Abu Adhil

அதிரையில் கந்தூரி ஊர்வலத்தில் வன்முறை

அதிரையில் கந்தூரி ஊர்வலத்தில் வன்முறை

 

22-05-2012 மாலை காட்டுப்பள்ளி கந்தூரியின்போது மேலத்தெருவைச் சேர்ந்த நால்வரால், நடுத்தெரு 19 ஆவது வார்டு உறுப்பினர் சகோதரி சவ்தாவின் கணவரும் த.மு.மு.க. தொண்டருமான சகோதரர் அஹ்மது ஹாஜா தாக்கப்பட்டார்.
கந்தூரிகள் களையிழக்கத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில், அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாயில்களைக் கடக்கும்போது, தாரை தப்பட்டை டான்ஸு போன்றவை இருக்கக்கூடாது என்று மேலத்தெரு தவ்ஹீதுச் சகோதரர்களால் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, ஆர்.டி.ஓ. முன்னிலையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிரையில் உள்ள பள்ளிகளுக்கு முன்னும் பின்னும் நூறு நூறு மீட்டர்களுக்குள் எவ்விதை ஓசையும் இருக்கக்கூடாது என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவு மேலத்தெரு பாக்கியாத் ஸாலிஹாத் பள்ளியில் கடைபிடிக்கப்பட்டு, கந்தூரி ஊர்வலம் மௌன ஊர்வலமாகச் சென்றது. தக்வாப் பள்ளிக்கு ஊர்வலம் வரும்போது மக்ரிபுத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாயிலில் கடைபிடிக்கப்பட்ட அமைதியை கந்தூரி ஊர்வலத்தினர் தக்வாப் பள்ளி அருகில் கைவிட்டனர்.
மக்ரிபுத் தொழுகை முடிந்து ஸலாம் கொடுக்கும்போது வழக்கமான முழக்கங்களுடன் கந்தூரி ஊர்வலம் கடப்பதைக் கண்ட சகோதரர் அஹ்மது ஹாஜா, ஊர்வலத்தை மேற்பார்வையிட வந்து, தக்வாப்பள்ளிக்குப் பின்புறம் நின்றிருந்த நமதூர் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணனிடம் சென்று புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் அங்கிருந்து அகன்று மேள-தாளக்காரர்களிடம் சென்று பாட்டு-தாளங்களை நிறுத்துமாறு சொல்வதற்காகச் சென்றுவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கந்தூரி போதையினர், சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தக்வாப் பள்ளிக்குப் பின்புறமுள்ளஅவரது வீட்டுச் சந்தை அடுத்த சந்துக்குள் தள்ளிச் சென்று கீழே தள்ளி, அவரது நெஞ்சிலும் இடுப்பிலும் மாறி, மாறி கால்களால் உதைத்தும் கைகளால் தாக்கியும் நையப் புடைத்துள்ளனர்.
சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தாக்கிய கயவர்கள் நான்கு பேர் என்பதால் நிலைகுலைந்து பலத்த காயமடைந்த அவர், தற்போது பட்டுக்கோட்டை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனிப்பட்ட முன்விரோதம் ஏதுமில்லாத இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல், சிலரின் தூண்டுதலால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் ஐயமாகும்.
சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தாக்கிய நால்வரின் பெயர்களைக் குறிப்பிட்டு, நகர த.மு.மு.கவினர் திரளாகச் சென்று, அதிரை நகரக் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அதற்கான சான்றிதழைத் த.மு.மு.கவினருக்கு வழங்கியுள்ளனர். அத்துடன், எஃப் ஐ ஆர் பதிவு செய்து, குற்றவாளிகளை நாளைக்குள் கைது செய்து விசாரிக்கப் போவதாக உறுதியளித்துள்ளனர்.
த.மு.மு.கவின் மாநிலச் செயலாளர் தமீமுன் அன்ஸாரி, டி எஸ் பியிடம் தொலைபேசி வாயிலாக புகார் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நகர த.மு.மு.கவினர் நாளைக் காலை பத்து மணிக்கு அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர்.
குற்ற நிகழ்வு, நகர காவல்துறைக் கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன் ஸ்பாட்டில் இருக்கும்போது நடந்தேறியது என்பதால் குற்றவாளிகள் நிச்சயம் தப்பித்துவிட முடியாது.
கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின்  மானம் காக்கப்படும்.
– அதிரை எக்ஸ்பிரஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s