Abu Adhil

கசாபுக்கு தூக்கு; மற்றவர்களுக்கு?

கசாபுக்கு தூக்கு; மற்றவர்களுக்கு?

எம். தமிமுன் அன்சாரி (ஆசிரியர் மக்கள் உரிமை வார இதழ்)

மும்பையில் 2008 நவம்பர் மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குத-ல் 166 பேர் கொல்லப்பட்டனர். அதில் காவி தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய தீவிரவாத தடுப்பு படையின் அதிகாரி "தியாகி’ ஹேமந்த் கர்கரேயை இத்தாக்குத-ன் பரபரப்புக்கு மத்தியில் "காவி ஆதரவு உளவாளிகள்’ சுட்டுக் கொன்றதும் அப்போதுதான்! வழக்கம்போல் பழி தீவிரவாதிகளின் மீது போடப்பட்டு "அபிநவ் பாரத்’தின் எண்ண ங்கள் நிறைவேற்றப்பட்டன.
மும்பையை நிலைகுலைய வைத்த அந்நிய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிரோடு பிடிபட்டான். அவனது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதால் இன்று புனே சிறையில் அவசர அவசரமாக கசாப் தூக்கி-டப்பட்டிருக்கிறான்.
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் மொத்தப் பிரச்சனைகளும் பின்னுக்குத் தளளப்பட்டு இதுதான் பேசப்படும். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் அமளி மற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகியவற்றி-ருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை மாற்றியிருக்கிறது. இதுதான் அஜ்மல் கசாப் அவசர அவசரமாக தூக்கி-டப்படுவதற்குப் பின்னால் இருக்கும் அரசியல்.
எதிர்பார்த்தபடி பாஜக வரவேற்றிருக்கிறது. மேலும், பால்தாக்கரேயின் மரணத்தால் அவர்களின் வட்டாரத்தின் மீது உருவாகி இருக்கும் அனுதாப அலையையும் தகர்த்திருக்கிறது காங்கிரஸ். இது சிவசேனா, பாஜகவுக்குப் புரியவில்லை. காங்கிரசின் காய் நகர்த்தலுக்கு ஐ.பி. என்ற உளவு அமைப்பின் மூளை உதவியிருக்கிறது.
அதிரடியாய், ரகசியமாய் அஜ்மல் கசாபை தூக்கி-ட்டது போல் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரையோ, அல்லது அப்பாவி அப்சல் குருவையோ இப்படி செய்துவிட முடியாது என்பது அதிகார வர்க்கத்திற்குத் தெரியும். தமிழ்நாடும் காஷ்மீரும் இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதும் புரியும். அது ஒருபுறம் இருக்கட்டும்.
நீதிமன்றங்களில் அரசியல் குறுக்கீடும் லஞ்சமும் தலைவிரித்தாடும் இந்தியா போன்ற நாடுகளில் மரண தண்டனை முறையை ஏற்கலாமா? என்ற வாதம் ஒருபுறம் வலுவடைந்து வரும் நிலையில், சில விவாதங்கள் எழுந்துள்ளன.
அஜ்மல் கசாப் யார்? அவன் பாகிஸ்தான் கைக்கூ-யா? அல்லது இந்திய உளவுத்துறையின் தயாரிப்பா? இரண்டாவது கேள்விக்கு அர்த்தம் இருக்கிறது. ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அஜ்மல் கசாப் கைதியாக இருந்தான். அப்போது இந்திய உளவுத்துறைக்கும் அவனுக்கும் இடையிலே நெருக்கம் ஏற்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும். அஜ்மலை இந்திய உளவுத்துறை ஏன் பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்விக்கு விடை விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.
இதுபோன்ற பல கேள்விகள் அவனது மரண தண்டனையோடு முடிந்துவிட்டது.
அஜ்மல் கசாப் அப்பாவி மக்களைக் கொன்ற கொலைகாரன். அவன் ஒரு குற்றவாளி. ஆனால் அவன் மட்டுமே குற்றவாளி அல்ல. அவனுக்குப் பின்னால் உள்ள ரகசியங்கள் ஏன் மூடி மறைக்கப்பட்டன?
சரி, 166 பேரைக் கொன்ற அஜ்மல் கசாபுக்கு தூக்கு! ஒரிஸ்ஸாவில் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களையும், அவரது இரு மகன்களையும் உயிரோடு தீவைத்துக் கொளுத்திய பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தாராசிங்கிற்கு என்ன வகை தண்டனை?
பசு மாட்டின் தோலை உரித்ததற்காக ஹரியானாவில் 6 த-த்துகளைக் கொன்ற உயர்சாதி தீவிரவாதிகளுக்கு என்ன வகை தண்டனை?
மண்டல் கமிஷனுக்கு எதிராகப் போராடிய உயர் சாதியினர் பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் மீது மண்ணெண்ணெயைக் கொட்டி எரித்துவிட்டு அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீக்குளித்துள்ளார்கள் என்று பரப்புரை செய்த பயங்கரவாதிகளுக்கு என்ன வகை தண்டனை?
பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு, மும்பையில் 2 ஆயிரம் இந்தியர்களைக் கொன்றவர்களுக்கு, குஜராத்தில் 3 ஆயிரம் இந்தியர்களைக் கொன்றவர்களுக்கு, இந்திரா காந்தியின் கொலைக்கு பதிலடியாக 3 ஆயிரம் சீக்கியர்களைக் கொன்றவர்களுக்கு என இதுபோன்ற பயங்கரவாதங்களைச் செய்தவர்களுக்கு என்ன வகை தண்டனைகள் வழங்கப் போகிறார்கள் நீதிமான்கள்?
பயங்கரவாதத்திற்கு, பயங்கரவாதிகளுக்கு சாதி மதம் இனம் மொழி என வரையறை இல்லை. அவர்கள் குற்றவாளிகளே. பயங்கரவாதத்தை உறுதியாக, உளப்பூர்வமாக எதிர்க்கிறோம். அதுபோல் ஆளுக்கொரு நீதி என்பதையும் எதிர்க்கிறோம்.

– எம். தமிமுன் அன்சாரி (ஆசிரியர் மக்கள் உரிமை வார இதழ்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s