Abu Adhil

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன ்னு இருக்குமாம்!!!


முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!! முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும்ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் … Continue reading

Abu Adhil

சுவீடனின் வரலாற்றில் முதல்தடவையாக ஒலிபெ ருக்கி மூலம் அதான் சொல்ல அனுமதி.


சுவீடனின் தலைநகர் ஸ்டக்ஹோம் நகரில் முதல்தடவையாக ஒலிபெருக்கிகள் மூலம் அதான் சொல்வதற்கு ஸ்டேக்ஹோமில் அமைந்துள்ள ஓர் நகரசபையினூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டக்ஹோம் நகரில் அமைந்துள்ள புத்கிர்க்கா நகரசபைப் பகுதியானது அதிகமாக வெளிநாட்டு குடியேற்றங்களால் பிரசித்திபெற்ற பிரதேசமாக விளங்குகின்றது.புத்கிர்க்கா இஸ்லாமிய கலாசார நிலையத்தினூடாக ,ஒரு மாதகாலத்திற்கு முன்னர் நகரசபையிடம் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக பிட்ஜா பள்ளிவாசலில் மினாரத் ஒலிபெருக்கிகள் மூலமாக அதான் சொல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.அண்மையில், இக்கோரிக்கையை நகரசபை கவுன்ஸில் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.தொழிநுட்ப வேலைகளை பூர்திசெய்த பின்னர்,மார்ச் மாதம் அளவில் … Continue reading

Abu Adhil

இலங்கையில் உள்ள சிங்கள இனவெறி புத்த பிக் குகள் இந்திய தூரகத்தை முற்றுகையிட்டனர்


இலங்கையில் உள்ள சிங்கள இனவெறி புத்த பிக்குகள் இந்திய தூரகத்தை முற்றுகையிட்டனர் தமிழகத்தில் சிங்கள பிக்கு தாக்கப் பட்டதற்கு இலங்கையில் உள்ள சிங்கள இனவெறி புத்த பிக்குகள் இந்திய தூரகத்தை முற்றுகையிட்டனர் . புத்த பிக்குகளை பாதுகாக்க இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தூதருக்கு விண்ணப்பம் கொடுத்தனர். தமிழர்கள் முறையிட்டால் செவி சாய்க்காத இந்தியா சிங்களவர்கள் முறையிட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. நன்றி: அலை செய்திகள் Continue reading

Abu Adhil

அமெரிக்கா: ஆயுதக்கிடங்கில் விபத்து 7 கடற ்படை வீரர்கள் மரணம்


அமெரிக்கா: ஆயுதக்கிடங்கில் விபத்து 7 கடற்படை வீரர்கள் மரணம் அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ஹர்த்தோர்ன் ராணுவ ஆயுத கிடங்கில் நேற்று அமெரிக்க கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.சுமார் 230 சதுரமைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆயுத கிடங்கில் 60 மி.மி. வெடிகுண்டு ஒன்றை பயிற்சிக்காக கையாண்டபோது எதிர்பாராத விதமாக அந்த குண்டு பயங்கர ஓசையுடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 6 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். ரெனோ ஆஸ்பத்திரியில் ஒரு வீரர் … Continue reading

Abu Adhil

மொஸாத் ஏஜெண்டிற்கு டெல்லியில் ரகசிய இடத் தை ஏற்பாடுச் செய்த ‘ரா’ – அதிர்ச்சி தகவல்!


மொஸாத் ஏஜெண்டிற்கு டெல்லியில் ரகசிய இடத்தை ஏற்பாடுச் செய்த ‘ரா’ – அதிர்ச்சி தகவல்! இந்திய உளவுத்துறையான ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்(RAW) இஸ்ரேலின் ரகசிய உளவு அமைப்பான மொஸாதிற்கு நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் ரகசிய இடத்தை வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலக்கட்டத்தில் இந்தியாவில் இஸ்ரேல் நடத்தும் ரகசிய நடவடிக்கைகளுக்காக மொஸாத், டெல்லியில் ‘ரா’வுக்கு சொந்தமான இரண்டு ப்ளாட்டுக்களை உபயோகித்துள்ளது. ராஜீவ் காந்தியின் அனுமதியோடு இது நடந்ததாக முன்னாள் … Continue reading