Abu Adhil

அல்லாஹ்வின் உவப்பிற்காக இவ்வுதவியினை செய்திடுவீர்களாக.

அல்லாஹ்வின் உவப்பிற்காக இவ்வுதவியினை செய்திடுவீர்களாக.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்;…)

சொந்த பந்தங்களை விட்டு, வெகுதூரம் சென்று ஒத்து வராத சீதோஷ்ண நிலையையும் பொருட்படுத்தாமல் அரேபிய சுடும் பாலைவன மண்ணின் மத்தியில் வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து பெற்ற வருவாயில் ‘சிறைபட்டோரின் விடுதலைக்காக உதவிடுங்கள்’ என்கின்றபோது இன்முகத்துடன் வாரி வழங்கினீர்களே, அல்ஹம்துலில்லாஹ். நிச்சயம் நீங்கள் செய்திட்ட உதவியினால் பயனடைந்தோர் என்றும் மறந்திடமாட்டார். வழங்கிட்ட ஒவ்வொரு நயா பைசாவிற்கும், நன்றியுணர்வுடன் தங்களின் ஈருலக வாழ்விற்கும் துவா செய்திட கடமைப்பட்டுள்ளோம்.

ஊவுஆ அறக்கட்டளை துவங்கியதிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் அல்லாஹ்வின் கிருபையால் விடுதலையடைந்துள்ளனர். விடுதலையடைந்திட செலவிட்ட பணங்களில் பெரும்பாலும் வளைகுடா நாடுகளிலிருந்து சகோதரர்கள் அனுப்பியதே என்றால் அது மிகையல்ல.

எண்ணம் தூய்மையின்றி தவறாக ஈட்டிய பணத்தில் நாம் இதை செய்திருந்தால் ஒருவர் கூட விடுதலையடைந்திருக்க முடியாது.

பல துன்ப, துயரங்களுக்கு மத்தியில் கடுமையாக உழைத்து ஹலாலாக பெற்ற வருவாயில் தாங்கள் உதவிகள் வழங்கினீர்களே, அப்படிப்பட்ட உதவிக்கு அல்லாஹ்வின் அருளும் கிடைக்கப்பெற்று, எண்ணற்ற சகோதரர்கள் விடுதலையாகியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் தமிழக சிறைகளில் குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் வேறுபல சமூக வழக்குகளைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் 56 பேர் உள்ளனர். இவர்களையும் மீட்டிட வேண்டிய பொறுப்பு நமக்கு எஞ்சியுள்ளது. இதற்காக கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அரசு பொது மன்னிப்பில் விடுதலை செய்திடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் விட்டது. இனி உச்ச நீதிமன்றம் சென்று விடுதலைக்கு முயற்சித்திட வேண்டிய கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதுவும் கால தாமதமின்றி உடனடியாக செய்திட வேண்டிய பெரும் பணியாக இருக்கின்றது.

வாரி வழங்கிய உங்களின் கரங்கள் மீண்டும் ஒருமுறை சிறைபட்டோருக்காக வாரி வழங்கிடவேண்டுமென ஊவுஆ அறக்கட்டளையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

அல்லாஹ்வின் உவப்பிற்காக இவ்வுதவியினை செய்திடுவீர்களாக.

வஸ்ஸலாம்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை

Kovai Thangappa
Dubai Cont — 056 7284599

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s