Abu Adhil

ஆர்.எஸ்.எஸ் யின் கள்ள காதலன்!!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு…

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

ஆர்.எஸ்.எஸ் யின் கள்ள காதலன்!!

ground.jpg
நம்நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

ஒரு கால் நொண்டி ரெண்டு கால் நொண்டியை பார்த்து நொண்டி என்றானாம்.

இது எப்படி இருக்கு? இந்த கூத்துதான் இப்ப நம்ம நாட்டில் நடந்துகொண்டிருகிறது.

ஏற்கனவே ஒரு காந்தியவாதி ஊழலுக்கு எதிராக களத்திற்கு வந்தார் அவரை பற்றிய வண்டவாளங்கள் வெளிவந்த உடன் ஹிந்து பாசிஸ்டுகள் தங்களது நேரடி ஆதரவாளரை களத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

இவராவது நல்லவராக இருப்பாரா? என்று எண்ணு வதற்கு முன்பே இதோ வெளி வந்து வந்து விட்டது இந்த பாவப்பட்ட கோடீஸ்வரனின் ஜகஜால வண்டவாளங்கள் இதோ!

இந்த மகான் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவுரங்காபாத் கிராமத்தில் பதஞ்சலி என்ற யோஹபீடம் நிறுவுவதற்கு உள்ள நான்கு ஹேக்டர் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை கள்ளத்தனமாக பதிவு செய்து கையகப்படுத்தியுள்ளார்.

இது சம்மந்தமான ஆவணங்களை உத்தரகாண்ட் மாநில சப் டிவிசியன் மஜிஸ்ட்ரேட் கண்டு பிடித்துள்ளது. இதன் மூலம் இவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு சொத்துக்களை அபகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சாமியாருடைய திருட்டுத்தனத்திற்கு எதிராக முன்னால் பஞ்சாயத் தலைவர் எஸ். ஷவ்ஹானும், இப்போதைய தலைவர் சரண் சிங்கும் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

இதனால் ரூர்கி மாவட்ட மஜிஸ்ட்ரேட் ஹர்பீர் சிங் அவர்கள் நேரில் சென்று பத்திரங்களில் உள்ள கைரேகை, மற்றும் பட்டா, போன்ற ரெவேன்யு ஆவணகளை சோதித்து பார்த்து இவர் செய்துள்ள கள்ளத்தனத்தை நிருபித்துள்ளார்.
fan.jpg

இந்த நிலத்தோடு அல்லாமல் மேலும் அதிகமான ஹேக்டர் அரசுக்கு சொந்தமான நிலங்களை இவர் களவாடி உள்ளார் என்று சப் டிவிசன் மஜிஸ்ட்ரேட் அவர்கள் கலக்டருக்கு புகார் செய்துள்ளார்.

இந்த பிரச்னை பெரிய விவாதமாக ஆனவுடன் இப்போது ஊழலுக்கு எதிராக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொண்டு வந்து இருக்கும் இரண்டாவது இறக்குமதியான இந்த பண்டார, பரதேசி ராம்தேவ்தான் கைவசப்படுத்திய நிலத்திற்கு பதிலாக விவசாயிகளுக்கு வேறு நிலம் கொடுக்கிறேன் என்று கலக்டருக்கு பதில் அனுப்பி உள்ளார்.

இவருடைய நிறுவனம் ஹரித்துவாரில் மொத்தமாக ஆயிரம் ஏக்கரில் உள்ளது. இந்த சாமியார்களுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? ஏற்கனவே காந்தியவாதி கள்ள பணத்திற்கு எதிராக நடத்தின நாடகத்திற்கு ஐம்பது லட்ச ரூபாய் செலவானது.

இப்போது இந்த பாவப்பட்ட கோடீஸ்வரன் நடத்தும் நாடகத்திற்கு பதினெட்டு கோடி செலவு செய்வதாக வெளிபடையாக சொல்கிறார்கள் என்றால் உண்மை நிலை என்னவாக இருக்கும்.

537560b0-5a6d-43d1-92cb-2a3935cf16e9_S_secvpf.gif

இவர் நடத்தும் இந்த நாடக மைதானத்தில் ஆயிரத்தி ஐநூறு ஏர் கூலர். முந்நூறு கழிப்பறைகள், நானூறு டிஜிட்டல் ஸ்க்ரீன், நானூறு படுக்கைகள், நூறு அம்புலன்சுகள் என்று பலகோடி ரூபாய்கள் செலவு செய்கிறார்கள்.

மேலும், உடனுக்குடன் செய்திகளை தெரிவிக்க பலகோடிகள் கோடிகள் செலவில் தனியாக டவர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நாடக மைதானம் முழுவதும் ஹிந்து பாசிடுகளால் நிரம்பி வழிவதில் இருந்தே தெரிகிறது இவரை ஆட்டுவிப்பது ஆர்.எஸ்.எஸ் தான் தெள்ளத் தெளிவாகிறது. நல்லவர்கள் ஒரு ஆள் கூட இந்த பாசிஸ்ட்களின் கூடாரத்தில் இல்லை.

– அஸ்கர் மாதவலாயம். [ஷார்ஜா – அமீரகம் ]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s