Abu Adhil

துபாய் உலகின் உயரமான கட்டடத்திலிருந்து குதித்து தமிழர் தற்கொலை!

உலகின் மிக உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து வாலிபர் மரணம்: தமிழ்நாட்டை சார்ந்தவர்

உலகின் மிகburjkhalifa.jpg உயரமான கட்டிடமாக விளங்குவது துபாய் நாட்டிலுள்ள புர்ஜ் கலிபா என்ற கட்டிடமாகும். கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட இந்த கட்டிடம் 160 மாடிகளை கொண்டதாகும். இதில் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்லாது தங்கும் விடுதிகளும் உள்ளன.

இந்நிலையில், நேற்று இக்கட்டிடத்தின் 147-வது மாடியிலிருந்து 30-35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் விழுந்தார். அவரது உடல் 108-வது மாடியில் வந்து விழுந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அவ்விடத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்து போன வாலிபர் பற்றிய விபரம் தெரியவந்தது.

பெயர் அதிராமன் கண்ணன் (வயது 38) என்றும், இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரது மரணத்தில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அவரது நிறுவனம் அவருக்கு விடுமுறை அளிக்காததால், அந்த நிறுவனத்தின் அலுவலகம் உள்ள 147-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், தவறி விழுந்ததில் மரணமடைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. தீவிர விசாரணைக்கு பின்னரே உறுதியான தகவல் தெரியவரும்
News : Inneram.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s