Uncategorized

புலித்தலைவரின் மரணமும்-புரியாத புதிர்களும்!

புலித்தலைவரின் மரணமும்-புரியாத புதிர்களும்!

இலங்கையில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த போர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து முடிவுக்கு வந்துள்ளதாக சமீபத்தில் இலங்கை அரசு அறிவித்ததை அறிவோம். இதில் பிரபாகரன் மரணம் தொடர்பாக அன்று தொட்டு இன்று வரை மக்கள் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது. பிரபாகரன் மரணித்துவிட்டார் என்று கூறிய இலங்கை இராணுவம், பிரபாகரனின் உடல் என்று ஒரு உடலை காட்டியது. அது பார்ப்பதற்கு சற்றே பிரபாகரன் போல் இருந்தாலும், மிகவும் இளமையான தோற்றத்தோடு இருப்பதாலும், மீசை வைத்திருப்பதாலும் இது பிரபாகரன் இல்லை. பிரபாகரன் சாயலில் உள்ள ஒருவரை கொன்றுவிட்டு, பிரபாகரனை கொன்றதாக இலங்கை இராணுவம் நாடகமாடுகிறது என்று புலிகளின் ஆதரவாளர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

சரி! இலங்கை அரசு எதற்காக இத்தகைய நாடகமாடவேண்டும் என்று கேள்வி எழுப்பினால், இத்தனை ஆண்டுகளாகியும் பிரபாகரனை ராணுவத்தால் பிடிக்கமுடியவில்லை. எனவே ‘டுப்ளிகேட்’ பிரபாகரனை கொன்றுவிட்டு, பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று நாடகமாடினால்,விளம்பரத்தில் ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று வருமே அது மாதிரி நான் இதோ உயிரோடு இருக்கேன் என்று உண்மை பிரபாகரன் வெளியே வந்தால் அப்பிடியே கோழியை அமுக்குகிறது மாதிரி அமுக்கிரலாம் என்று இராணுவம் கணக்கு போட்டிருக்கலாம். இது ஒரு வகையான கணிப்பு.

அடுத்து புலிகளே இத்தகைய நாடகமாடவும் வாய்ப்புள்ளது. எப்படியெனில், இலங்கை ராணுவத்தின் உக்கிரமான தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில், நாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயார் என்று புலிகள் அறிவித்தார்கள். அப்போது, ஆயுதங்களை புலிகள் கீழே போடாதவரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்தது. எனவே இலங்கை ராணுவத்தை போரை நிறுத்தச்செய்ய ஒரே வழி பிரபாகரன் இறந்துவிட்டார் என்று ராணுவத்துக்கு காட்டவேண்டும்.எனவே இராணுவம் உச்சகட்ட இறுதி தாக்குதலை தொடுக்கும் நேரத்தில் பிரபாகரன் போன்ற தோற்றமுடைய ஒருவரை தப்புவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவர் பிரபாகரன்தான் என்று நம்பிய இராணுவம் தீர்த்துக்கட்டிவிட்டு பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று வெளியுலகத்திற்கு அறிவித்திருக்கலாம். இப்படி புலிகள் செய்வதால் அவர்களுக்கு என்ன ஆதாயம் எனில், போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதால் கிடைக்கும் அவகாசத்தில் தங்களை பலப்படுத்திக்கொள்வதுதான்.

இதுபோக இன்றைய கணினியுலகில் என்னவேண்டுமானாலும் செய்யலாம். இந்த உத்தியை பயன்படுத்தி பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று காட்டுவதற்காக ‘கிராபிக்ஸ்பிரபாகரன்’ களை வெளியிட்டு சில பத்திரிக்கைகளும் மக்களின் குழப்பத்தை பயன்படுத்தி தங்களின் கல்லாவை நிரப்பி வருகின்றன.உசாமா அவர்கள் விசயத்தில் அவர் இறந்துவிட்டார் என்று அவ்வப்போது அமெரிக்கா கதைக்கட்டும். சிலநாளில் அதே உசாமா, இந்தியாவின் மீது ஜிஹாத் பிரகடனம் செய்தார் என்று அதே அமெரிக்கா சி.டி. வெளியிடும். உசாமா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது எப்படி மக்களுக்கு புரியாத புதிரோ, அதுபோல்தான் பிரபாகரன் விசயமும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

ஒண்ணுமே புரியல ஒலகத்துல; என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்று நாம பாடவேண்டியதுதான்!

Thanks : முகவை எஸ்.அப்பாஸ் – நிழல்களும் நிஜங்களும்

1 thoughts on “புலித்தலைவரின் மரணமும்-புரியாத புதிர்களும்!

பின்னூட்டமொன்றை இடுக