Abu Adhil

ராசல் கைமா மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்

ராசல் கைமா மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராசல் கைமா மண்டலத்தின் சார்பாக ஜனவரி 28 அன்று ராசல் கைமா மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் மண்டலத் துணைத் தலைவர் சகோ. கடியச்சேரி ஹாஜா அவர்கள் தலைமையில்  அல்-நக்கிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைப்பெற்றது,


நிகழ்வின் ஆரம்பமாக சகோதரர் மதுக்கூர்.பசீர் அவர்கள் சிறு உரை நிகழ்த்தினார், அதன்பின் துபாயிலிருந்து சிறப்பு பேச்சாளாரக வருகைப் புரிந்த நாசர் அலி கான் அவர்கள் நபிகளாரின் தியாகத்தையும், அல்லாஹ்விற்கு நாம் செய்யவேண்டிய கடமைகளையும், நிர்வாகிகளின் செயல்பாடுகளை எந்தவகையில் அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கினார்,

பின்னர் இஷாத் தொழுகைக்கு பின் சிறு கலந்துரையாடலும், மார்க்க சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சகோ. நாசர் அலி கான் அவர்களும் சிறப்பு விருந்தினாராக வருகைப் புரிந்த இஸ்லாமிய அழைப்பாளர் சகோ. ஏ. எஸ். இப்ராஹீம் அவர்களும் விளக்கம் அளித்தனர், பின்னர் சகோ. ஏ. எஸ். இப்ராஹீம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள், தொழுகையின் சிறப்புகளையும், அவசியத்தையும் தெளிவாக விளக்கினார், அவரது உரையில் தொழக் கூடியவர்கள் நேர மேலண்மை பேணக் கூடிய பண்புகளையும் தொடர்புப் படுத்தி விளக்கமாக விவரித்தார்,

இறுதியாக மண்டல ஆலோசகர் ஆதம்.ஆரிபின் அவர்கள் கலந்துக் கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு தர்பியா நிகழ்வை நிறைவு செய்தார்,

அல் ஹம்து லில்லாஹ்புகைப்படங்கள் விரைவில்

செய்தி : மண்ணடிகாகா

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s