தூக்கும்” என்று எழுதினேன் என்றால்..அப்படித்தான் போய்விட்டது நம் வாழ்க்கை. ஊருக்கு போகும்போது பார்த்து, பார்த்து வாங்குவது..சாப்பிடாமல், ஒரு கையில் செல்போன், மறு கையில் தன்னை உருக்கி சம்பாதித்த பணம்..பொருள்களை கட்டி அடுக்கியபின் வரும் கலைப்பு[முன்பெல்லாம்..ஊர்த்தபால் தான் ரெபரென்ஸ்]
இப்போது நம் ஊர் மக்கள் அமெரிக்கா, லண்டன், ஜப்பான் என்று சிறகுவிரித்தாகிவிட்டது. ஆனால் இவர்கள் மலேசியா,துபாய், சவூதி போன்ற நாட்டில் இருக்கும் நம் ஊர்காரர்களுக்கும் இவர்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடு காண்பிக்கவில்லை.
  1. திருநெல்வேலி மாவட்டங்களில் windmill பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து கொஞசம் டீசன்ட் வாழ்க்கை நடத்தும் மத்தியதர விவசாயமக்கள் ஏன் வெளிநாட்டை நம்பவில்லை. ?
  2. வேற்று இனத்தவர்கள் எப்படி தொடர்ந்து அரசு வேலைகளில் 2, 3 சந்ததியினர் என தொடர முடிகிறது..?
  3. ஒரு சின்ன தோப்பு / ஒன்றிரண்டு குடும்ப கல்யாணம் / இடையில் வரும் மருத்துவ செலவுக்குள் மட்டும் எப்படி என் ஊர்மக்கள் நொந்து போகிறார்கள்?
என்ற சில கேள்விகளை முன்னிருத்தி இப்போது விடை பெறுகிறேன்..இதன் பகுதி 2 ல் சந்திக்கும் வரை ஒருசின்ன BREAK !!!!!!

ZAKIR HUSSAIN

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s