Abu Adhil

அப்துல் நாசர் மதானி மகள் திருமணம்

அப்துல் நாசர் மதானி மகள் திருமணம்
மன நிறைவுடன் சிறைவாசலில் இருந்து
திருமண வாசலை நோக்கி !

கொல்லம்-10, கேரள மக்கள்ஜனநாயக கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி
மகள் திருமணம் கொல்லம் மாவட்டம் சுரையா திருமண மண்டபத்தில் ஞாயிறு அன்று
காலை 10 மணியளவில் நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,
கேரள சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்களும்
இதில் கலந்து கொண்டார்கள்.

கேரள மக்கள் ஜனநாயக கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி கடந்த 2010 ஆம் ஆண்டில் பெங்களுர் குண்டுவெடிப்பு வழக்கில்
கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளாக பெங்களுர் அக்கிரஹாரா மத்திய சிறையல் அடைக்கப்பட்டுள்ளர்.
சில மாதங்களுக்கு முன்னர் அவர் மகள் சமீராவுக்கு மார்ச் 10 தேதி திருமணம்
நடைபெறுதாக நிச்சயிக்கப்பட்டது. இதற்க்கு இடையில் மதானி வழக்கறிஞர் உஸ்மான் அவர்கள் பெங்களுர் குண்டுவெடிப்பு சிறப்பு
நீதிமன்றத்தில் மதானி திருமணம் நிகழ்ச்சிக்காக ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தை அனுகினார்.
அதே நேரத்தில் மதானி மகள் சமீரா கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களிடம் தனது திருமணத்தில்
தன் தந்தை பங்கேற்ப்பதற்க்கு உதவிடுமாறு மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட அவர்
கர்நாடக முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் அவர்களுக்கு கடிதம் எழுதி அரசின் பரிந்துரையை அனுப்பினார்
அதை ஏற்று கொண்ட தனது பரிந்துரையையும் சேர்த்து நீதிமன்றத்தில் மதானிக்கு
இடைக்கால ஜாமீன் வழங்குவதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

இதன் அடிப்படையில் பெங்களுர் நீதிமன்ற சில கட்டுபாடுகளுடன் இடைக்கால ஜாமீன்
வழங்கியது. இதன்பேரில் கடந்த 9ஆம் தேதி பெங்களுர்யிருந்து காலை 9:15 மணிக்கு
புறப்பட வேண்டிய இன்டிகோ விமானத்தில் பயணம் செய்ய திட்டமிடபட்டிருந்து.
ஆனால் மதானி போலீஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் கை துப்பாக்கிகளை விமானத்தில்
ஏற்ற மத்திய தொழிற்ப்பாதுகாப்பு படை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டது.
அதன் பிறகு மத்திய விமான போக்குவரத்து துறை இணைஅமைச்சர் கே.சி. வேனுகோபால் அவர்கள் தலையிட்டு
அனுமதி வழங்கப்பட்டு பெங்களுரில் இருந்து மாலை 6:30 ஸ்பெஸ் ஜெட் விமானம் முலம் சென்னை மார்கக்மாக இரவு 9:45 மணியளவில்
திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்து அடைந்தார்.அங்கியிருந்து மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்தார்.
அவரை வரவேற்க்கா காத்திருந்தா கட்சி தொண்டர்களுக்கு கையசைத்து அவருக்காக ஏற்பாடு செய்யபட்டிருந்த
சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கொல்லம் அஜீஜிய்யா மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு இரவு வந்தடைந்தார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு. சிகிச்சைக்காக
அனுமதிக்கட்டார்.
மறுநாள் காலை 11:30 மணிக்கு கொல்லம் அஜீஜிய்யா மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு மதியம்12 மணியளவில் கொல்லம் கொடியத்தில் உள்ள சுரையா திருமணமண்டபத்ததை வந்தடைந்தார்.
தனது தலைவரை ஒர் கண் பார்வை பார்ப்பதர்க்காக கத்திருந்தா பல்லாயிரக்காண தொண்டர்களுக்கு மத்தியில் இருந்து அவர் மணமேடை செல்ல சுமார் நேரத்திற்க்கு மேலானது.

பின்னர் குத்பா ஒதப்பட்டு திருமணப்பதிவு நடைபெற்றது. மேலும் திருமணத்திற்க்கு வந்த தொண்டர்களும்,தலைவர்களும் மதானியிடம் கை குலுக்கி சென்றனர்.இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது
இந்த திருமண நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை இனையமைச்சர் னுகோபால் மற்றும் மத்திய தொழிளாளர் நல துறை இனைஅமைச்சர் கொடி குங்நன் சுரேஷ், இந்திய யுனியன் முஸ்லிம் லீக்கின் மக்களவை உறுப்பினர் ஈ.டி.முஹம்மது பஷிர்,
வயநாடு பாரளுமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் உசேன், கேரளா சட்ட மன்ற உறுப்பினர் கே.பி. ஜலீல் மற்றும் ஆளும் கட்சி ,எதிர்கட்சி தலைவர்கள்,ஜமாத்தே இஸ்லாமியின் கேரளர தலைவர் ஆரீப் அலி, ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

kovai thangappa

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s