Abu Adhil

வெளிநாடுவாழ் இந்தியர்களின் வயிற்றில் அட ித்த பட்ஜெட்………!!

வெளிநாடுவாழ் இந்தியர்களின் வயிற்றில் அடித்த பட்ஜெட்………!!

அரசின் காதில் விழுமா ?

தாக்கல் செய்யப்பட்ட 2013-14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தங்கம் இறக்குமதிக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியர்களின் தங்கத்தின் மீதான மோகம் காரணமாக ஆபரண தங்க நகைகளில் முதலீடு செய்யப்படுவதால் அந்நியச் செலாவணி
கையிருப்பு குறையும் என்பதால் தங்க இறக்குமதிக்கு வரிவிதிக்கப்படுவதாக நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தெரிவித்திருப்பது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது.

தங்கத்தில் முதலீடு செய்வதால் அரசுக்கு எவ்வகையிலும் லாபம் இல்லை என்றும், அதற்காகச் செலவிடப்படுவதால் அரசுக்குக் கூடுதல் சுமை ஏற்படுகிறது என்பதை ஏற்க முடியாது. ஆண்டுக்கணக்கில் வெளிநாட்டில் வாழ்க்கையையும் இளமையும் அடகு வைத்து, செலவுகள் போக எஞ்சிய பணத்தில் கொஞ்சம் நகை வாங்கிச் செல்வதே சாமான்யர்கள் பலரின் எதார்த்த நிலையாக உள்ளது. அவ்வாறு வாங்கி வரும் நகைகளை மகளுக்கோ அன்பு மனைவிக்கோ அணிவித்து மகிழும் கோடிக்கணக்கானோரின் உணர்வுகளை நிதியமைச்சர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

உள்நாட்டில் நகைக்கடை முதலாளிகள், இந்தியர்களின் நகைத் தேவைகளைக் கருத்தில்கொண்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நகைக்கு வேண்டுமானால் வரிவிதிப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் கஷ்ட ஜீவனம் நடத்தி நாடு திரும்பும் பாவப்பட்ட இந்தியர்களின் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் தங்கம் கொண்டுவருவதற்கு வரிவிதித்திருப்பது கண்டனத்திற்குரியது.

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் நகைக்கு ரூ.50000 வரை ஆண்களுக்கும் ரூ.1,00,000 வரை பெண்களுக்கும் வரி விலக்கு என்பதும் ஏமாற்றுவேலை. ஏனெனில் ரூ.50000 இல் இரண்டு பவுன் நகை மட்டுமே வாங்க முடியும். அதாவது ஒரு மோதிரத்தின் விலை. மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இந்த வரிவிலக்கு அவர்களுக்கும் பயன்படப்போவதில்லை.

பாஜக தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா சொன்னதுபோல், நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எங்களை வைத்து விளையாடியுள்ளதாகவே இந்தப் பொதுநிதி நிலை அறிக்கை கருதப்படுகிறது.

கடந்தமுறை பிரணாப் முகர்ஜி இதே அறிவிப்பைக் கொண்டு வந்தபோது நகைக்கடை உரிமையாளர்கள் மூன்று நாள் கடையடைப்பு நடத்தியதால் பிறகு கிடப்பில் போடப்பட்டு தற்போது சிதம்பரம் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தலையில் இந்த இடி விழுந்துள்ளது.

தட்டிக்கேட்பதற்கோ உரிமைகளுக்காக போராடுவதற்கோ யாரிமில்லாத வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் தலையில் எதைப்போட்டாலும் தாங்குவர் என்ற எண்ணம் சிதம்பரத்திற்கு இருந்திருக்குமோ என்னமோ!

எதுவானாலும் தங்கம் இறக்குமதிக்கான வரி விதிப்பிலிருந்து, வெளிநாட்டில் வேலை செய்து திரும்புவோரை விடுவிக்க வேண்டுமென்பதே என்னைப்போன்ற சாமானியர்களின் கோரிக்கை!

அரசின் காதில் இது விழுமா ?

நன்றி : அதிரைக்காரன், இந்நேரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s