Abu Adhil

ராசல் கைமாவில் ஏகத்துவ எழுச்சி மாநாடு

ராசல் கைமாவில் ஏகத்துவ எழுச்சி மாநாடு

ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம் முன்னேற்றக் கழக ராசல் கைமா மண்டலம் கடந்த 20.08.2010 அன்று இரவு ராசல் கைமா – அல் நக்கில் வீணஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில் ஏகத்துவ எழுச்சி மாநாட்டை நடத்தியது”.

மாநாட்டு அரங்கத்தில் மாலை 9.30 மணிக்கு சகோ.அப்துல் ஹன்னான் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சிகள் ஆரம்பம்மானது. மாநாட்டிற்க்கு ராசல் கைமா மண்டல தலைவர் சகோ. குடந்தை ஜாப்பர், மண்டல துணை தலைவர் கடியாச்சேரி ஹாஜா முகைதீன், பொருளாலர் செங்கோட்டை அப்துல் ஹமிது, மண்டல ஆலோசகர் தோப்புத்துரை ஆதம்.ஆரிபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசல் கைமா மண்டல செயளாலர் பொதக்குடி ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் பின்னர் அமீரக தலைவர் சகோ. அப்துல் ஹாதி அவர்கள் மாநாட்டுக்கு தலைமை ஏற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர்களைத் தொடர்ந்து மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாகவும் பேச்சாளர்களாவும் நமது தாயகத்திலிருந்து வருகைத் தந்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் சகோ. மவுலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் “ஏகத்துவத்துவத்தின் அவசியம்” என்ற தலைப்பிலே தனது உரைவீச்சை நிகழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் தனது சமுதாயத்தை தட்டுயெழுப்பும் பானியில் இந்தியா விடுதலைக்காக பங்காற்றிய வஹாபிக்களை(ஏகத்துவ வாதிகள்) பற்றிய வரலாற்றுச் சான்றுகளையும் தமிழக முஸ்லிம்களிடய ஏற்ப்பட்டுள்ள ஒற்றுமையின்மையும், பின்னர் தமிழக அரசியலில் மனிதநேய மக்கள் கட்சியின் பங்களிப்பையும் மிக விவரமாக விளக்கினார். தமிழக முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ள சாதக, பாதக விடயங்களை விவரமாக தொகுத்து கூறினார். இறுதியாக தனது உரையின் முடிவில் நம்முடைய சகோதரர்கள் மற்றும் பொதுமக்களும் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார்.

அமீரக துணை தலைவர் சகோ.ஹூசைன் பாஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி துஆவுடன் இம்மாநாடு அல்லாஹ் பேரருளால் இனிதே நிறைவுற்றது.

மாநாட்டிற்கு துபாய்,சார்ஜா,அல் மனாமா மற்றும் ஜுல்பார் ஆகிய பகுதிகளிலிருந்து திரளானோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர், பின்னர் சிற்றுண்டியுடன் தேநீரும் வழங்கப்பட்டது.

இம்மாநாட்டுக்கு ராசல் கைமா மண்டல நிர்வாகிகள் சில இன்னல்களிடைய வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது அனைவரையும் திகைக்க வைத்தது.

செய்தி : மண்ணடிகாகா

பின்னூட்டமொன்றை இடுக