Abu Adhil

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது – அதிரை ஏ.எம்.பாரூக்

UNO.jpg

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

ஒரு வழியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்நாட்டு ஊடகங்களைத் தவிற வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இதற்காக மத்திய அரசை கடுமையாக சாடி எழுதி இருந்தன. கலைஞர் கருனாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து சாதித்து விட்டதாகவும் சாடி இருந்தன.

இனிவரும் காலங்களிலாவது ராணுவம் அப்பாவி மக்கள் மீது இது போன்று வரம்பு மீறுவது ஓரளவு குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம் ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் அமையாது ஐ.நா.வில் இயற்றப்படும் மனித உரிமை சம்மந்தமான சட்டங்கள் நெறிமுறைகள் அனைத்தும் பிற நாட்டவர்களுக்கு மட்டும் தான் அமெரிக்காவுக்கு மட்டும் கிடையாது இல்லை என்றால் இலங்கையை விடாது விரட்டிய அமெரிக்கா தனது ராணுவம் ஈராக்கின் அப்பாவி மக்கள் மீது வரம்பு மீறி அட்டூழியம் புரிந்ததற்காக கடும் நடிவடிக்கையை மேற்கொண்டிருக்கும் அல்லது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலாவது அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிருத்தி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கும் அதற்கு அபுகிரைப் சிறைச்சாலை சித்ரவதை ஒன்றுப்போதுமானதாகும் மீதமுள்ளவைகள் இந்த கட்டுரையில் பட்டியல் இட முடியாத அளவு நீளமானதாகும்)

கண்களை கசியச் செய்யும் நிகழ்வுகள்.
இலங்கையின் அப்பாவி மக்கள் (நிராயுதபாணிகள்) மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்கள் காண சகிக்காதது.

அப்பாவி தமிழர்களின் மீதான இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தைப் பார்த்த யாருடைய கண்களும் கசியாமல் இருக்காது அதனால் தான் அதைப்பார்க்க சகிக்காமல் கலைஞர் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி 27-4-2009 அன்று கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் இரண்டு கூலர்களை வைத்துக்கொண்டு கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்கி விட்டார்.

இன்று கலைஞர் அவர்கள் இலங்கை தமிழருக்கு மறுவாழ்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அறிவித்துள்ளார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் ஆனால் அவர்கள் கண்டு கொள்ள வில்லை என்றும் கூறுகிறார் (அரசியல் கூத்து).

மீண்டும் புலிகள் வரள மாட்டார்களா ?
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி இந்த ஆதரவு தீர்மானத்தால் மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.சபையில் எழுப்பியக் கேள்வி ஓட்டளித்த நாடுகளை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

காரணம் போருக்கு முன்னும் பின்னும் புலிகளில் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகள் போல் தப்பிச் சென்று விட்டனர் இவ்வாறு சென்றவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல asies பத்திரிகை கடந்த வருடம் தகவல் வெளியிட்டிருந்தது.

கடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியதும் நினைவிருக்கலாம்.

இவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியதாகக் காரணம் கூறியது.

இது ஒரு புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக 2011 அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.

அதனால் இலங்கைக்கான ஐ.நா தூதரின் கேள்வி சிந்திக்கக் கூடியது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இது விஷயமாக சிந்தித்து இலங்கை அரசுக்கு உதவ முன் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் செல்லாக் காசான புலிகள்
தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் நடத்திய கோரத் தாண்டவத்தால் தமிழ்நாட்டு மக்கள் அப்பொழுதே அவர்களை வெறுத்து விட்டனர் (ஜெயலலிதா,சோ உட்பட).

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களும் கூட புலிகளின் கொடூர குணத்தை அறிந்து அவர்களை விட்டு விலகியே இருந்தனர் ஆனாலும் இலங்கை ராணுவத்தின் நெருக்குதலை அறிந்த புலிகள் இந்த தடவை ராணுவம் நம்மை சும்மா விடாது என்பதை அறிந்து பல பகுதிகளிலிருந்தும் மக்களை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று தங்களுக்கு கேடயமாக்கினர். அப்பாவி தமிழர்கள் அதிகமாக கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

புலிகள் போரில் ஒடுக்கப்படுவதற்கு முன்னரே உலகம் முழுவதும் புலிகளுக்கான ஆதரவு குரல் ஒய்ந்து விட்டது இந்தியாவில் மட்டும் பிரபாகரனை இரகசியமாகச் சென்று சந்தித்து வந்த வை.கோ போன்றவர்களினால் அவ்வப்பொழுது ஒலித்துக் கொண்டிருந்தது இதில் புதிதாக சீமான் இணைக்கப்பட்டார்.

இதற்கெல்லாம் வெளிநாட்டில் வாழக்கூடிய புலிகள் ஆதரவு அமைப்பினர் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கனடாவில் உள்ள கர்நாடக தமிழர் பேரவை அமைப்பினர் இந்தியா ஓட்டளித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் இலங்கை மக்களுக்கான மறுவாழ்வு கிடைக்கும் வரை இந்தியாவில் போராட்டத்தை கடந்த காலத்தைப் போலவே வீரியப்டுத்துங்கள் என்று அறிவித்து உள்ளது.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.வில் கேள்வி எழுப்பியது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

கொலைவெறியும், இரத்த தாகமும்.

புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,

1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று கிராமத்தில் 40 முஸ்லீம்கள் கைகள் பிணைத்து கட்டப்பட்டு தலையில் சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 2ம் தேதி அதே பாணியில் மஜீத் புரத்தில் 15 முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 3ம் தேதி காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லீம்களை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு வீழத்தியவர்கள்.

தொடர்நது இடைவிடாமல் மூன்று நாட்கள் கொலைவெறி புலிகளால் நடத்தப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மீதான வெறியாட்டததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

1985ல் தொடங்கி இலங்கை ராணுவத்தினரின் கிடிக்கிப் படிக்குள் புலிகள் சிக்கும் வரை அவர்களால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
ltte-kattankudi-muslim-mosque-massare-122.jpg

1987ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி யாழ்பானத்திற்குள் நுழைந்து முஸ்லீம்களுக்கு 2 மணிநேரம் மட்டும் கால அவகாசம் கொடுத்து உடுத்திய ஒருத் துணியுடன் கையில் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேற்றியவர்கள். 1990ல் மன்னார் முஸ்லீம்களை இதே பாணியில் வெளியேற்றியவர்கள்.

Presentation1.jpg

இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த நாட்டவருக்கும் தெரியாமலில்லை, தமிழ்நாட்டு வை.கோ.வுக்கும் தெரியாமலில்லை, சீமானுக்கும் தெரியாமலில்லை. கலைஞருக்கும் தெரியாமலில்லை, ஆனாலும் இனம் இனத்துடன் இணைந்தது.

இவர்களுக்கு உள்ள இன உணர்வும் கூட புலிகளுக்குக் கிடையாது அவர்களிடத்தில் ஊட்டப்பட்டது எல்லாம் கொலைவெறியும், இரத்த தாகமும் தான் அவர்களை எதிர்த்தால் யாராக இருந்தாலும் வேட்டையாடி விடுவார்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து புலிகள் அமைப்பை நிறுவிய எம்.ஜி.ஆர் எதிர்த்திருந்தாலும் கூட சுட்டுத் தள்ள முயற்சி எடுத்திருந்திருப்பார்கள் இவர்களின் குணத்தை அறிந்து பணம் போனாலும் பரவா இல்லை தலை தப்பினால் போதும் என்று எம்.ஜி.ஆர் சும்மா இருந்து விட்டார்.

தமிழீழ விடுதலை எனும் ஒரே சிந்தனையில் செயல்பட்ட மாத்தையா, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று இந்த காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அதனால் இந்த ஆதரவு தீர்மானத்தால் கொலைவெறிப் பிடித்த இந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் வளர மட்டார்கள் என்பதற்கு உலக நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிராக திரட்டிய அமெரிக்கா உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.

இது தான் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் மீண்டும் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.

புலிகள் மீண்டும் வளர விடாமல் தடுப்பதற்கான திட்டத்தை வகுத்து இலங்கை அரசிடம் ஐ.நா. கொடுக்க வில்லை என்றால் மீண்டும் இலங்கை இரத்த பூமியாவதை எத்தனை நூரு அமெரிக்கா தலையிட்டாலும் தடுக்க முடியாது.

4:168,169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழி காட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

– அதிரை ஏ.எம்.பாரூக்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s