Abu Adhil

தொண்டியில் தமுமுக சார்பில் கல்வி மற்றும ் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி

தொண்டியில் தமுமுக சார்பில் கல்வி
மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி

திருவாடானை தாலுகா தொண்டியில் தமுமுக சார்பில் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

தொண்டியில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் மனித நேய மக்கள் கட்சியும் இணைந்து கல்வி மற்றும் மருத்துவ உதவி வழங்கும் விழா மமக மாநில அமைப்பு செயலாளர் ஜெயினுலாபுதீன் தலைமையிலும் தொண்டி பேருராட்சி தலைவர் சேகுநைனா தமுமுக மாவட்டத் தலைவர் சாதிக்பாட்சா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கல்வி நிதி உதவியாக ஏழை மாணவர்கள் 2 நபருக்கு ரூ.10ஆயிரமும், மருத்துவ நிதி உதவி தொகையாக 4 நபர்களுக்கு ரூ.20ஆயிரமும், பொருளாதர நிதி உதவியாக ரூ.5ஆயிரமும் வழங்கபட்டன. இந்த விழாவில் மமக ஒன்றியச் செயலாளர் அஜீஸ் ரகுமான், தமுமுக ஒன்றியச் செயலாளர் அக்பர் சுல்தான், மாணவர் இந்தியாகலந்தர் ஆசிக் மற்றும் நகர கழக நிர்வாகிகல் கலந்து கொண்டனர். நகர் கழக செயலாளர் முகம்மது நன்றி கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s