Abu Adhil

திருத்துறைப்பூண்டி : லாரிகள் மோதலில் கிள ீனர் பலி

திருத்துறைப்பூண்டி : லாரிகள் மோதலில் கிளீனர் பலி

திருச்சி வரகனேரியைச் சேர்ந்த லாரி கிளீனர் சாகுல் (வயது 20). அரியமங்கலம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் செய்யது முஸ்தபா (23). திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் திருச்சியில் இருந்து மினி லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

அதிகாலை சுமார் 5 மணி அளவில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் என்ற இடத்தில் வந்தபோது மினி லாரியும், அந்த வழியாக நாகை மாவட்டம் நரிமணத்தில் இருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியும், நேருக்குநேர் மோதியது. இதில் கிளீனர் சாகுல் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.

லாரி டிரைவர் செய்யது முஸ்தபாவுக்கு இடது கால் துண்டானது. விபத்து நடந்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செய்யது முஸ்தபாவை லாரியிலிருந்து மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல்அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி இறந்து போன கிளீனர் சாகுல் பிணத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேங்கர் லாரியை ஓட்டி வந்த தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த டிரைவர் கார்த்திகேயன் (33) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

News : nakkheeran.in

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s