Abu Adhil

குவைத் நாட்டில் கண்ணிவெடியில் சிக்கி கண ், கால்களை இழந்த தமிழர்

குவைத் நாட்டில் கண்ணிவெடியில் சிக்கி கண், கால்களை இழந்த தமிழர்

குவைத்: குவைத்தில் பாலைவனத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த ஜெயசங்கர் என்ற 32 வயதான தமிழ் இளைஞர், அங்கே புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில், அறியாது கால் பதிக்க, அந்த வெடி வெடித்துசிதறியதில், உடல் உருக்குலைந்து, தன் இரு கண்களையும் கால்களையும் முற்றிலுமாக இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகில் புகைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயசங்கருக்கு, அலமேலு என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும், வயதான தந்தையும் உள்ளனர். வறுமையில் வாடிய குடும்பத்தின் இன்னல் தீர்க்க ஐந்து வருடங்களுக்கு முன்பாக குவைத் வந்தவருக்கு இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.

தகவல் அறிந்து குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தினர், மருத்துவமனையில் சந்தித்த‌போது, தான் கண், கால்களை இழந்ததைவிட, தான் பெற்ற குழந்தைகளை இனிமேல் கண்ணால் காண முடியாதே என்ற வேதனையே அவரை பெரிதும் பாதித்திருந்தது.
கண்ணிவெடியில் சிக்கியது ஜெயசங்கரின் தவறு அல்ல என்பதையும், அவருக்கு கிடைக்கவேண்டிய சட்ட உதவி மற்றும் இழப்பீட்டு தொகைக்கு ஆவன செய்யவேண்டுமெனவும் குவைத்தில் உள்ள இந்திய தூரதரகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குவைத் தமிழோசை கவிஞர் மன்றம் தன்னால் இயன்ற பொருளாதார உதவியை செய்துவருகிறது. குவைத்தில் செயல்படும் மற்ற தமிழ் அமைப்புகளும் உதவிகள் செய்து வருகின்றன.

முடிந்தவரை இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்…அதே வேளை நீங்களும் உங்களால் முடிந்த உதவியை அவரின் குடும்பத்துக்கு செய்யுங்கள் உறவுகளே..ஜெயசங்கரின் தந்தை மற்றும் மனைவியின் தொலைபேசி எண்: 9715061035.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s