Abu Adhil

திருப்பூண்டி பேருந்து விபத்து – எம்.தமிமு ன் அன்சாரி நேரில் ஆறுதல்

திருப்பூண்டி பேருந்து விபத்து – எம்.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்

நாகை மாவட்டம் திருப்பூண்டியைச் சேர்ந்த பெண்கள், ஒரு தனியார் பேருந்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஆலியூர் சென்றிருந்தனர்.
திருமணம் முடிந்து திரும்பிய வழியில் காமேஸ்வரம் என்ற ஊர் வழியாக வந்துகொண்டிருந்தபோது பேருந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது குடி போதையுடன் டிரைவர் வண்டி ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உடனடியாக டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். செய்தியை கேள்விப்பட்ட திருப்பூண்டி தமுமுகவினர் ஆம்புலன்சுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாவட்ட கலெக்டரும், அமைச்சர் ஜெயபாலும் அங்கு உடனடியாக சென்றனர்.

தமுமுக மாவட்டத் தலைவர் ஜபருல்லா, மமக மாவட்டச் செயலாளர் முபாரக், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் ஒ.எஸ்.இப்ராஹிம், சாகுல் மற்றும் நாகை நகர நிர்வாகிகள் ஆகியோரும் உடன் இணைந்து சென்றனர்.
மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததனால் ஆபத்தில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். செய்தியை கேள்விப் பட்டவுடன் டெல்டா மாவட்டங்களில் பயணத்தில் இருந்த மமக பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி நாகை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
2012-11-11
2012-11-11
2012-11-11

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s