Abu Adhil

அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கை அரசுக் கு மேலும் தலையிடி.

அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கை அரசுக்கு மேலும் தலையிடி.

இலங்கை அரசின் போர்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என சர்வதேச தொலைக்காட்சியான அல்ஜசீரா இன்று தெரிவித்துள்ளது மணிக்கு ஒருதடவை என தனது செய்திகளில் ஒளிபரப்பிவருகிறது. குளோபல் தமிழ் ஃபோரம் அமைப்பின் தலைவர் இமானுவேல் அடிகளார் இது குறித்து மேலதிகத் தகவல்களையும், புகைப்படங்களையும் வழங்கியுள்ளார். சர்வதேச மன்னிப்பு சபையின் அதிகாரியொருவரும் இச் சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தனது ஒவ்வொரு மணிநேரச் செய்தியிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருவதால் இலங்கை அரசு மேலும் சங்கடத்தில் தள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து குளோபல் தமிழ் ஃபோரமும், அவுஸ்திரேலியாவில் இருந்து அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினரும், மற்றும் கனடாவில் இருந்தும் பலர் கலந்து கொண்டு போர்க்குற்றம் தொடர்பாகவும் இன அழிப்புத் தொடர்பாகவும் விசாரணை தேவை என வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் இலங்கை அமைச்சர் ஒருவரை அல்ஜசீரா தொடர்புகொண்டபோது, அவர் அக் குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு, வெளியான அனைத்துப் புகைப்படங்களும் பொய்யானவை எனக் கூறியுள்ளார்.

சில காலமாக செயல்பாட்டாளர்கள் மௌனமாக இருப்பதாக தமிழர் தரப்புகளில் குற்றஞ்சுமத்தப்பட்டு வந்தது. இருப்பினும் இதுபோன்ற முன்னெடுப்புகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும், அதனூடாகவே இலங்கை அரசின் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்

http://english.aljazeera.net/video/asia/2010/11/2010111010021857352.html

Muthamizh – Chennai

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s