Abu Adhil

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நல வாரியம் அமைக்கப்படும்; கருணாநிதியின் அறிவி ப்பு தமிழர்கள் நலன் காக்குமா?

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அமைக்கப்படும்; கருணாநிதியின் அறிவிப்பு தமிழர்கள் நலன் காக்குமா?

untitled.bmp

இந்தியாவைச்சேர்ந்த அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரம் தமிழர்கள் அரபகங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மூலம் இந்திய அரசிற்கு கணிசமான அந்நியச்செலவாணி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தாயகம் துறந்து வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களில் கவுரவமான பதவியில் இருப்பவர்கள் நீங்கலாக, மற்றவர்களில் பெரும்பாலோர் படும் இன்னல்களுக்கோ அளவில்லை.

வெளிநாட்டுப் பயணத்திற்காக போலி எஜெண்டுகளிடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் ஒருபுறம், அதையும் தாண்டி விமானம் ஏறி, வெளிநாட்டு மண்ணில் தடம் பதித்தவுடன், தாய்நாட்டில் போலி ஏஜெண்டுகள் கூறியபடி சலுகைகள் இன்றி வெறும் குறைவான சம்பளத்திற்கு அதிகநேரம் மாடாய் உழைத்து ஓடாய் தேயும் அவலநிலை.

குறைவான ஊதியமும் மாதம் நிறைவானவுடன் வழங்காமல், பல மாதங்கள் பாக்கி வைத்து கழுத்தறுக்கும் கம்பெனிகளின் தொல்லை ஒருபுறம்; மறுபுறம் தாயகத்திலோ வட்டிக்கு பணம் தந்தவன் குடும்பத்தின் கழுத்தை நெருக்கும் அவலம் மறுபுறம். இவ்வாறு கம்பெனிகளில் ஏற்படும் இன்னல்களை எழுத்தால் வடித்து எம்பஸி எனப்படும் தூதரகம் சென்றாலோ, எடுத்தெறிந்து பேசும், ஏளனம் பேசும் அதிகாரிகள் சிலரின் கண்டுகொள்ளாமை. இதுபோக பணியாற்றும் நாட்டில் மரணம் சம்பவித்து விட்டாலோ, நஷ்டஈடு கிடைக்குதோ இல்லையோ, பாடி நாருவதற்கு முன் நாடுவந்து சேருமா என்பது கேள்விக்குறி.

இத்தகைய வெளிநாட்டு கனவுலக வாழ்கையில் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஏராளமான இந்தியர்களின் நிலையை சீராக்கவே வெளியுறவுத்துறை என்ற ஒன்று உண்டு. ஆனால் அந்த வெளியுறவுத்துறை அமைச்சர் அவ்வப்போது சில நாடுகளுக்கு விசிட் அடித்து சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதோடு கரையேறிவிடுவார். அவர் கையெழுத்திட்ட தொழிலாளர் நலன் சார்ந்த விசயங்கள் அமுல்படுத்தப்படாமல் கரையான் அறித்ததை பாவம் அவர் எங்கே அறிவார்?

இத்தகைய இன்னல்களுக்கு விடிவு தேவை என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசும் வெளிநாடுவாழ் தமது மாநில மக்களுக்காக தனி நலவாரியம் அமைத்து வரும் நிலையில், தமிழக அரசை நோக்கியும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை பலரால் பரவலாக வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, முதல்வர் களமாக தேர்ந்தெடுத்தது முஸ்லிம் லீக் மாநாடு என்பதில் ஒருவகை மகிழ்ச்சியே. ஏனெனில் தமிழர்களில் அதிகமாக வெளிநாட்டில் அவதியுறுவது முஸ்லிம்களே! இப்போது முதல்வரின் அறிவிப்பை பார்ப்போம்;

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, “அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்” எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்” ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது. என்று கூறியுள்ளார் முதல்வர்.

நலவாரியம் அமைப்பது மகிழ்ச்சிக்குரியது என்றபோதிலும் அந்த வாரியம் பெயரளவில் இல்லாமல் வீரியமாக செயல்படுவதில்தான் முதல்வரின் என்னமும் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்பதை முதல்வர் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் இந்த வாரியத்தின் சார்பாக,

 • வெளிநாடு வாழ் தமிழர்களின் பணிநேரம்- ஊதியம்- போனஸ்- உறைவிடங்கள்- உணவு- விடுமுறை- ஓய்வூதியம் போன்றவைகள் ஒப்பந்தப்படி வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும்.
 • ஊதியங்கள் முறையாக மாதம் தோறும் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும்.
 • வெளிநாடுகளில் ஏற்படும் விலைவாசி ஏற்றம்; மற்றும் வொர்க் பெர்மிட்டுக்கான கட்டணங்கள் இவைகள் ஆண்டு தோறும் உயர்வதற்கு ஈடாக, பனியாளர்களின் ஊதியமும் உயர்த்தப்பட வழிவகை செய்தல்.
 • ஆண்டு விடுமுறை முறையாக வழங்க கம்பெனிகள் நிர்பந்தித்தல் மற்றும் விடுமுறைக்கான ஊதியம் வழங்க ஏற்பாடு செய்தல்.
 • பணியை நிரந்தரமாக முடித்து தாயகம் திருப்பும் பணியாளர்களுக்கு உரிய சர்வீஸ் தொகைகள் கிடைத்திட ஆவன செய்தல்.
 • பணி நேரத்தில் மரணித்தால் இழப்பீடு கிடைத்திட அவன செய்தல்.
 • மரணித்தவர்களின் உடலை விரைவாக உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • வெளிநாடுகளில் சின்ன சின்ன குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்க, சட்டரீதியாக அணுக ஒவ்வொரு நாட்டிலும் சட்ட மையம் ஏற்படுத்துதல்.
 • கொலை-தீவிரவாதம்- போதை- விபச்சாரம் போன்ற பெரிய குற்றங்கள் செய்தவர்கள் நீங்கலாக, மற்றவர்களை ஆண்டுதோறும் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்ய வெளிநாட்டு அரசுகளை கோருதல்.
 • வாரியம் சார்பாக ஆண்டுதோறும் ‘குறை தீர்க்கும் நாள்’ என்ற நிகழ்ச்சி தமிழர்கள் வாழும் நாட்டில் நடத்தப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்வதோடு, பணியாளர்களின் மன அழுத்தம் போக்க, மனோதத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்குதல்.
 • வெளிநாட்டில் பணியாற்றி திருப்பும் தமிழர்க்கு வங்கியில் வட்டியில்லா கடன் வழங்கி சுய தொழில்செய்ய உதவுதல்.
 • இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தில் உள்ள போலி ஏஜெண்டுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.

இவை போன்ற இன்னும் ஏராளமான கோரிக்கைகள் தமிழர்கள் சார்பாக உண்டு. அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால்தான் நலவாரியம் அமைத்ததற்கு பலனுண்டு. இல்லையேல் தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படாமல் உள்ள நலவாரியங்கள் பட்டியலில் ஒன்று கூடியதுதான் மிச்சம். அரசு கவனத்தில் கொள்ளுமா?
நான்றி : முகவை அப்பாஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s