Abu Adhil

பன்னிரண்டு வயது ஆச்சரியம் லுத்ஃபுல்லாஹ ்!

பன்னிரண்டு வயது ஆச்சரியம் லுத்ஃபுல்லாஹ்!
Share

inShare

lutfullah.jpgகுட்டிப் பையா! என்று எவரும் அழைக்கும்படியான சிறிய உருவம்! அழுத்தம் திருத்தமாக ஆணியடித்தார் போன்று முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பளிச்சென்ற புன்முறுவல்! பன்னிரண்டு வயதுப் புயல் லுத்ஃபுல்லாஹ் காலிகவ் இன்றைய தேதிக்கு உலகத்தையே தன் வசம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

மனிதனுடைய நினைவாற்றல் எத்தனை மகத்தானது என்பது மற்றுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

இறை வசன எண்களை ஒருவர் சொன்ன மாத்திரத்தில், மிகத் துல்லியமாக அந்த எண்களுக்குரிய வசனங்களை ஓத ஆரம்பிக்கிறார் லுத்ஃபுல்லாஹ்! அடடே! எனும் புருவ உயர்த்தல் வியப்பு மாறாமல் கேள்வியைத் திருப்பிப் போட்டு கேட்போமே என்று ஏதேனும் சில வசனங்களைச் சொன்னால், அவ் வசனங்களுக்குரிய எண்களையும் சடாரெனக் குறிப்பிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். கொசுறாக, அந்த இறை வசனங்கள் இறங்கிய வரலாறு, இடம் பெற்றுள்ள பக்க எண், துவங்கும் இடம், முடிவடையும் இடம் என்பதை எல்லாம் பிசிறு இன்றிச் சொல்லி முடிக்கிறார்.

Dim lights Embed

16வது ஆண்டாக‌ துபையில் தற்போது நடைபெற்று வரும் ச‌ர்வ‌தேச‌த் திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியையொட்டி ச‌ர்வதேச‌ அள‌விலான‌ திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. கலந்து கொண்ட பார்வையாளர்கள், நடுவர்கள் உட்பட ஒளிபரப்பினை கண்டு களித்து வரும் சர்வதேச பார்வையாளர்களையும் ஒரு சேர வியப்பில் ஆழ்த்தியிருக்கும் லுத்ஃபுல்லாஹ், தஜகிஸ்தானின் பிரபலமான இமாம் சையது முகர்ரம் அப்துல் காதிர் அவர்களின் மகன்.

இவரது சிறப்பான இம்மை மற்றும் மறுமை வாழ்க்கைக்காக சத்தியமார்க்கம்.காம் குழு தமது வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s