Abu Adhil

இஸ்லாம்தான் இந்தியாவுக்கு இருக்கும் இறு தி வாய்ப்பா ?

தொடரும் பாலியல் வக்கிரங்கள் – இஸ்லாம்தான் இந்தியாவுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பா ?

பெண்களுக்கு எதிரான இழி செயல்கள் இந்தியாவில் நடப்பது ஒன்றும் புதிதல்ல.. பல இழி செயல்கள் கவனத்துக்கே வருவதில்லை. டில்லி நடந்த கேவலமான செயல் நம்முடைய உண்மையான அவலட்சணமான முகத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

பண்பாடு, ஆன்மீகம், மனித உரிமை, பெண் உரிமை என என்னதான் பேசித்திருந்தாலும் , இந்தியா என்பது நாகரிக வளர்ச்சி அடையாத காட்டுமிராண்டி நாடு என்பதில் இனி யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கப்போவதில்லை.

சரி… நாம் காட்டுமிராண்டிகள் தான்… இதற்கு விடிவே இல்லையா… உலகின் கேவலமான ஒரு நாடாகவே நாம் இருக்கப்போகிறோமோ..

இது போன்ற நிகழ்வுகளில் மக்களின் எதிர் வினை என்பதை பார்த்தால் போதும்.,… அந்த நாட்டு மக்களின் அருகதை தெரிந்து விடும்.

நம் மக்கள் கருத்து கீழ்கண்ட இருவகைகளில் அடங்கி விடுகிறது

• நடந்தது பெரிய குற்றம்தான், ஆனால் குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியாது.. அவர்கள் குற்றவாளிகள், தவறு செய்கிறார்கள்,, நீதித்துறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டால் , நீதித்துறைக்கும் குற்றவாளிகளுக்கும் வேறுபாடு தெரியாமல் போய் விடும். எனவே குற்றவாளிகளுக்கு கவுன்சலிங் கொடுத்து அவர்களை திருத்துவதே நாம் செய்ய வேண்டியது.

• பெண்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என கவலைப்படுவது பெண்ணுரிமைக்கு எதிரானது. நள்ளிரவில் பெண்கள் நகை அணிந்து வெளியே சென்றாலும் , அவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது.

எனவே சமூக விரோதிகளுக்கு அறிவுரை சொல்லி தவறு செய்வதை தடுக்க வேண்டுமே தவிர , பெண்களுக்கு அறிவுரை கூறுவது ஆணாதிக்கம்…..

பாம்பையும் கொல்லக்கூடாது. குச்சியும் உடைந்து விடக்கூடாது , ஆனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் கோமாளித்தனத்தை இந்த நேரத்தில் ரசிக்க முடியவில்லை.

நான் ஒரு முறை நள்ளிரவில் கோயம்பேட்டில் இறங்கினேன். ரோகிணி திரையரங்கம் அருகே செல்ல வேண்டி இருந்தது. பேருந்து எதுவும் இல்லை .நடந்து செல்ல தீர்மானித்தேன்.

பேருந்து செல்லும் சாலையில் சென்றால் நேரமாகும் என்பதால் , கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியிருக்கும் குறுக்கு வழியாக செல்ல தீர்மானித்து , நடக்க தொடங்கினேன்.

ஒரு முதியவர் என்னை தடுத்து நிறுத்தினார். “ இந்த நேரத்தில் இந்த வழியாக போக வேண்டாம் . ஆபத்தான் பகுதி. நேற்றுக் கூட வழிப்பறி நடந்தது “ என உரிமையுடன் அறிவுரை சொன்னார்.

என்னிடம் வழிப்பறி செய்ய எதுவும் இல்லை என்றாலும், அந்த முதியவரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து , அந்த வழியை தவிர்த்தேன்.

என் வீரத்துக்கு வேலை இல்லாமல் செய்து விட்டாரே என அவர் மீது கோபம் ஏதும் இல்லை. யாரென்றே தெரியாத ஒருவர் , இனி ஒருபோதும் சந்திக்க வாய்ப்பற்ற ஒருவர் காட்டிய அக்கறை மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.

ஆனால் மாடர்ன் பெண்கள் அப்படி இருப்பதில்லை. பெண்கள்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும், என்ன ஆடை அணிவது , எந்த நேரத்தில் வெளியே செல்வது என்பதற்கு எல்லாம் வரைமுறைகள் அவர்களுக்கு கண்டிப்பாக உண்டு.

ஆனால் நம்முடைய கேவலமான இந்த நாடு இந்த லட்சிய நிலைக்கு தயாராக இல்லை. மன நோயாளிகள் நிரம்பிய இந்த நாட்டில் பெண்கள் மிக மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

பாலியல் கல்வி அளித்தோ , நீதி போதனை கொடுத்தோ நம் ஊரை திருத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதுவரை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நம் கையாலாகாத அமைப்பால் முடியாது என்பது நிதர்சனமான உண்மை. எனவே அவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அப்படி ஒரு லட்சிய நாடாக உருவாகும் வரை கடும் தண்டனைகள் அவசியம் . அப்போதுதான் கொஞ்சமாவது குற்றங்களை குறைக்க முடியும்.

தண்டனை கொடுப்பது மனித உரிமைக்கு எதிரானது. எச்சரிக்கையாக இருக்க சொல்வது பெண் உரிமைக்கு எதிரானது.

எனவே இப்போது இருக்கும் நிலை மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.

ஏதாவது சம்பவங்கள் நடக்கையில் ஆவேசமாக கருத்து சொல்லி விட்டு , பின் மறப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இது மாறவே மாறாது. கடைசி வரை நாம் கேவலமான நாடாகவே இருக்க போகிறோமா..

இந்த நிலை மாற , ஒரே ஒரு வாய்ப்பு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

என்றாவது ஒரு நாள் இந்தியா இஸ்லாமிய பாதையில் நடக்க தொடங்கினால் , அன்று இந்த நிலை மாறக்கூடும்.

இஸ்லாமிய நாடாக மாற வேண்டும் என்பதல்ல நான் சொல்வது. இஸ்லாமிய வழிமுறைகள், வழிமுறையாக ஏற்கப்பட வேண்டும்.

நம் ஆட்கள் இஸ்லாமிய முறைகள் என்றால் பிற்போக்கு என்றே நினைப்பார்கள்.

இந்தியா என்னவோ, நாகரிக வளர்ச்சி அடைந்த நாடு போலவும் , மத நூல் அடிப்படையில் ஒரு நாடு செயல்படுவது பிற்போக்கு என்றும் நினைப்பார்கள்.

உண்மையில், இப்போதுதான் நாம் பிற்போக்குவாதிகளாக, காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம்.

இஸ்லாம் சொல்லும் கருத்துகளை பாருங்கள்.

• நபியே நீர் முஃமினான ஆண்களுக்குக் கூறு வீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ் தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிகவும் சிறந்த தாகும். நிச்சயமாக அல்லாஹுத்த ஆலா அவர்கள் செய்பவற்றை நன்கறிந்த வனாக இருக்கின்றான்.

• நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.

• அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல

ஆண்களும் பெண்களும் கட்டுபாடுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது. இதை அறிவுரையாக இல்லாமல், மத கோட்பாடாக இல்லாமல், ஒரு நாட்டின் வழிமுறையாக மாற்றினால், இதை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை என்ற நிலையை கொண்டு வந்தால் , குறைந்தது இன்னும் நூறு ஆண்டுகளிலாவது நாமும் மற்றவர்களை போல நாகரிகம் அடைந்த மக்களாக மாற முடியும் என்றே தோன்றுகிறது.

http://www.pichaikaaran.com/2012/12/blog-post_23.html

Posted by அதிரை முஜீப்

__._,_.___

Reply to sender <a href="mailto:K-Tic-group Start a New Topic Messages in this topic (1)

Recent Activity:

Visit Your Group

*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***

Switch to: Text-Only, <a href="mailto:K-Tic-group-digest • Unsubscribe • Terms of Use • <a href="mailto:ygroupsnotifications

.

__,_._,___

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s